Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் போன வாரம் 1000 கோடி நிலம்.. இந்த வாரம் 80 கோடி நிலம் மீட்பு.. மணலியில் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட மணலியில் ஆக்கிரமிப்பில் இருந்த 80 கோடி ரூபாய் மதிப்பு நிலத்தை தனியாரிடம் இருந்து அதிகாரிகள் மீட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அண்மையில் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது.

சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டியுள்ள கதீட்ரல் சாலையில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அதிமுக பிரமுகரான தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி என்பவர், 'விவசாய தோட்டக்கலைச் சங்கம்' என்ற ஒரு தனியார் அமைப்பை உருவாக்கி அந்த நிலத்தைப் பயன்படுத்தி வந்தார்.

How did the Chennai Corporation authorities recover 80 crore rupees government land in Manali?

அங்கு குத்தகை அடிப்படையில் செயல்பட்ட தனியார் டிரைவ்-இன் உணவு விடுதி வசம் இருந்த நிலத்தை தமிழக அரசு மீட்டது. அத்துடன் அந்த இடத்தில் செம்மொழிப் பூங்காவை உருவாக்கியது. இந்நிலையில், செம்மொழிப் பூங்காவுக்கு எதிரே உள்ள சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான நிலத்துக்கு கிருஷ்ணமூர்த்தி சொந்தம் கொண்டாடினார். இந்நிலையில் அந்த நிலமும் தமிழக அரசால் நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை மணலியில் தனியார் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த ரூ.80 கோடி அரசு நிலத்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக மீட்டுள்ளார்கள்.

சென்னை சென்னை மாநகராட்சி மணலி மண்டலம் 18-வது வார்டுக்கு உட்பட்ட சி.பி.சி.எல். நகர் அருகே தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. வருகிறது. இந்த நிறுவனம் நீர்நிலை பாதைகள், சுடுகாடு போன்ற அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து இருப்பதாக புகார் எழுந்தது. இதன் மதிப்பு 80 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மணலி மண்டல அதிகாரிகள் இந்த நிறுவனத்தின் வருவாய் துறை ரீதியான ஆவணங்களை அதிரடியாக சென்று ஆய்வு சய்தனர். அப்போது மழைநீர் வடிகால் பாதைகள் மற்றும் நீர்நிலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆக்கிரம்புகளை அகற்றி நிலத்தை மீட்க உததரவிட்டார். இதன் பேரில் மணலி மண்டல உதவி கமிஷனர் கோவிந்தராசு, உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர் கவிதா ஆகியோர் கொண்ட குழுவினர் சி.பி.சி.எல். நகர் அருகே தனியார் நிறுவனத்திற்கு சென்றார்கள்.

அங்கு ஆக்கிரமித்து கட்டியிருந்த சுற்றுச் சுவரை ஜேசிபி மூலம் இடித்து அகற்றினார்கள். , அரசுக்கு சொந்தமான ரூ.80 கோடி மதிப்புள்ள சுமார் 3.3 ஏக்கர் நீர்நிலை நிலத்தை முழுமையாக மீட்டனர். மீட்கப்பட்ட அந்த இடத்தில் சுமார் 30 அடி அகலம் கொண்ட மழை நீர் கால்வாய் அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+