Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாம்புகள் கடித்தால் குதிரை இறக்காதா? பாம்பின் விஷம் செலுத்தி எப்படி மருந்து தயாரிக்கிறார்கள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகின் மிக விஷமுள்ள பாம்பு யானையைக் கூட கொல்லும், ஆனால் ஒரு விலங்கு உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது என்றால் அது குதிரை என்று அண்மையில் ஒரு வதந்தி பரவுவதை சமூக ஊடகங்களில் காண முடிந்தது. ஒரு பாம்பு எவ்வளவு கொடியதாக இருந்தாலும், பயங்கரமான ராஜ நாகம் கடித்தால் கூட, ஒரு குதிரை அதன் கடியால் இறக்காது என்று வதந்திகள் பரவுகிறது. அதேநேரம் இன்னொரு முரண்பாடும் உள்ளதும்.. குதிரைக்கு பாம்பின் விஷம் செலுத்தி தான் மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த செயல்முறையை பற்றி சரியாக தெரியாமல் பலர் கட்டுக்கதைகளை பரப்புகிறார்கள். எனவே அதுபற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

பொதுவாக பாம்புகள் கடித்தால் குதிரைகள் சாகாது என்பது கட்டுக்கதையாகும். ராஜ நாகம் அல்லது ரஸ்ஸல்ஸ் வைப்பர் (Russell's Viper) போன்ற கொடிய பாம்புகள் குதிரையைக் கடித்தால், குதிரைகள் நிச்சயம் உயிரிழந்துவிடும். கொடிய பாம்புகளின் விஷம் வீரியமிக்கது. எனவே குதிரையின் உடல் எடை அதிகம் என்றாலும், அதிக விஷத்தை ஒரே கடியில் செலுத்தக்கூடிய பாம்புகளின் விஷம், குதிரையின் நரம்பு மண்டலம் அல்லது இரத்த ஓட்ட அமைப்பைத் தாக்கி மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வீரியம் மிக்கது.

How do they make medicine by injecting a horse with snake venom

ராஜநாகம்

குறிப்பாக ராஜ நாகம் வெளியிடும் விஷத்தின் அளவு (சராசரியாக 400 மில்லி கிராம்கள் வரை இருக்கும். இந்த அளவு விஷம் குதிரையின் இரத்த ஓட்டத்தில் கலந்தால், அது மிகக் குறைந்த நேரத்திலேயே அதன் நரம்பு மண்டலம் அல்லது இரத்த ஓட்ட அமைப்பைத் தாக்கி மரணத்தை ஏற்படுத்திவிடும். எனவே மனிதர்களைப் போலவே, பாம்புக் கடிக்கு உள்ளான குதிரைகளுக்கும் உடனடியாக விஷமுறிவு மருந்து சிகிச்சை கட்டாயம் அளிக்கப்பட வேண்டும். சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், குதிரை இறந்துவிடும் வாய்ப்பு மிக அதிகம் ஆகும்.

பாம்புக்கடி

சரி, அப்புறம் எப்படி குதிரைக்கு பாம்பின் விஷம் செலுத்தி விஷ முறிவு மருந்து உருவாக்கப்படுகிறது.. இந்த முரணை பற்றி பார்ப்போம். குதிரைகள் பாம்புக்கடிக்கு எதிர்ப்பு சக்தி கொண்டவை கிடையாது அவை விஷமுறிவு மருந்து தயாரிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன ஏனெனில் குதிரையின் உடலில் பாம்புக்கடிக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்க முடியும், இயற்கையாகவே விஷத்தை எதிர்க்க முடியாது. எப்படி பசுவில் இருந்து பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தார்களோ, அதுபோல் தான்.. ஆனால் இந்த பிராசஸ் சற்று வேறுபட்டது.

பாம்பின் விஷம்

குதிரையில் இருந்து பாம்புக்கடிக்கு விஷ முறிவு பமருந்து தயாரிக்க வேண்டும் என்றால், தேவையான பாம்புகளிடம் இருந்து அவற்றின் விஷம் மிகவும் கவனமாகப் பிரித்தெடுக்கப்பட்டு, உலர வைக்கப்பட்டு, ஆய்வகத்தில் தூய்மைப்படுத்தப்படும். இந்த விஷம் பொதுவாகக் குறைந்த செறிவுள்ள உப்புக் கரைசலில் கலக்கப்படும்.

ஆன்டிபாடிகள் உருவாகும்

பின்னர் குதிரையின் உடலுக்குள் செலுத்துத்தப்படும். ஆனால் அப்படியே செலுத்தமாட்டார்கள். கவும் குறைக்கப்பட்ட மற்றும் வீரியம் நீக்கப்பட்ட பாம்பின் விஷம் தான் ஆரோக்கியமான குதிரையின் உடலுக்குள் செலுத்தப்படும். அப்போது குதிரையின் நோய் எதிர்ப்பு அமைப்பு இந்த விஷத்தை ஒரு வெளியாட்களாக அடையாளம் கண்டு, அதற்கு எதிராகப் போராடத் தொடங்கும். இதன் காரணமாக குதிரையின் இரத்தத்தில், அந்த குறிப்பிட்ட விஷத்தின் நச்சுத்தன்மையை நடுநிலைப்படுத்தக்கூடிய ஆன்டிபாடிகள் அல்லது நச்சுமுறிவுகள் அதிக அளவில் உருவாகின்றன. இந்தச் செயல்முறை பல வாரங்கள் அல்லது மாதங்கள் நீடிக்கும். விஷத்தின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும்.

எப்படி குதிரையில் இருந்து பாம்பு விஷ முறிவு தயாரிக்கிறார்கள்

ஒரு கட்டத்தில் குதிரையின் உடலில் தேவையான அளவு ஆன்டிபாடிகள் உருவாகிவிட்டன என்று உறுதி செய்யப்பட்ட பிறகு, குதிரைக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படாத வகையில், குறிப்பிட்ட அளவு இரத்தம் அதன் உடலில் இருந்து பாதுகாப்பாகச் சேகரிக்கப்படும். பின்னர் சேகரிக்கப்பட்ட இரத்தம் ஆய்வகத்தில் பிராசஸ் செய்யப்படும். அதில் முக்கியமாகப் பிளாஸ்மா பிரித்தெடுக்கப்படும். அந்த பிளாஸ்மாவில் இருந்து, விஷத்திற்கு எதிராகப் போராட உருவாக்கப்பட்ட ஆன்டிபாடிகள் அடங்கிய புரோட்டீன்கள் பிரித்தெடுக்கப்படும். இந்தப் புரோட்டீன்கள் மேலும் சுத்திகரிக்கப்பட்டு, நீர்த்துப்போகச் செய்து, நிலைப்படுத்தப்பட்டு, நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படும். இந்தத் தூய்மைப்படுத்தப்பட்ட திரவத்தையே பாம்புக்கடிக்கான விஷமுறிவு மருந்து என அழைக்கிறார்கள். இதுவே மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் பாம்புக் கடியை எதிர்த்துச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

குதிரையில் ஏன் தயாரிக்கிறார்கள்

குதிரைகள் மிகவும் பெரியவை, எனவே அவை ஒருமுறை அதிக அளவு இரத்தத்தைக் கொடுக்க இயலும். அதுமட்டுமல்ல.. குதிரையின் நோய் எதிர்ப்பு அமைப்பு மிகவும் சக்தி வாய்ந்தது. அதிக அளவில் ஆன்டிபாடிகளை உருவாகிறது. எனவே தான் குதிரையை விஷ முறிவுக்கு பயன்படுத்துகிறார்கள். குதிரை மிகவும் கவனமாக பராமரித்து தான் விஷமுறிவு மருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. எனவே பாம்பு குதிரை தொடர்பான வாட்ஸ் அப் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் கட்டுக்கதைகளை அப்பபடியே நம்பிவிட வேண்டாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+