மோடிக்கு தமிழ்ப் பற்று வந்தது எப்படி? பாரிவேந்தர் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
சென்னை: பிரதமர் மோடியின் தமிழ்ப் பற்று பற்றிய சுவாரஸ்யமான சில விசயங்களை பாரிவேந்தர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
வருகின்ற 19 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக பணிகளைத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் களத்தில் பரபரப்பாக பணியாற்றி வருகின்றனர். நாடு முழுவதும் பிரச்சார களம் அனல் வீசி வருகிறது.
பெரம்பலூர் தொகுதியில் இந்த முறை பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், தனது பிரச்சாரத்தில் முழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
பல வகைகளில் வெளியாகும் கருத்துக் கணிப்புகள் பாரிவேந்தர் மீண்டும் வெற்றி பெறுவார் என்றே சொல்கின்றனர். அவரும் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளரைத் தான் பெரிய அளவில் பொருட்படுத்தவில்லை என்றே கூறிவருகிறார்.

பாஜக தேர்தல் அறிக்கை எப்படி?
கூட்டணிக் கட்சியான பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை குறித்துப் பேசிய பாரிவேந்தர், "பாஜகவின் தேர்தல் அறிக்கை சிறப்பாக உள்ளது. அதை நான் பாராட்டுகிறேன். குறிப்பாக வரும் 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. இது நடைமுறைக்குச் சாத்தியமான திட்டம்தான்.
அடுத்து பாஜக கொண்டுவர உள்ள 'ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம் பொருளாதார செலவைக் குறைக்கும். அதைப்போல பொது சிவில் சட்டம். இது நமது நாட்டில் உள்ள வித்தியாசங்களைக் குறைக்கும். அனைவருக்கும் பொதுவான சட்டம் என்பதை உறுதிப்படுத்தும். ஆகவே அதையும் நான் வரவேற்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் ஒன் இந்தியா தளத்திற்குப் பேட்டி அளித்துள்ள பாரிவேந்தர், பிரதமர் தமிழ்ப் பற்று பற்றி அவரிடம் தான் கூறிய விசயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் தனது பேட்டியில், “குஜராத்தில் மோடி பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி காந்திநகர். அந்தத் தொகுதியில் நிறையத் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
ஆகவே மோடி, பிரதமரான பிறகுதான் தமிழர்களைப் பற்றி மோடி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவருக்கு குஜராத் தமிழர்கள் மூலம் தமிழைப் பற்றிய நிறைய விசயங்கள் தெரிந்திருக்கும்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும். அடுத்து 3 மாதங்கள் முன்னதாக டெல்லியில் கூட்டணிக் கட்சித் தலைவர்களை எல்லாம் அழைத்து மோடி சந்தித்தார். அந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, அவரது அருகிலேயே அமரவைத்துக் கொண்டார் மோடி.
மோடிக்கு தமிழ்ப் பற்று வந்தது எப்படி?
கூட்டத்தில் ஒவ்வொருவரையும் பேசச் சொன்னார்கள். அவருடன் நட்டா, ராஜ்நாத்சிங், அமித்ஷா எனப் பலரும் இருந்தனர். என் முறை வந்தபோது என்னைப் பேசச் சொன்னார்கள். அப்போது நான், 'உலகம் முழுக்க பரவி உள்ள தமிழர்களின் சார்பாக உங்களுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஏனென்றால், செங்கோலைக் கொண்டு போய் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வைத்தீர்களே அதற்காகக் காலம் எல்லாம் நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்’ என்றேன்.
மேலும், 'உலக நாடுகளுக்குச் செல்லும்போது எல்லாம் தமிழ் மொழியின் பெருமையைப் பற்றிப் பேசுகிறீர்கள். நான் நினைக்கிறேன், உங்களின் மூதாதையர்கள் தமிழ்நாட்டுடன் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்று. உங்கள் மரபணுவில் தமிழ் கலந்துள்ளது’ என்று சொன்னேன்.
மோடி அதைக் கேட்டுப் புன்னகைத்தார்.
மோடி தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருவது ஏன் என்று கேட்டீர்கள். திராவிட கட்சிகள் தமிழ்நாட்டைக் கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி செய்துவிட்டது. அந்தக் கட்சிகள் தமிழ்மக்களைத் தேசிய பற்று இல்லாதவர்களாக மாற்றி வைத்துள்ளது. கடவுள் பற்று அற்றவர்களாக மாற்றி வைத்துள்ளது.
அதை மாற்ற வேண்டும். மாற்றாக பாஜகவைத் தமிழ்நாட்டில் வளர்த்து எடுக்க வேண்டும் என்று மோடி நினைக்கிறார். இந்தியா முழுவதும் பாஜக வளர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இப்போது வளர்ந்து வருகிறது. அதை ஒரு ஆளும் கட்சியாக மாற்ற வேண்டும் என்பது மோடியின் திட்டம்” என்கிறார்
-
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.!












Click it and Unblock the Notifications