உட்கார கூட இல்லையே! அதிகாலை எல்லோரும் போகும் வரை காத்திருந்த சிவசங்கர்! குட்மார்க் வாங்கிய அமைச்சர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கத்தில் அமைச்சர் சிவசங்கர் குட் மார்க் வாங்கி உள்ளார். அவரின் முக்கியமான 3 செயல்பாடுகள் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர். சென்னையில் இருந்து பலரும் சொந்த மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளனர். இன்றும் அரசு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

How did Transport minister Sivasankar Work hard during the Tamil nadu Deepavali Special bus initiative?

இதனால் பெரும்பாலான மக்கள் இன்றும் சொந்த ஊர்களில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் ஊருக்கு திரும்ப நேற்றும், இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் மீண்டும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை, கோவை, ஓசூர் போன்ற நகரங்களுக்கு திரும்பி செல்லும் என்றும் கூறப்படுகிறது.

16,895 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

குட் மார்க் வாங்கிய அமைச்சர்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கத்தில் அமைச்சர் சிவசங்கர் குட் மார்க் வாங்கி உள்ளார். அவரின் முக்கியமான 3 செயல்பாடுகள் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

செயல்பாடு 1 - சிறப்பு பேருந்துகளை அதிக அளவில் இயக்கியது. அதோடு எல்லா பேருந்துகளை ஒரே இடத்தில் இருந்து இயக்காமல் வேறு வேறு ஏரியாக்களில் இருந்து கூட இயக்கியது. முக்கியமாக் கிளாம்பாக்கத்தில் இருந்து கூட பேருந்துகளை இயக்கியது மிக சிறப்பான திட்டம் ஆகும். இதனால் பேருந்துகள் ஒரு இடத்தில் குவியவில்லை. மக்களும் எளிதாக பயணம் செய்ய முடிந்தது.

போக்குவரத்து நெரிசல் பெரிதாக ஏற்படவில்லை. சிட்டி உள்ளே டிராபிக் இல்லை.
சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதால் சிரமமின்றி பயணிப்பதாக பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த முறை பேருந்து நிலையங்களில் பெரிய அளவில் நெருக்கடி இல்லை. கூட்டம் இருந்தாலும் கடுமையான நெருக்கடி இல்லை.

அதேபோல் பேருந்துகளும் கூட நிறைய அளவில் சென்றாலும் எங்கேயும் டிராபிக் பிளாக் ஆகாமல் சென்று வருகின்றன. பேருந்துகள் மெதுவாக நகர்ந்து சென்றாலும் கூட.. அப்படியே முடங்காமல்.. சிட்டி முடியும் வரை பிரச்சனை இன்றி வெளியே சென்றுள்ளன. இதற்கு காரணம் பேருந்து நிலையங்களை பிரித்து கொடுத்தது.. வேறு வேறு பிக் அப் பாயிண்டுகளை அமைத்ததுதான் இந்த போக்குவரத்து நெரிசல் குறைய காரணம் ஆகும்.

செயல்பாடு 2: ஆம்னி பேருந்துகளுக்கு அரசு கடிவாளம் போட்டது. இதை அமைச்சரும் நேரடியாக கண்காணித்தார். தீபாவளிக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்த நிலையில் ஆம்னி பேருந்துகள் நிர்வாகம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் அரசு நிர்ணயித்த கட்டணத்திலேயே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் கூடுதலாக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

How did Transport minister Sivasankar Work hard during the Tamil nadu Deepavali Special bus initiative?

தீபாவளி நாட்களில் ஆம்னி பேருந்துகள் சாதாரண கட்டணத்திலேயே இயங்கின. சில பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தன. கூடுதல் கட்டணம் வசூலித்த பேருந்துகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் சிவசங்கர் விடாமல் இதை கண்காணித்து வந்தார். பேருந்து நிலையங்களிலேயே இருந்து நேரடியாக இதை கண்காணித்து வந்தார்.

செயல்பாடு 3: தீபாவளி தினத்தன்று அதிகாரிகள் களத்தில் இருப்பதை விட அமைச்சரே நேரடியாக களமிறங்கினார். கோயம்பேடு தொடங்கி கிளாம்பாக்கம் வரை இரவு முழுக்க அவர் ஆய்வு பணிகளை செய்தார்.

அதிகாலை 3 மணி வரை.. எல்லா பேருந்துகளும் செல்லும் வரை அவர் காத்திருந்து பயணிகளை அனுப்பி வைத்தார். நாம் ஊருக்கும் போகும் போது சித்தப்பா வந்து வழி அனுப்புவது போல.. தீபாவளிக்கு செல்லும் மக்களை நேரடியாக கண்காணித்து பேருந்து நிலைய நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+