விஜய்க்கு அசாத்திய துணிச்சல்தான்.. கேட்ட அந்த கேள்வி.. அதனாலதான் எடப்பாடி டெல்லிக்கே போனாராமே
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றதற்கு பின் விஜய் ஒரு முக்கிய காரணம் என்று அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக விஜய் சொன்ன ஒரு வார்த்தைதான் எடப்பாடி பழனிசாமியின் பாஜக
கூட்டணி முடிவிற்கு காரணம் என்கிறார்கள்.
தமிழக அரசியலில் மீண்டும் பழைய கூட்டணி உருவாக போகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு கடுமையான போட்டியாக இருந்த அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் திரும்ப உள்ளது. எடப்பாடி இந்த முடிவை எடுப்பதற்கு முன் பல
முக்கியமான முயற்சிகளை எடுத்து பார்த்துவிட்டு அது தோல்வி அடைந்த காரணத்தினாலேயே இந்த முடிவிற்கு வந்தார்.

1. திமுக - காங்கிரஸ் கூட்டணியை முறிக்க எடப்பாடி தீவிரமாக முயன்றார். காங்கிரசை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வர தீவிரமாக காய் நகர்த்தினார். இதற்கான பணிகளை செய்தார். டெல்லியில் பேசினார். ராகுல் காந்திக்கு தூதுவிட்டார். ஆனால் காங்கிரஸ் அசைந்து கொடுக்கவில்லை. இதனால் அந்த முடிவை எடப்பாடி கைவிட்டார்.
2. இரண்டாவதாக தேசிய கட்சி அல்லாத தனி கூட்டணியை உருவாக்க முயன்றார். முக்கியமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியே கொண்டு வர தீவிரமாக முயன்றார். திமுக கூட்டணியில் இருந்து அவர்களை வெளியே கொண்டு வந்து..
அதிமுக கூட்டணியில் இணைக்க தீவிரமாக முயன்றார். ஆனால் திருமா திமுகவின் வெற்றி கூட்டணியில் தொடர்வதில் உறுதியாக இருந்துவிட்டார்.
3 இதற்கு அடுத்துதான் விஜய் உடன் எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தையை தொடங்கினார்.
4. தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக இடையே நடந்த ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. அதன்படி அதிமுக வட்டாரத்தில் கூறுகையில், தமிழக வெற்றிக்கழகம் அதிமுகவிற்கு வேலைக்கு ஆகாது. தமிழக வெற்றிக் கழக கோரிக்கைகளை அதிமுக ஏற்க முடியாது. என்கிறார்கள்.
5. அதிமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கோரிக்கைகள் ஏற்றதாக இல்லை.. அதிமுகவிற்கு தகுந்ததாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
6. தமிழக வெற்றிக் கழகம் சில கோரிக்கைகளை வைக்கிறது.. அதெல்லாம் அதிமுகவிற்கு தகுந்ததாக இருக்காது. 117 இடங்களை தமிழக வெற்றிக் கழகம் கேட்கிறது. பாதிக்கு பாதி இடங்கள் கேட்கிறார்கள். இரண்டரை வருடங்கள் நாங்கள் ஆட்சி.. அதன்பின் இரண்டரை வருடங்கள் நீங்கள் ஆட்சி என்று அதிமுகவிடம் தமிழக வெற்றிக் கழகம் பேசி உள்ளது என்று கூறியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
7. விஜயின் இந்த துணிச்சல்.. அதாவது புதிய கட்சியை தொடங்கிவிட்டது.. பெரிய பாரம்பரியம் உள்ள கட்சியிடம் பாதிக்கு பாதி சீட் பதவி கேட்டதை பார்த்து எடப்பாடி விக்கித்து போய் இருக்கிறார்.
8. அதோடு இன்னொரு பக்கம்.. அப்படியே எல்லாம் ஓகே என்றாலும் இப்போது கூட்டணியை உறுதி செய்ய மாட்டேன். ஜனநாயகன் படம் வெளியாகி.. கடைசியாக ஜனவரிக்கு பின்பே சொல்வேன் என்று விஜய் கூறி உள்ளார்.
9. இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சர்வே எடுத்ததாக கூறப்படுகிறது. விஜய் தரப்பு எடப்பாடி தரப்பிடம் பேசுகையில், எங்களுக்கு பெரிய பலம் உள்ளது. முக்கியமாக 15 சதவிகிதத்திற்கும் மேல் வாக்கு வங்கி உள்ளதாக எங்கள் சர்வே சொல்கிறது. அதனால் 117 இடங்கள் எங்களுக்கு தேவை, என்று விஜய் தரப்பி பேசி
இருக்கிறதாம். இதை எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் கூட்டணி சேரவில்லை
10. விஜயின் போக்கு சரியில்லை என்பதால்தான்.. இனியும் காத்திருக்க வேண்டும்.. பாஜகவோடு சமாதானமாகி போய்விடலாம் என்று டெல்லி கதவை அவர் தட்டியதாக கூறப்படுகிறது.
-
Moral போலீசா சிங்கப்பெண்கள் படை? முதல் திட்டமே சொதப்பல்! சரமாரியாக எழும் குற்றச்சாட்டுகள்! -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை! என்ன நடக்கும்? -
செங்கோட்டையன் பாணியில் களமிறங்கிய சிவி சண்முகம்.. திடீரென எடப்பாடிக்கு எதிராக கொந்தளிப்பது ஏன்? -
அவர்கள் தற்குறி அல்ல.. தவெகவின் அம்புக்குறி.. விஜய் ஆட்சி மீது பொறாமையால் விமர்சனம்.. லாரன்ஸ் பேட்டி -
பொண்ணு கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது! அரசியல் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! தவெகவில் ஐக்கியம்? -
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
"கரண்ட் போனால் என்ன? விஜய்யை கேட்டா வந்துருமா?" என் வீட்டுல இருக்கு! வினோதமாக பேசிய மாஸ்டர் மகேந்திரன் -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு? -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார்












Click it and Unblock the Notifications