எங்க பிளானே வேறங்க.. தேடி வந்து அழைத்த டிகே சிவகுமார்.. கர்நாடக தேர்தலில் திருமா அடித்த சிக்ஸர்.. வாவ்
சென்னை: கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பலர் உழைத்தனர். இதில் காங்கிரஸ் கட்சிக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி தொல் திருமாவளவன் பெற்ற வெற்றி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை காங்கிரஸ் கட்சி பதிவு செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

நேற்று அங்கு எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மஜத மொத்தம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து அங்கு முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த பொம்மை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் சார்பாக சித்தராமையா முதல்வராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
இன்று மாலை அவர் பதவி தொடர்பாக முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல்: இந்த தேர்தலில் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பலர் உழைத்தனர். இதில் காங்கிரஸ் கட்சிக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி தொல் திருமாவளவன் பெற்ற வெற்றி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மொத்தம் 15 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்காக திருமாவளவன் பிரச்சாரம் செய்தார். அதில் 13 இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.
திருமாவளவன் பிரச்சாரம் செய்த சாந்தி நகர், ராஜாஜி நகர், சிவாஜி நகர் போன்ற தொகுதிகளில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளனர்.
காந்தி நகரில் 54118 வாக்குகள் பெற்று காங்கிரஸ் மூத்த தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளருமான தினேஷ் குண்டுராவ் வெற்றிபெற்றுள்ளார்.
சிவாஜி நகரில் 64913 வாக்குகள் பெற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரிஸ்வான் அரசாத் வெற்றிபெற்றுள்ளார்.
சாந்தி நகரில் 61030 வாக்குகள் பெற்று காங்கிரஸ் மூத்த தலைவர் என் ஏ ஹாரிஸ் வெற்றிபெற்றுள்ளார்.
மேலும் 11 தொகுதிகளில் காங்கிரசின் வெற்றிக்கு திருமா காரணமாக இருந்தார். தமிழர்கள், தலித் மக்கள் அதிகம் உள்ள தொகுதிகளில்தான் திருமா பிரச்சாரம் செய்தார்.
அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக முடிவு திரும்பி உள்ளது.
டிகே சிவக்குமார் அழைத்தார்: விசிக கட்சியை அண்டை மாநிலங்களில் வளர்க்கும் முயற்சியில் திருமா இருக்கிறார். இதை மனதில் வைத்தே கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தார்.
மொத்தம் 23 இடங்களில் வேட்பாளரை நிறுத்துவதாக இருந்தார். இதற்கான பட்டியலையும் அவர் தயார் செய்து இருந்தார்.
ஆனால் கடைசியில் டிகே சிவக்குமார் இவரை அழைத்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கேட்டுள்ளார். மேலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் திருமாவிற்கு எம்பி பதவி கிடைக்கும்.. உங்களுக்காக நாங்கள் வைத்துள்ள திட்டமே வேறு.

நீங்கள் வேட்பளாரை நிறுத்தினால் வாக்குகள் பிரியும். அப்படி நடந்தால் அது காங்கிரஸின் தோல்விக்கு காரணமாக அமையும் என்று கூறி இருக்கிறாராம்.
அதை கேட்டே திருமா வேட்பாளரை நிறுத்தாமல் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பணிகளை செய்தார். அதில் குறிப்பிட தகுந்த வெற்றியையும் பதிவு செய்துள்ளார்.
அடுத்து தெலுங்கானா தேர்தலில் திருமாவளவன் கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications