இதுக்கெல்லாம் தனி பிளான் தேவை.. எதிர்க்கட்சிகளுக்கு சாமர்த்தியமாக மோடி வைத்த செக்.. இது உண்மையா?
சென்னை: 2024 லோக்சபா தேர்தல் எக்சிட் போல் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி சாமர்த்தியமாக ஒரு செக் வைத்து உள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக எக்சிட் போல் என்பதால் 2 அமைப்புகளால் எடுக்கப்படும். ஒன்று செய்தி சேனல்கள் . இன்னொன்று இதற்கென்று இருக்கும் தேர்தல் கருத்து கணிப்பு நிறுவனங்கள். சமயங்களில் இரண்டு பேரும் சேர்ந்து கூட கணிப்புகளை வெளியிடுவர்.

சாதாரண கணிப்பு என்பது தேர்தலுக்கு முன் பல இடங்களுக்கு சென்று எடுக்கப்படும் கணிப்பு. அதுவே எக்சிட் போல் என்றால் தேர்தல் சமயத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் வாக்களித்தவர்களை சந்தித்து அவர்களிடம் நீங்கள் வாக்களித்த நபர் யார் என்பதை கேட்டு கணக்கு எடுப்பது.
சில சமயங்களில் வாக்களித்தவர்கள் உண்மை பேசலாம். அல்லது அச்சம் காரணமாக யாருக்கு வாக்களித்தோம் என்று சொல்லாமலும் போகலாம்.
நம்பிக்கை இருக்கிறதா?: எதிர்கட்சிகளோ இந்த கருத்து கணிப்பே பொய்யானது. எக்சிட் போல் எல்லாம் பாஜகவிற்கு ஆதரவாக இருக்கிறது. பாஜக தனி மெஜாரிட்டி பெற வாய்ப்பே இல்லை. முக்கியமாக இந்தியா கூட்டணி 295க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் என்று எதிர்க்கட்சிகள் நம்புகிறேன்.
அப்படி இருக்க கண்டிப்பாக பாஜக கூட்டணி தனியாக மெஜாரிட்டி பெற வாய்ப்பே இல்லை என்று இந்திய கூட்டணி கருதுகிறதாம். முக்கியமாக எதிர்க்கட்சிகளின் ஆட்டத்தை கலைக்க மோடியே மீடியா மூலம் இப்படி பொய்யான கணிப்புகளை வெளியிட்டு உள்ளார். பாஜகவின் அழுத்தம் காரணமாகவே இப்படி எக்சிட் போல் வெளியிடப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் நம்புகிறதாம்.
பாஜக செக்; 2024 லோக் சபா தேர்தல் எக்சிட் போல் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி சாமர்த்தியமாக ஒரு செக் வைத்து உள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இது ஒருவேளை பாஜக அழுத்தத்தின் பெயரில் வெளியான கணிப்பாக இருந்தால்.. மோடி கண்டிப்பாக எதிர்க்கட்சிகளுக்கு செக் வைத்து விட்டார். அதன்படி ஒருவேளை எக்சிட் போல் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக வந்தால் அவர்கள் ஒன்று சேர்ந்துவிடுவார்கள்.
ஒன்றாக சேர்ந்து கூட்டணியை இறுதி செய்வார்கள். பிரதமரை கூட தேர்வு செய்வார்கள். அதுவே இந்திய கூட்டணிக்கு எதிராக எக்சிட் போல் ரிசல்ட் வந்தால் இந்திய கூட்டணி கொஞ்சம் சுணங்கும். ஏன் இந்திய கூட்டணி உடையும் வாய்ப்புகள் கூட உள்ளன. எதிர்க்கட்சிகள் ரிசல்ட் வரும் வரை குழப்பத்தில் இருக்கும்.
தோல்வி அடைய போகிறோம் என்ற அச்சத்தில் கூட்டணியில் குழப்பங்கள் ஏற்படும். ஏன் சில கட்சிகள் இந்திய கூட்டணியை விட்டு வெளியேறும் வாய்ப்புகள் கூட உள்ளன. இதை எல்லாம் மனதில் வைத்தே இந்திய கூட்டணிக்கு எதிராக எக்சிட் போல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக உருவாக்கியது: பாஜக மூலம் இந்த எக்சிட் போல் உருவாக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் நம்புகிறேன். இதன் மூலம் 2024 லோக் சபா தேர்தல் எக்சிட் போல் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி சாமர்த்தியமாக செக் வைத்து உள்ளதாக காங்கிரஸ் வட்டாரம் நம்புகிறதாம்.
ஆனால் இதை முன்கூட்டியே கணித்துதான்.. எக்சிட் போல் முடிவுகளை நம்ப வேண்டாம். அதை நம்பி குழம்ப வேண்டாம். ரிசல்ட் வரும் வரை காத்திருக்கலாம் என்று இந்திய கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளதாம்.
-
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்











Click it and Unblock the Notifications