தோட்டாக்களைவிட வாக்குச்சீட்டின் வலிமை அதிகம்! ஓட்டுரிமை பற்றி உங்களுக்குத் தெரியுமா?
சென்னை: இந்தியாவில் நடைபெறும் பொதுத் தேர்தலை ஏன் உலகின் மிகப் பெரிய ஜனநாயக திருவிழா என்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவில் நடக்கும் மக்களவைத் தேர்தலை மிகப் பெரிய ஜனநாயக திருவிழா என்று சொல்கிறோம். அதற்கு என்ன காரணம் என்று பலருக்கும் தெரிவதில்லை. இந்த ஓட்டு போடும் உரிமை சும்மா கிடைக்கவில்லை.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்ற போது, அனைவருக்கும் ஓட்டு போடும் உரிமை அளிக்கப்படவில்லை. படித்தவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற நிலையே நீடித்தது. அதற்குப் பிறகு சொத்து உள்ளவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது.
அப்படிப் பார்த்தால், இந்தியாவில் ஆறில் ஒரு பங்கு இருந்த பட்டியல் இன மக்கள் உட்பட பலருக்கும் வாக்களிக்கும் உரிமை இருந்ததில்லை. அதைப்போல பெண்களுக்கு ஓட்டுரிமை என்பது இல்லாமல் இருந்தது.
இந்தியாவை பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் பிரிட்டனில் கூட சொத்து உள்ள பெண்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற நிலையே இருந்தது. சொத்து உள்ள பிரிட்டன் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது கூட 1918க்குப் பின்னர்தான்.

காலனிய இந்தியாவில் பெண்கள் ஓட்டு உரிமைக் கேட்டு போராட்டங்களை நடத்தினர். இந்தியாவில் பெண்கள் வாக்குரிமை இயக்கம் ஒன்றும் கட்டமைக்கப்பட்டது.
இந்திய நிலைமையை ஆராய்வதற்காக பிரிட்டிஷ் இந்தியாவின் தலைமை கவர்னர் செம்ஸ்போர்டும் பிரிட்டிஷ் இந்திய அரசின் செயலாளர் எட்வின் சாமுவேல் மாண்டேகும் அடங்கிய குழு ஒன்று 1919இல் அமைக்கப்பட்டது.
அப்படி அமைக்கப்பட்ட குழு அறிக்கை ஒன்றை தயாரித்தது. அதற்கு மாண்டேகு- செம்ஸ்போர்டு சீர்திருத்த அறிக்கை என்று பெயர். இந்தக் குழு கூட பெண்கள் வாக்களிக்க வேண்டி வைத்த கோரிக்கையை நிராகரித்தது என்பது வரலாறு.

இன்னும் சொல்லப் போனால் காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையில் கருத்து முரண்பாடு வருவதற்கு வழிவகுத்ததே ஓட்டுரிமைதான். லண்டன் வட்டமேசை மாநாட்டில் தலித் மக்களுக்கு என இரட்டை வாக்குரிமை கேட்டதால்தான் இந்த இருவருக்குள்ளும் வேற்றுமை எழுந்தது.
இப்படி வரலாறு நெடுகிலும் தேடிப் பார்த்தால் ஓட்டுரிமை என்பது சும்மா கிடைத்துவிடவில்லை என்பதை அறியலாம்.
இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் என்பது 1952இல் நடந்தது. அதாவது இந்தியா சுதந்திரம் பெற்று 4 ஆண்டுகள் கழித்து நாம் ஜனநாயக நாடாக மலர்ந்தோம். மக்களாட்சி என்பது உதயமானது.
சுதந்திர இந்தியாவில் அனைவருக்கும் வாக்குரிமை என்பது அளிக்கப்பட்டது. படித்தவன், சொத்து உள்ளவன் என்ற பாகுபாடுகள் உடைத்து எறியப்பட்டன. இன்றைக்கு திரும்பிப் பார்த்தால் உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது.

அது எப்படி என்பதை பிறநாடுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால்தான் புரிந்து கொள்ள முடியும்.
இந்தியாவின் மொத்தம் வாக்காளர்களின் எண்ணிக்கை 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926. அதாவது அமெரிக்காவைவிட கிட்டத்தட்ட 3 மடங்கு பெரிது. அங்கே மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கை 34 கோடிதான். பிரேசில் மக்கள் தொகை 21.6 கோடிதான். ஒரு காலத்தில் நம்மை ஆட்சி செய்த பிரிட்டன் மக்கள் தொகை என்பது 6.8கோடிதான்.
ஆக, உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்வரிசையில் உள்ளது. ஆகவேதான், இந்தியத் தேர்தலை உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக திருவிழா என்கிறோம்.
இன்றைக்கு இந்தியாவின் குடிமகனாக வாக்களிக்க சொத்து தேவை இல்லை. கல்வி அவசியம் இல்லை. ஒருவருக்கு 18 வயது நிறைவடைந்திருந்தால் அவர் வாக்களிக்க தகுதியானவராகி விடுவார்.
அப்படிப் பார்த்தால், இந்தியாவில் 1.8 கோடி இளம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 10 லட்சத்து 92 ஆயிரம் பேர் உள்ளார்கள் என்கிறது தேர்தல் ஆணையம்.
இவர்களின் எதிர்திசையில் உள்ள வயதானவர்கள், அதாவது 85 வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்கள் இந்தியாவில் 82 லட்சம் பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் 6 லட்சத்து 14 ஆயிரம் பேர் உள்ளனர்.

இந்த இளம் தலைமுறையினர்தான், இந்த நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகிறார்கள். அவர்கள் போடப்போகும் ஒவ்வொரு வாக்கும் வரப் போகும் 5 ஆண்டுகளுக்கான நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கப் போகிறது.
இப்படிப்பட்ட வாக்குரிமையின் வலிமையை உணர்ந்ததால்தான், 'தோட்டாக்களின் சக்தியை விட வாக்குச்சீட்டுக்கு வலிமை அதிகம்' என்று சொல்லி இருக்கிறார் ஆப்ரஹாம் லிங்கன்.
அதை உணர்ந்து ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும். 100% வாக்குப் பதிவு என்பது தேர்தல் ஆணையத்தின் கனவாக உள்ளது. கடந்த முறை தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு 73% ஆக இருந்தது. அது இந்த முறை உயரக் கூடும் என்கிறார்கள். வாக்கு சதவீதம் உயர்ந்தால் நாட்டின் வளர்ச்சியும் நம்பிக்கையும் உயரும்!
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications