சந்திரபாபு நாயுடு முன்ன மாதிரி இல்லை.. தமிழ்நாட்டுக்கு வந்து விழுந்த லக்.. இது யோசிக்காத அதிர்ஷ்டம்
சென்னை: ஆந்திர பிரதேச முதல்வராக சமீபத்தில் சந்திர பாபு நாயுடு பொறுப்பேற்றார். ஆனால் அவர் தன்னுடைய முந்தைய ஆட்சி காலத்தில் இருந்தது போல செயல்படவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. முக்கியமாக.. தமிழ்நாடு பிஸ்னஸ் வட்டாரத்தில் சந்திர பாபு நாயுடுவின் செயல்பாடு புதிய விதமான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அது என்ன விவாதம்.. தமிழ்நாட்டிற்கு இதனால் என்ன விதமான லக் வந்துள்ளது என்று பார்க்கலாம்.
ஆந்திர பிரதேச முதல்வராக சமீபத்தில் சந்திர பாபு நாயுடு பதவி ஏற்ற போது.. பலரும் கூறிய விஷயம்.. ஆந்திர பிரதேசத்திற்கு மீண்டும் முதலீடுகள் வரப்போகிறது . நவீன ஆந்திர பிரதேசத்தை வடிவமைத்தவர் சந்திர பாபு நாயுடு. அவர் திரும்பி வந்தால் மீண்டும் ஆந்திராவை நோக்கி முதலீடுகள் வரும். ஆந்திர பிரதேசத்திற்கு வெளிநாட்டில் இருந்து முதலீடுகளை கொண்டு வந்தவர்.. என்றெல்லாம் கருத்துக்கள் வைக்கப்பட்டன. இதனால் ஆந்திர பிரதேசம் மீண்டும் முதலீடுகளை நோக்கி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏனென்றால் தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆகியவை தொடர்ந்து முதலீடுகளை ஈர்த்து வருகிறது. அப்படி இருக்க ஆந்திர பிரதேசமும் இந்த கோதாவில் இறங்க போகிறது.. இத்தனை காலம் ஜெகன் மோகன் ஆட்சியில் அது மிஸ்ஸானது. முக்கியமாக முதலீடுகள் புதிதாக வரவில்லை. சந்திர பாபு நாயுடு முதலீடுகளுக்கு ஏற்ற முதல்வர்.. இதனால் முதலீடுகள் வரும் என்றெல்லாம் கருத்துக்கள் வைக்கப்பட்டன.
சந்திர பாபு நாயுடு மாறிவிட்டார்: ஆனால் சந்திர பாபு நாயுடு ஆட்சிக்கு வந்த பின் பெரிதாக முதலீடுகள் மீது கவனம் செலுத்தவில்லை. சமீபத்தில் செமி கண்டக்டர் முதலீடு எதுவும் ஆந்திராவிற்கு செல்லவில்லை. ஐடி முதலீடுகள், பாக்ஸ்கான் முதலீடுகள் எதுவும் ஆந்திர பிரதேசத்திற்கு செல்லவில்லை.
ஆனால் அம்மாநில அரசு முதலீட்டில் கவனம் செலுத்தாமல்.. அங்கே லட்டு அரசியல் உள்ளிட்ட மத ரீதியிலான விவகாரங்களில் ஈடுபட்டு உள்ளார். ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதியில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
2019 முதல் 2024 வரையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. உலகம் முழுக்க மக்களால் மிகவும் மதிக்கப்படும் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி உள்ளனர். திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில் நமது மிகவும் புனிதமான கோவில்.
ஜெகன் நிர்வாகம் திருப்பதி பிரசாதத்தில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஜெகன் மற்றும் ஒய்எஸ்ஆர்சிபி அரசை பார்த்து வெட்கப்படுகிறேன் என்று சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
அவசியம் இல்லை: இந்த விவகாரத்தில் இதுவரை எந்த விதமான சப்ளையர்களும் கைது செய்யப்படவில்லை. யார் மீதும் ஆக்ஷன் எடுக்கப்படவில்லை. ஆனால் மாறி மாறி தியானம், பூஜை, சடங்கு என்று அம்மாநில அரசு பிசியாக இருக்கிறது. முதல்வர், துணை முதல்வர் தொடங்கி எதிர்க்கட்சி தலைவர் வரை எல்லோரும் இதில் தீவிர கவனம் செலுத்துவதால் முதலீடுகள் பெரிய விவகாரமாக அங்கே மாறவில்லை.
இதனால் பெரும்பாலும் முதலீடுகள் எப்போதும் போல தமிழ்நாடு, கர்நாடகாவை நோக்கியே எப்போதும் போல வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications