விமானத்தில் போன 241 பலியாக.. ஒரே ஒருவர் மட்டும் பிழைத்தது எப்படி? வெளியான ரகசியம்! என்ன செய்தார்?
சென்னை: ஏர் இந்தியா ஏஐ 171 விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விஸ்வஷ்குமார் ரமேஷ், ஜூன் 12 ஆம் தேதி நடந்த இந்த கோர விபத்தில் இருந்து மீண்டது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானம் விபத்துக்குள்ளானதில், விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.

விஸ்வஷ்குமார் ரமேஷ் உயிர் பிழைத்த மர்மம்
விஸ்வஷ்குமார் ரமேஷ் விமானம் மோதிய தருணத்தில்.. சரியாக மோதும் நொடி கீழே விழுந்துள்ளார். அங்கே இருந்த இரண்டு கட்டிடங்களுக்கு இடையே இருந்த குறுகிய இடைவெளியில் இவர் விழுந்தார். அங்கு குவிந்திருந்த தளர்வான மண் மீது குதித்து உள்ளார். அங்கே இருந் மண்.. அவர் கீழே விழுந்த வேகத்தை குறைத்து அவரது உயிரை காப்பாற்றி உள்ளது.
விமானத்தில் உள் வெடிப்பு ஏற்பட்டிருந்தால், 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்த ரமேஷ் உயிர் பிழைத்திருக்க முடியாது என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் விழுந்த இடமே அவரது உயிரை காப்பாற்றியுள்ளது.
விபத்துக்குப் பிறகு, இந்த துயர சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், விஸ்வஷ்குமார் ரமேஷ் மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியேறும் வீடியோ வெளியாகி வைரலானது. அந்த வீடியோ பலருக்கும் நம்பிக்கையை அளித்தது.
ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் 11ஏ இருக்கை எகானமி வகுப்பில் முதல் வரிசையில் உள்ளது. இந்த ஜன்னல் இருக்கை விமானத்தின் வலது பக்கத்தில் உள்ளது. மேலும், விமானத்தின் இறக்கைக்கு இரண்டு வரிசைக்கு முன்னதாக உள்ளது. நெருக்கடியான சமயங்களில் வெளியேறும் அவசர வழியை ஒட்டியே இந்த 11ஏ இருக்கை அமைந்துள்ளது.
எப்படி தப்பித்தார்
விபத்து நடக்கும் சில நொடிகளுக்கு முன் பயணிகளிடம் எமர்ஜென்சி தகவல் விதிப்படி தெரிவிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி அந்த பயணி உஷாராக இருந்துள்ளார். சீட் பெல்ட் அணியாத இவர்.. விமானம் தரைக்கு அருகே வந்து சரியாக மோதும் நொடி.. சுதாரித்துள்ளார். விமானத்தில் ஏற்பட்ட பிளவை + அவசர கதவை பயன்படுத்தி அதன் வழியாக அப்படியே எகிறி குதித்து காயங்களோடு பிழைத்துள்ளார்.
விபத்து குறித்து ரமேஷ் கூறுகையில், "விமானம் உடைந்தது, எனது இருக்கை தனியாக வெளியே விழுந்தது" என்றார். விமானம் விபத்துக்குள்ளான சமயத்தில் ரமேஷ் அவசர Exit அருகில் இருந்த 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்தார். விமானம் உடைந்து தீப்பிடித்தபோது, அவரது இருக்கை தனியாக வெளியே விழுந்ததால் அவர் உயிர் பிழைத்தார்.
தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி, தனது இளைய சகோதரனின் இறுதி சடங்குகளை செய்வதற்காக வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தார். விஸ்வஷ்குமார் ரமேஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது ஒரு பக்கம் ஆறுதல் அளித்தாலும், இந்த விபத்தில் 241 பேர் உயிரிழந்தது துயரமான நிகழ்வாகும்.
உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி
விபத்துக்குப் பிறகு, உயிரிழந்தவர்களின் உடல்களை டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணியை அதிகாரிகள் விரைவாக தொடங்கினர். ஜூன் 13 ஆம் தேதி அதிகாலை 12.19 மணிக்கு தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு (FSL) முதல் டிஎன்ஏ மாதிரி ஒப்படைக்கப்பட்டது. ஜூன் 12 ஆம் தேதி இரவு 8 மணிக்குள் 50க்கும் மேற்பட்ட உறவினர்கள் மாதிரிகளை வழங்கினர்.
ஜூன் 14 ஆம் தேதி காலை 9 மணி அளவில், முதல் மாதிரி உறுதி செய்யப்பட்டது. அடையாளம் காணக்கூடிய உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது. 34 மணி நேரத்திற்குள் முதல் டிஎன்ஏ விவரக்குறிப்பு பணிகள் முடிந்தது. இதுவரை 120 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டு உள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications