சரி வண்டியில ஏறுங்க.. பேசிக்கிட்டே போகலாம்.. பாரிசாலன் பேசும்போதே குறுக்கிட்ட போலீஸ்.. ஷாக் சம்பவம்
சென்னை: தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு எதிராக பாரிசாலன் என்பவர் போராட்டம் செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போராட்டத்தில் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு எதிராக அவ்வப்போது தமிழ் தேசிய அமைப்புகள் போராடுவது வழக்கம். தமிழ் தேசியத்திலேயே ஜாதி ரீதியிலான தமிழ் தேசியம், ஜாதி அல்லாத தமிழ் தேசியம் என்ற வகைகள் உள்ளன.

இதில் பெரும்பாலான தமிழ் தேசிய அமைப்புகள் ஜாதி ரீதியிலான தமிழ் தேசியத்தையே பின்பற்றுகின்றன. அதில் முக்கியமான நபர் பாரிசாலன். இல்லுமினாட்டிகள் மூலம் புகழ் பெற்றவர்தான் பாரிசாலன். உலகையே.. கட்டுப்படுத்துவது இல்லுமினாட்டிகள்தான் என்று கூறி வந்தார் இவர்.
13 குடும்பங்கள்தான் இந்த உலகை கட்டுப்படுத்துகிறது. உலகின் முக்கிய முடிவுகளை எடுப்பதே இல்லுமினாட்டிகள்தான். அவர்கள் இல்லாமல் உலகில் ஒரு அணுவும் அசையாது என்று கூறி வந்தார். தமிழ்நாட்டில் இருக்கும் திராவிட கட்சிகள் கூட இல்லுமினாட்டிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் கட்சிகள்தான் என்று கூறியவர் பாரிசாலன்.
போராட்டம்: தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு எதிராக பாரிசாலன் என்பவர் போராட்டம் செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போராட்டத்தில் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை சீரழிகின்றன. தமிழ்நாட்டில் இருந்து திராவிட கட்சிகளை நீக்க வேண்டும். தமிழ் தேசியத்தை உருவாக்க வேண்டும். தமிழ் தேசியத்தை உருவாக்க தனித்தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றார்.
இவர் பேசும் சில கருத்துக்கள் அவ்வப்போது சர்ச்சையாவது வழக்கம். அதோடு இவர் ஜாதிக்கு ஆதரவாக பேசுவதும் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. ஜாதியை ஆதரித்து , ஜாதி ஆணவ கொள்கைகளை ஆதரித்து இவர் பேசும் விஷயங்கள் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்துள்ளன.
போராட்டம்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு எதிராக பாரிசாலன் என்பவர் போராட்டம் செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திராவிடம் ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் இவர் மாநாட்டை நேற்று அறிவித்தார்.
இதில் "பெருந்திரளாக" கிட்டத்தட்ட 40 பேர் மட்டும் கூடி இருந்தனர். நேற்று சென்னையில் இந்த கூட்டம் நடந்தது. தமிழர் குடிகள் கூட்டமைப்பு சார்பாக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இந்த மாநாடு குறித்து பாரிசாலன் செய்துள்ள போஸ்டில், தமிழ்த் தேசியத்தைக் கண்டு தொடை நடுங்கும் திராவிடம்!
பயந்து ஒளிந்தது திராவிடம்...! இவர்கள் ஜனநாயக காவலர்களாம்.. கருத்துச் சுதந்திர காவலர்களாம்...
"திராவிடம் பாசிசம்" என்பதை மீண்டும் நிரூபித்தது! அந்த பயம் இருக்கட்டும்! வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!, என்றெல்லாம் போஸ்ட் செய்துள்ளார். நேற்று பூவிருந்தவல்லியில் திராவிட ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
முன் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்த திரண்டதால் இந்த கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இவரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாரி சாலன் நேற்று திராவிட கட்சிகளை விமர்சனம் செய்து.. ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக.. சமுதாயத்தின் வளர்ச்சிக்காக.. தமிழ் குடிகளின் வளர்ச்சிக்கு எதிராக செயல்படுவதில் திராவிட இயக்கங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்று அவர் பேசிக்கொண்டு இருந்த போது.. போலீசார் குறுக்கிட்டு சரி ஏறுங்க வண்டியில் பேசிக்கிட்டே போகலாம் என்று போலீசார் அவரை அழைத்தனர்.
அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே போலீசார் குறுக்கிட்டு இப்படி சொன்னதால் அங்கே சிரிப்பலை எழுந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications