சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொய்.. அது எப்படிங்க கை பட்டு எமர்ஜென்சி கதவு திறக்கும்? அண்ணாமலை மீது செந்தில் பாலாஜி பளீர் அட்டாக்

Google Oneindia Tamil News

சென்னை: விமானத்தின் அவசர கதவுகள் எப்படி கைகள் பட்டு திறக்கும், அண்ணாமலை பொய் சொல்கிறார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டு உள்ளார்.

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த இண்டிகோ விமானத்தின் எமர்ஜென்சி கதவுகளை பயணிகள் சிலர் திறந்ததாக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த விமான கட்டுப்பாட்டு இயக்குனரகமான டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. இந்த புகாரில் முதலில் பெயர்கள் வெளியிடப்படாத நிலையில், இதில் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டுவிட்டதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

அதோடு பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையும் தேஜஸ்வி அருகில் அமர்ந்து இருந்தது தெரிய வந்தது. அண்ணாமலையும் தேஜஸ்வியுடன் பயணம் செய்ததாக விலகி உள்ளார். கடந்த டிசம்பர் 10ம் தேதி இண்டிகோ நிறுவனத்தின் 6E 7339 விமானம் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்துள்ளது. இந்த விமானம் 10.05 மணிக்கு புறப்பட வேண்டியது. ஆனால் 142 நிமிடங்கள் தாமதமாக அதன்பின் விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. இந்த விமானத்தில்தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்று கண்டுபிடிக்கும் படியும், இது தொடர்பாக விசாரணை அறிக்கை சமர்பிக்கும்படியும் விமான கட்டுப்பாட்டு இயக்குனரகமான டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது என்று ஏஎன்ஐ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

விமானத்தில் எமெர்ஜென்சி கதவு திறக்கப்பட்டதா? தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புது விளக்கம் விமானத்தில் எமெர்ஜென்சி கதவு திறக்கப்பட்டதா? தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புது விளக்கம்

அண்ணாமலை

அண்ணாமலை

இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த விளக்கத்தில், கடந்த 2 நாட்களாக நான் அந்த செய்தியை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். டிசம்பர் 10ம் தேதி சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சிறிய விமானத்தில் நாங்கள் பயணம் செய்தோம். தேஜஸ்வி சூர்யாவும் நானும் சென்றோம். அந்த விமானத்தில் முன்னாடி இருக்கும் 4 சீட் ஒன்றாக இருக்கும். தேஜஸ்வி எனக்கு முன்னால் இருக்கும் சீட்டில் இருந்தார். 10 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் தாமதமாகத்தான் சென்றது. அவரை பார்க்க பலர் வந்தனர். அடுத்தடுத்து பலர் வந்தனர்.

விளக்கம்

விளக்கம்

இதனால் தேஜஸ்வி சூர்யா எழுந்து எழுந்து அமர்ந்து கொண்டு இருந்தார். அப்போது தேஜஸ்வி சூர்யா என்னிடம் சொன்னார்.. இங்கே கதவு திறந்து இருப்பது போல சொன்னார். உடனே நாங்கள் புகார் அளித்தோம். பைலட் வந்து விசாரித்தார். என்ன நடந்தது என்று கேட்டார். தேஜஸ்வி அதற்கு, நான் ஜன்னலை அட்ஜஸ்ட் செய்தேன். அப்போது தவறுதலாக கைபட்டுவிட்டது. ஆனால் அதற்கே விமானத்தின் அவசர கதவு திறப்பது எல்லாம் இம்பாஸிபிள்.

தேஜஸ்வி சூர்யா

தேஜஸ்வி சூர்யா

அங்கே இருந்தவர்களிடம் விசாரணை நடந்தது. அதன்பின் பொறியாளர்கள் அங்கு வந்து பார்த்தனர். அவர் மொத்தமாக கதவை திறந்துவிட்டு மாட்டினார். இதனால் மீண்டும் கேபின் மீண்டும் பிரஷர் செய்யப்பட்டது. அங்கே என்ன நடந்தது என்று எழுதிக்கொடுக்கும்படி அவரிடம் கேட்டனர். இதையடுத்து தேஜஸ்வி எழுதிக்கொடுத்தார். அவர் இதை வேண்டும் என்றே திறக்கவில்லை. வெறுமனே கைதான் பட்டது. இதையடுத்து தன்னுடைய தவறு இல்லை என்றாலும் தேஜஸ்வி எம்பி என்பதால் பொறுப்பாக மன்னிப்பு கேட்டார். இது விபத்தாக திறக்கப்பட்ட டோர் என்று விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் தேஜஸ்வியாதவும் ஒப்புக்கொண்டு இருக்குறார் , என்று அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

விமானம்

விமானம்

இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி எழுப்பிய கேள்வியில், இந்த விமான விவகாரத்தில்.. ஒரு கட்சியின் தலைவராக இருக்க கூடிய நபர் எந்த அளவிற்கு பொய்யான செய்தியை எப்படி வெளியிடுகிறார் என்று பார்க்க வேண்டும். இதில் நேரத்திற்கு நேரம் மாற்ற கூடாது. அவர் போலீஸ் அதிகாரியாக கர்நாடகாவில் இருந்த போது அவர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் நினைவில் இருக்கலாம். அவர் கர்நாடகா பற்றி பேசிய வார்த்தைகள் எல்லாம் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். உங்களிடம் அந்த வீடியோக்கள் இல்லை என்றாலும் நான் அனுப்புகிறேன்.

உண்மை என்ன?

உண்மை என்ன?

விமானத்தில் அவர்கள் எதோ கை வைத்தனர். அது மட்டும்தான் அங்கு நடந்தது. அவசரகால கதவை அவர்கள் திறக்கவில்லை. விபத்தாக திறந்துவிட்டது என்று கூறி உள்ளார். அவரின் பேட்டியை பார்த்தேன். தயவு செய்து சொல்கிறேன்.. வெறுமனே கை வைத்தால் எல்லாம் கதவு திறக்காது. வெறுமனே கை வைத்ததும் இவரின் கதவு எப்படி திறந்தது. அரைமணி நேரம்தான் விமானம் தாமதமாக சென்றது என்று பச்சை பொய்யை வேறு சொல்கிறார்.

கதவு

கதவு

கதவு திறக்கப்பட்டது உண்மை, மன்னிப்பு எழுதிக்கொடுத்தது உண்மை என்று விமான போக்குவரத்துறை அமைச்சரே சொல்லிவிட்டார். ஆனால் இப்போது ஏன் அவர் இதெல்லாம் விபத்து என்பது போல பொய் சொல்ல வேண்டும். தவறு செய்திருந்தால் தவறு என்று சொல்ல வேண்டியது தானே? கையில் இல்லாத பில்லை ஏப்ரலில் கொடுப்பேன் என்று கூறினார். கையில் இருந்து இப்போதே பில்லை கொடுக்கலாமே? யார் கொடுத்த வெகுமதி என்று கூட சொல்ல வேண்டாம். வெகுமதி என்று சொன்னாலே போதுமே?

ஒன்றியம்

ஒன்றியம்

ஒன்றியத்தில் ஆள கூடிய கட்சியின் மாநில தலைவர் என்பதற்காக அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மற்றபடி அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நோட்டாவுடன் போட்டி போடும் நபர்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம். இல்லாதவர்களை இருப்பது போல காட்டுவது மீடியாதான். அவர்களுக்கு எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏன் பாஜக இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது, என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டல் செய்துள்ளார்.

English summary
How did some can open flight emergency window accidently? Senthil Balaji asks Annamalai, Tejasvi Surya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X