சென்னை.. அக்கா இறுதி ஊர்வலத்தில் துள்ளி குதித்து குத்தாட்டம் போட்ட தங்கை.. தட்டி தூக்கிய போலீஸ்
சென்னை: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் சமோசா வியாபாரி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக தங்கையே அக்காவை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இதை போலீஸார் கண்டறிந்தது எப்படி என்பது வெளியாகியுள்ளது.
சென்னை மின்சார ரயிலில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வந்தவர் ராஜேஸ்வரி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் பயணம் செய்து சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார்.

அப்போது அதே ரயிலில் இறங்கிய 4 பேர் ராஜேஸ்வரியை வழிமறித்துள்ளனர். அவர்களில் ஒருவர் ராஜேஸ்வரியை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு மீண்டும் அதே ரயிலில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஸ்வரியை அங்கிருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். கொலை தொடர்பாத ரயில்வே போலீஸார் மற்றும் சைதாப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
ஆனாலும் இந்த வழக்கில் துப்பு கிடைக்காமல் இருந்தது. மேலும் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் சிசிடிவி இல்லாததாலும் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ராஜேஸ்வரியிடம் இருந்து பணமோ நகையோ திருடு போகவில்லை. எனவே வந்திருந்தவர்கள் நிச்சயம் ராஜேஸ்வரிக்கு தெரிந்தவர்களாக இருக்கும் என போலீஸார் சந்தேகித்தனர்.
இதையடுத்து போலீஸார் விசாரணையில், ராஜேஸ்வரியின் தங்கை மீது சந்தேகப் பார்வை திரும்பியது. இதையடுத்து இந்த சம்பவத்தில் தங்கை நாகவள்ளிதான் மாஸ்டர் மைண்ட்டாக இருந்துள்ளார். அவருக்கு சக்திவேல் என்பவருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை அறிந்த ராஜேஸ்வரி, தங்கை நாகவள்ளியை கண்டித்தார்.
ராஜேஸ்வரிக்கு 4 கணவன்கள் உள்ளனராம். அது போல் நாகவள்ளிக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் இருந்து வரும் நிலையில் சக்திவேலுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. ராஜேஸ்வரி எத்தனையோ முறை கண்டித்தும் நாகவள்ளி கேட்கவில்லையாம். இதனால் ராஜேஸ்வரி இப்படியே செய்தால் உன்னை ஒரு நாள் கழுத்தை திருகி போட்டுவிடுவேன் என அச்சுறுத்தியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த நாகவள்ளி, தனது உயிர் பயத்தாலும் கள்ளக்காதலை தொடர முடியாமல் போய்விடும் என்ற அச்சத்தாலும் அக்காவுக்கு முன்பு அவரை கொல்லலாம் என திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக அவர் தனது கள்ளக்காதலன் சக்திவேலுடன் பிளான் செய்துள்ளார். இந்த கள்ளக்காதல் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும் உஷாரானார்கள்.
இதனிடையே ராஜேஸ்வரியின் இறுதி ஊர்வலத்தில் நாகவள்ளி சிறிதும் துக்கம் இன்றி தாரை தப்பட்டை ஆட்டத்திற்கு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார். இதை பார்த்த போலீஸாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அங்கிருந்தவர்களும் "அக்கா செத்து கிடக்கா இவ என்ன இப்படி ஆட்டம் போடுறா " என கேட்டுள்ளனர்.
போலீஸாருக்கு கிடைத்த தகவலும் நாகவள்ளியின் குத்தாட்டமும் சிங்க் ஆனதால் போலீஸார் நாகவள்ளியை தனியே அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து நாகவள்ளி, சூர்யா, ஜெகதீசன், சக்திவேல், ஜான்சன் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications