சென்னை அடுக்குமாடியில் 5 மாதங்களாக உடல் அழுகாமல் இருந்தது எப்படி? டாக்டர் சிக்கியது எப்படி?
சென்னை: சென்னை திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அப்பா, மகள் உடல் ஐந்து மாதங்களாக இருந்துள்ளது. யாருக்குமே துளியும் சந்தேகம் வரவேயில்லை.. ஐந்து மாதங்காக உடல் அழுகாமல் எப்படி இருந்தது என்ற சந்தேகம் எழுந்தது.. இந்நிலையில் தந்தை-மகள் இறந்ததும் உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க டாக்டர் என்ன செய்தார்.. எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.
சென்னை திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வ 78 வயதாகும் சாமுவேல் சங்கர் என்பவரும், 37 வயதாகும் அவருடைய மகள் சிந்தியாவும் கடந்த ஐந்து மாதங்களாக தங்கள் வீட்டில் பிணமாக கிடந்துள்ளனர். பூட்டிய வீட்டிற்குள் பிணமாக இருந்ததால் யாருக்கும் தெரியவில்லை.. அதேபோல் ஏசி ஓடிக்கொண்டே இருந்து வந்ததால், அழுகிய வாடையும் வெளியில் வரவே இல்லை..

ஆனால் கடந்த ஜனவரி 29ம் தேதி இரவு ஏசி பழுதாகி உள்ளது. இதனால் வீட்டில் இருந்து மிகமோசமான துர்நாற்றம் வீசியிருக்கிறது. பூட்டிய வீட்டிற்குள் இருந்து மிக மோசமான பிணவாடை அடித்த காரணத்தால் உடனே, அந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் திருமுல்லைவாயல் போலீசாருக்கு உடனே தகவல் அளித்தனர். சந்தேகத்தின் பேரில் திருமுல்லைவாயல் போலீசார், சாமுவேல் சங்கரின் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீடு வெளிப்புறமாக பூட்டியிருந்துள்ளது. இதையடுத்து பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
வீட்டில் ஏசி: அப்போது வீட்டில் ஏ.சி. ஆனில் இருந்ததாம். ஆனால் பழுதாகி இருந்துள்ளது. வீட்டுக்குள் சிந்தியாவும், அவரது தந்தை சாமுவேல் சங்கரும் பிணமாக கிடந்துள்ளனர். உடல்கள் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக மாறி இருந்தது. இதை கண்டு அதிர்ந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவலின் படி, இறந்த ஐந்து மாதம் ஆன உடல்கள் என்று தெரியவந்தது. இதில் சாமுவேல் இயற்கையாக மரணம் அடைந்த நிலையில், சிந்தியா தலையில் காயம் ஏற்பட்டு இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கை: இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு விஷயங்கள் வெளிவந்தன. சிந்தியாவும், அவரது தந்தை சாமுவேல் சங்கரும் தங்கியிருந்த அடுக்குமாடியில், அவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டம், ஓரிக்கை, பாரதிதாசன் நகரைச் சேர்ந்த குழந்தைகள் நல டாக்டரான எபினேசர் (34) என்பவர் தங்கி இருந்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்த போது, தான் சிந்தியாவை தள்ளிவிட்டு கொன்றது தெரியவந்தது.
எப்படி பழக்கம்: சிந்தியாவின் தந்தையான முதியவர் சாமுவேல் சங்கருக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளது. இதற்காக சிந்தியா தனது நண்பரான எபினேசரை மருத்துவ சிகிச்சை அளிக்க அழைத்துள்ளார். அடிக்கடி இதற்காக வந்து சென்ற எபிசேனர், அதே குடியிருப்பில் ஒரு கட்டத்தில் கடந்த ஆண்டு குடியேறி உள்ளார். இவரை சிந்தியாதான் குடிவைத்ததாக கூறப்படுகிறது.
சிந்தியாவுக்கு என்ன நடந்தது: இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம் 6-ந் தேதி முதியவர் சாமுவேல் சங்கர் சிகிச்சை பலனின்றி வீட்டிலேயே இறந்துவிட்டார். அவர் இறந்த பின்னர், ஆதங்கத்தில் இருந்த சிந்தியாவுக்கும், டாக்டர் சாமுவேல் எபிநேசருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது எபிசேனர், வெளிநாடு செல்ல உள்ளதாக கூறியிருக்கிறாராம். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த சிந்தியா வாக்குவாதம் செய்தாராம்.. அப்போது சிந்தியாவை எபிசேனர் கீழே தள்ளி விட்டதில் தலையில் காயம் அடைந்தது இறந்து விட்டாராம்.
டாக்டர் என்ன செய்தார்: இதனால் அதிர்ச்சி அடைந்த எபிநேசர், தந்தை-மகள் இருவரது உடல்களையும் அந்த அறையில் வைத்து பூட்டியிருக்கிறார். வாடை வெளியில் தெரியாமல் இருக்க ஏ.சி. எந்திரத்தை இயக்கி விட்டதுடன் வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் போனாராம். அவ்வப்போது அந்த வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டு சென்றிருக்கிறாராம். இதனிடையே உறவினர்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதால் வாட்ஸ் கால், மிஸ்டு கால் செய்து வந்தாராம்.
டாக்டர் சிக்கியது எப்படி: இந்நிலையில் உடல்கள் அழுகாமல் இருக்க டாக்டர் எபிசேனர் ரசாயணத்தை ஊற்றி இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரம் வீட்டில் ஏசி ஓடிக்கொண்ட இருந்த காரணத்தால், வாடை வெளியே தெரியாமல் இருந்துள்ளது. ஆனால் ஏசி பழுதாகி ஒரு கட்டத்தில் வாடை அடித்த நிலையில் தான் எபிசேனர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது..












Click it and Unblock the Notifications