லிஸ்டை பார்த்ததும்.. முகத்தை தூக்கிய முதல்வர்.. கிராஸ் செக் செய்த "தலை".. மிரள வைத்த செந்தில் பாலாஜி
How did Senthil Balaji make more than 50k cadres to jump DMK ship?
சென்னை: திமுகவில் நேற்று 55 ஆயிரம் மாற்று கட்சி நிர்வாகிகள் ஒரே நாளில் இணைந்தது கட்சியினர் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்த சம்பவத்தால் வெலவெலத்து போய் இருக்கிறதாம்.. ஏன் திமுகவிற்கு உள்ளேயே எப்படிங்க செந்தில் பாலாஜி இவ்வளவு பேரை கொண்டு வந்தார் என்று விவாதங்கள் செய்யப்பட்டு வருகிறதாம்.
மூன்று நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் நேற்று முதல்நாள் கோவைக்கு சென்றார். நேற்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். காலையில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
இதை தொடர்ந்து மாலையில் 6 மணி அளவில் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாடு அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மொத்தம் 55 ஆயிரம் மாற்று கட்சியினர் நேற்று திமுகவில் இணைந்தனர்.

என்ன நடந்தது?
திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டல மாற்று கட்சியினர் திமுகவில் இன்று இணைந்தனர். பொள்ளாச்சியில் ஆச்சிபட்டி திடலில் இதற்கான விழா நடந்தது. பாஜகவை சேர்ந்த மைதிலி வினோ, அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி திமுகவில் இணைந்தனர். தேமுதிக முன்னாள் எம்எல்ஏ தினகரன் திமுகவில் இணைந்தார். 2011ல் சூலூர் எம்எல்ஏவாக தேமுதிக சார்பாக வென்றவர் தினகரன். இவருடன் தேமுதிக நகர செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் பலர் திமுகவில் இணைந்தனர். இப்படி மொத்தமாக 55 ஆயிரம் திமுகவில் இணைந்தனர்.

முதல்வர் ஸ்டாலின்
கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இந்த நிகழ்விற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்துள்ளார். அதாவது.. இப்படி 55 ஆயிரம் பேர் திமுகவில் இணைய போகிறார்கள். அதற்கு விழா எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது முதல்வர் ஸ்டாலின் வியந்து போய் முகத்தை தூக்கி பார்த்து இருக்கிறார். என்ன 55 ஆயிரம் பேரா என்பது போல் ரியாக்சன் கொடுத்துள்ளார். இதை புரிந்து கொண்ட செந்தில் பாலாஜி உடனே முதல்வர் ஸ்டாலினிடம் லிஸ்டை நீட்டி உள்ளார்.

லிஸ்ட்
அந்த லிஸ்டை பார்த்ததும்தான் முதல்வர் ஸ்டாலின் வியந்து போய் இந்த கூட்டத்திற்கு ஓகே சொல்லி இருக்கிறாராம். அந்த லிஸ்டில் 55 ஆயிரம் பேரின் பெயர், விவரம் எல்லாம் அடங்கி இருந்தது. அவர்கள் எந்த கட்சி.. அவர்களின் போன் நம்பர் என்ன என்று எல்லா விவரமும் ஒன்று விடாமல் அடங்கி இருந்தது. இதை பார்த்ததும் முதல்வர் ஸ்டாலின் வியந்து போய் இருக்கிறார். செந்தில் பாலாஜி மீது முழு நம்பிக்கை வைத்து கூட்டத்திற்கு டிக் அடித்துள்ளார்.

கூட்டம்
முன்பே நடக்க வேண்டிய இந்த கூட்டம் மழை காரணமாக தள்ளிப்போய் அதன்பின் நேற்று நடந்தது. இந்த விவகாரம் காரணமாக கோவையில் உள்ள திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் சிலர் அப்செட் என்று கூறப்படுகிறது. செந்தில் பாலாஜிதான் ஏற்கனவே முதல்வரிடம் ஸ்கோர் செய்கிறார். இந்த விவகாரம் காரணமாக அவர் மீண்டும் முதல்வரிடம் நல்ல பெயர் எடுப்பார். ஏற்கனவே கோவையில் அவர் வைத்ததுதான் சட்டமாக உள்ளது.

கோவை
இந்த மீட்டிங் நடந்தால் அவர் முதல்வருக்கு இன்னும் நெருக்கம் ஆவார் என்று கருதி இருக்கிறார்கள் சில மாவட்ட பொறுப்பாளர்கள். இதனால் உள்ளூர் தலைகள் சிலர் அந்த 55 ஆயிரம் பேரின் லிஸ்டை கிராஸ் செய்துள்ளனர். ஒரு சிலரின் போன் எண்ணை எடுத்து இவர்கள் சோதனை செய்து பார்த்ததாக கூறப்படுகிறது. அதில் உண்மையில் அவர்கள் மாற்று கட்சிதான். உண்மையில் அவர்கள் திமுகவிற்குதான் வர போகிறார்கள் என்பதை உறுதி செய்துள்ளனர்.

என்ன நடந்தது?
இதையடுத்துதான் செந்தில் பாலாஜி எப்படி 55 ஆயிரம் பேரை செந்தில் பாலாஜி தட்டி தூக்கினார் என்று தெரியாமல் உள்ளூர் நிர்வாகிகள் மிரண்டு போய் இருக்கிறார்களாம். நேற்று முதல்வர் ஸ்டாலினும் செந்தில் பாலாஜியை மேடையிலேயே புகழ்ந்து தள்ளினார். அதில், உங்களை இங்கே கொண்டு வந்த செந்தில் பாலாஜிக்கு பாராட்டுக்கள். செந்தில் பாலாஜி உங்களை சிந்தாமல், சிதறாமல் கொண்டு வந்துள்ளார். செந்தில் பாலாஜி ஒரு செயலை செய்தால் அது பாராட்டுக்குரிய செயல்தான். சரியான ஆளைதான் பொறுப்பாளராக போட்டுள்ளீர்கள் என்று என்னை பாராட்டுகிறார்கள், என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications