Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 முத்தான சம்பவங்கள்.. மனசு உடைந்த கூட்டணிகள்.. திமுக எடுத்த மிகப்பெரிய ரிஸ்க்! அப்போ பாஜக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாக பாஜக அல்லது இந்து மத ஆர்வலர்களுக்கு நெருக்கமாக சில முடிவுகளை திமுக எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களில் நடந்த இந்த சம்பவங்கள் திமுகவின் கூட்டணி கட்சிகள் இடையே விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்தன.

பாராட்டு: கருணாநிதி நூற்றாண்டு தினத்தையொட்டி நடந்த நாணய வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதில் பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பாஜக நிர்வாகிகளுக்கு மிகப்பெரிய அளவில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. கருணாநிதியை மிகச் சிறந்த நிர்வாகி என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், அவர் மாநில அரசியல்வாதி இல்லை.. தேசிய தலைவர் என்றும் புகழாரம் சூட்டினார். பாஜக தலைவர் அண்ணாமலை முன் வரிசையில் அமர வைக்கப்பட்டார். பாஜக - திமுக நிர்வாகிகள் நெருக்கமாக காணப்பட்டனர்.

karunanidhi m k stalin annamalai

மரியாதை செய்தார்: கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாடி வாங்க அண்ணாமலை.. என்று ஸ்டாலின் அழைத்தது கவனம் பெற்றுள்ளது. கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த அண்ணாமலையை முன்னால் அழைத்த முதல்வர் ஸ்டாலின் கவனம் பெற்றார். அங்கே நின்ற கனிமொழி சிரித்துக்கொண்டே அவருக்கு வழிவிட்டார்.

இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவரை தேடியது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டாலின் முடிவு: முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை ராஜ் பவனில் கொடுத்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், தனது அமைச்சரவை சகாக்களோடு பங்கேற்றதும், ஆளுநருடன் சிரித்துச் சிரித்துப் பேசியதும் அனைவரது புருவங்களையும் உயரச் செய்திருக்கிறது. முதலில் இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவெடுத்த ஸ்டாலின், அதன்பின் பங்கேற்றது ஏன் என்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

இணக்கம் ஏன்?: ஆளுநரின் தேநீர் விருந்தை ஸ்டாலின் புறக்கணித்தால், கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிடும் நிகழ்வுக்கு ராஜ்நாத் சிங் வரமாட்டார் என்றும், அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் புறக்கணிப்பார்கள் என்றும், புறக்கணிப்பை அண்ணாமலை வெளிப்படையாகச் சொல்வார் என்றும் செய்திகள் வந்தன.. இதனால் தேவையற்ற பிரச்சனை வேண்டாம் . இந்த விவகாரத்தில் சுமுகமாக செல்லலாம் என்று முடிவு எடுத்து இணக்கமாக திமுக சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக இ்ல.கணேசன் வீட்டு விழாவிற்கு மம்தா வருகிறார்கள் என்பதால்.. தானும் வரமாட்டேன் என்று சொன்னார் அண்ணாமலை. ஆனால் அதே அண்ணாமலை இன்று ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதெல்லாம் ஸ்டாலின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டதால்தான் என்று கூறப்படுகிறது.

ஆனால் இதற்கும் கூட்டணிக்கும் தொடர்பில்லை என்றே திமுகவினர், பாஜகவினர் நம்மிடம் கூறுகின்றனர். இந்த இணக்கமான உறவு மத்திய மாநில அரசு இடையே இருக்க வேண்டும். அது முக்கியம். மற்றபடி கூட்டணி எல்லாம் எங்களுக்கு பாஜகவுடன் செட்டாகாது என்று திமுகவினர் கூறுகின்றனர். பாஜகவினரும்.. கூட்டணி எல்லாம் செட்டாகாது.. அதே சமயம் முன்னாள் முதல்வர் கருணாநிதியை மோடி, ராஜ்நாத் சிங் மிக அதிகமாக பாராட்டி விட்டனர். அப்படி பாராட்டாமல் இருந்திருக்கலாம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

முருகன் மாநாடு: இப்படி இருக்க.. பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24, 25ஆம் தேதி நடந்தது. 1 லட்சம் பேருக்கு உணவுகள் ஏற்பாடு மற்றும் வருகை தரும் 1 லட்சம் பேருக்கும் பஞ்சாமிர்தம் , குங்குமம் , விபூதி ,லேமினேசன் செய்யபட்ட முருகன் போட்டோ வழங்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதை தற்போது கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்கின்றன. திமுக இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்தது கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

திமுக கூட்டணி: திமுக கூட்டணியை சேர்ந்த விசிக எம்பி ரவிக்குமார் விமர்சனத்தில், முருகன் மாநாடு வகுப்புவாதத்தையே வலுப்படுத்தும், முத்தமிழ் முருகன் மாநாடு சமயச் சார்பற்ற தமிழ் அடையாளத்தைப் புகுத்தும் நல்ல நோக்கத்தோடு தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டிருந்தாலும் அது வகுப்புவாதத்தைத்தான் வலுப்படுத்தும். ஏனென்றால் தமிழ்க் கடவுள் எனப்படும் முருகன் இந்து அடையாளத்துக்குள் நீண்ட கலத்துக்கு முன்பே உள்வாங்கப்பட்டுவிட்டார். முருகக் கடவுளுக்கு ஆடு அறுத்துப் படையிலிடப்பட்டது என சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகிறது. அப்படி பக்தர்கள் இப்போது படையிலிட முடியாது. முருகனும் மற்ற தமிழ்க் கடவுள்களும் இந்து அடையாளத்துக்குள் எப்போதோ உள்வாங்கப்பட்டுவிட்டனர்.

கல்வியைக் காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. பழனியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நேற்றும் இன்றும் (24-25) நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் இன்று 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றுள், 5 ஆவது தீர்மானமாக : " முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது." எனவும்;

8 ஆவது தீர்மானமாக : " விழாக் காலங்களில் அருள்மிகு கந்தசஷ்டி முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது." எனவும்
12 ஆவது தீர்மானமாக : " முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது." எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கல்வியை சமயச் சார்புடைய தாக்குதல் என்னும் பாஜக அரசின் இந்துத்துவ செயல்திட்டத்தை இது முருகன் பெயரால் செயல்படுத்தும் முயற்சியன்றி வேறல்ல. இந்து சமய அறநிலையத் துறை தனது துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதை எவரும் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால், கல்வித் துறைக்குள் சமயத்தைக் கொண்டுவந்து திணிப்பது சமயச்சார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானதாகும். இது கண்டனத்துக்குரியது, என்றுள்ளார்.

திமுக ரிஸ்க்: சிபிஎம், மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன், மதத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படை ஆகும். எந்த ஒரு மதத்தையும் பரப்புவது, பின்பற்றுவது அரசின் பணியாக இருக்கக் கூடாது. மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பேணி பாதுகாக்கப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையை அழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் துடிக்கிறது. கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பதும், சாதிய படிநிலையை பாதுகாப்பதுமே அவர்களின் நோக்கம்.

இதை முறியடிக்கும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை பணிகளை மேற்கொள்வது நல்லது. மத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும், என்றுள்ளார். கிட்டத்தட்ட கூட்டணி காட்சிகளை ரிஸ்க் செய்து திமுக இப்படி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+