Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சைதை துரைசாமி மகன் வெற்றியின் உடலை மீட்க! போலீஸார் பயன்படுத்திய "அந்த" பொருள்தான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் கிடைத்தது எப்படி?

முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (45), தனது உதவியாளர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத்துடன் (35) இமாச்சல பிரதேசத்திற்கு சினிமா ஷூட்டிங் லொகோஷன் பார்க்க சென்றிருந்தார்.

How did Vetri Duraisamys body rescued?

கடந்த 4 ஆம் தேதி ஒரு வாடகைக் காரில் இருவரும் சிம்லா சென்று கொண்டிருந்தனர். காரை டிரைவர் டென்சின் என்பவர் ஓட்டினார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து கார் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

மேலும் சட்லஜ் நதிக்கரையில் விழுந்தது. விபத்து குறித்து தகவலறிந்த போலீஸார், மீட்பு படையினர் சம்பவ இடம் சென்று நீரில் மூழ்கியிருந்த காரை கயிறு கட்டி மீட்டனர். அப்போது டென்சினின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து வெற்றியின் உதவியாளர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத் படுகாயங்களுடன் பாறைகளில் விழுந்து கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆனால் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை காணவில்லை. சைதை துரைசாமியின் மகனை சட்லஜ் ஆற்றுக்குள் தேடி வந்தனர். அவரது உடல் கடந்த 8நாட்களாக தேடப்பட்டு வந்தது. இந்த நிலையில் வெற்றியின் உடைகள், உடமைகள், சூட்கேஸ், ஐஃபோன் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டது.

ஆனால் வெற்றியின் நிலை தெரியவில்லை. பாறை இடுக்குகளில் இருந்த மனித மூளை வெற்றியினுடையதா என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்தது. ஏனெனில் டென்சினுக்கு தலையில் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து மனித மூளை டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதனுடன் ஒப்பிட சைதை துரைசாமியின் டிஎன்ஏ மாதிரிகளும் இமாச்சலுக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் வெளியாவதற்குள் வெற்றியின் உடலை மீட்பு படையினர் நேற்று மீட்டனர்.

இதையடுத்து சிம்லாவில் உள்ள மருத்துவமனையில் வெற்றியின் சடலத்திற்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் இன்று மாலை சென்னை கொண்டு வரப்படுகிறது. இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு அவரது உடல் சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அதன்பிறகு 6 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயான பூமியில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் வெற்றி துரைசாமியின் உடல் கம்டெடுக்கப்பட்டது எப்படி என்பதை பார்க்கலாம். வெற்றி துரைசாமியை தேடிய ஆழ் கடல் நீச்சல் வீரர்கள் 15 கி.மீ. தூரம் வரை தேடி பார்த்தனர். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை.

இதையடுத்து வெற்றி பயணித்த கார் விழுந்த இடத்தில் வெற்றியின் எடை கொண்ட கிட்டதட்ட அவரை போன்றே உயரம், உடல்வாகு கொண்ட பொம்மையை போலீஸார் தூக்கி எறிந்தனர். அந்த பொம்மை எங்கு செல்கிறது என்ற போக்கை கவனித்தனர். பிறகு அவருடைய உடல் ஆழ்கடலில் உள்ள பாறைக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டு விபத்து நடந்த 2 கிமீ. தூரத்தில் இருந்த உடலை ஸ்கூபா நீச்சல் வீரர்கள் மீட்டனர். எனவே வெற்றியின் உடலை கண்டுபிடிக்க அந்த பொம்மை ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் என தெரிகிறது.

வெற்றி துரைசாமியின் இறப்பிற்கு முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா, பாமக தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் தனது இரங்கல் செய்தியில் எந்த தந்தைக்கும் வரக் கூடாத நிலை சைதை துரைசாமிக்கு வந்ததை நினைத்து நான் வேதனை அடைகிறேன் என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+