4 பக்கத்தில் பாய்ந்து வந்த அம்பு! "ரீ ஸ்டார்ட்" பொத்தானை அழுத்திய அப்பாவு! வேலுமணி சிக்கியது எப்படி?
சென்னை: மாஜி அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் நடக்கும் ரெய்டுக்கு பின் சபாநாயகர் அப்பாவு கொடுத்த முக்கியமான புகார் ஒன்றுதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவின் டாப் தலைவர்களில் ஒருவரான எஸ்.பி வேலுமணி தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் குறி வைக்கப்பட்டு வருகிறார். அடுத்தடுத்து வழக்கு.. அடுத்தடுத்து புகார் என்று தொடர்ந்து எஸ்.பி வேலுமணி பல்வேறு விசாரணைகளில் சிக்கி உள்ளார். சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட டெண்டர்களில் முறைகேடு செய்ததாக எஸ்பி. வேலுமணி மீது புகார் உள்ளது.
இதுதான் அவருக்கு எதிராக இருக்கும் மெயின் புகார். இதில்தான் தீவிரமாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதை அடிப்படையாக வைத்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணிக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

ரெய்டு
60 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து மொத்தம் எஸ். பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதில் எப்போது வேண்டுமானாலும் கைது நடவடிக்கைகள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.பி வேலுமணி அவருக்கு நெருக்கமான அன்பரசன், கே. சந்திரபிரகாஷ், ஆர். சந்திரசேகர், ஆர் முருகேஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் முதல்வர் ஸ்டாலினும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.

புகார்
இதில் முக்கியமான புகார் கொடுத்த நபர் என்றால் அது திருவேங்கடம்தான். கான்டிராக்டர் திருவேங்கடம் கொடுத்த புகார் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து திமுக ஆர்.எஸ் பாரதி சார்பாக கொடுக்கப்பட்ட புகாரில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன்பின் அறப்போர் இயக்கம் தொடுத்த வழக்கும் இதில் முக்கிய பங்காற்றியது. இதன் விளைவாக முதல் ரெய்டு நடந்தது. இந்த நிலையில் மீண்டும் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இரண்டாவது முறையாக இதே வழக்கின் அடிப்படையில் ரெய்டு நடத்தப்பட்டது.

மூன்றாவது வழக்கு
இந்த ரெய்டில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் 3வது வழக்கு ஒன்றும் எஸ்.பி வேலுமணி மீது போடப்பட்டது. ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்துள்ள பதில் மனுவில் எஸ்.பி வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்ய கூடாது என்று தெரிவித்துள்ளது. அதில், விசாரணை நடைபெற்று வருகிறது. எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்த போது மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்துள்ளார். ரெய்டில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது, என்று கூறப்பட்டது.

மூன்றாவது ரெய்டு
இந்த நிலையில்தான் மீண்டும் எஸ்.பி வேலுமணி லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் சிக்கி உள்ளார். 5 மாவட்டங்களில் தெரு விளக்குகளை எல்.இ.டி பல்புகள் ஆக மாற்றியதில் 500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக இவர் மீது புகார் உள்ளது. ஏற்கனவே ஆர்.எஸ்,பாரதி, அறப்போர் இயக்கம், கான்டிராக்டர் திருவேங்கடம் ஆகியோர் தொடுத்த அம்புகள் வேலுமணிக்கு எதிராக பாய்ந்தது. இந்த முறை சபாநாயகர் அப்பாவு தொடுத்த அம்பு காரணமாக ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. சில நாட்களாக "பாஸில்" இருந்த ரெய்டை அப்பாவு கொடுத்த புகார் மீண்டும் ரீ ஸ்டார்ட் செய்துள்ளது.

மீண்டும் ரெய்டு
சபாநாயகராகும் முன் அப்பாவு 2019, 2020ஆம் ஆண்டுகளில் வேலுமணிக்கு எதிராக புகார் கொடுத்தார். எல்இடி விளக்குகள் வாங்குவதில் அவர் ஊழல் செய்துவிட்டார் என்று புகார் கொடுத்தார். சந்தை விலையை விட அதிக விலைக்கு வேலுமணி எல்இடி பல்புகளை வாங்கியதாக அப்பாவு மூலம் புகார் வைக்கப்பட்டு, அது தொடர்பாக ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அரசுக்கு இதில் 74 கோடி ரூபாய் நஷ்டம் என்றும் தெரிய வந்துள்ளது. அவருக்கு சொந்தமான 45 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. இந்த வழக்கில்தான் தற்போது வேலுமணி சிக்கி உள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications