பெண்களுக்கு மாதம் ரூ.3000.. தேசிய அளவில் புதிய வடிவம் எடுக்கும் மகளிர் உரிமைத்தொகை.. செம முடிவு
சென்னை: தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட உரிமை தொகை திட்டம் நாடு முழுக்க பல மாநிலங்களில் அமலுக்கு வர தொடங்கி உள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டப் பேரவையின் 90 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 3 கட்டங்களாக 2024 செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 1 வரை சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. வாக்குகள் எண்ணப்பட்டு அக்டோபர் 8, 2024 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ்-தேசிய மாநாட்டு (NC) கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஐந்து முக்கிய உத்தரவாதங்களை நிறைவேற்றும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறிவித்துள்ளார்.

காங்கிரஸின் ஐந்து வாக்குறுதிகள் பின்வருமாறு:
1) ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹25 லட்சம் வரையிலான காப்பீட்டுத் திட்டம்.
2) காஷ்மீரி பண்டிட் பிரிவினருக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவது.
3) ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பெண் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹3,000 வழங்கப்படும். அதாவது உரிமைத்தொகை வழங்கப்படும். பெண்களுக்கு ₹5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
4) பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஒரு நபருக்கு 11 கிலோ தானியங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
5) OBC கள் அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளைப் பெற இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்படும் .
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 8 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
உரிமை தொகை திட்டம்: இதன் மூலம் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட உரிமை தொகை திட்டம் நாடு முழுக்க பல மாநிலங்களில் அமலுக்கு வர தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டின் திட்டங்கள் பல மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக மாறி உள்ளன.
உதாரணமாக மதிய உணவு திட்டம், பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட பல திட்டங்கள் நாடு முழுக்க கவனம் பெற்றது. அந்த வகையில் தற்போது மகளிர் உரிமை தொகை திட்டம் நாடு முழுக்க பல மாநிலங்களில் அமலுக்கு வர தொடங்கி உள்ளன.
தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் கர்நாடகா, இமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டின் இந்த திட்டம் நாடு முழுக்க பல நாடுகளுக்கு ரோல் மாடல் திட்டமாக மாறி உள்ளது.
தமிழ்நாடு முன்னோடி: 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது. குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.
சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவதுண்டு. உண்மையில், ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ப பணிபுரிந்து, பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் ஆகிய பெண்களின் பல மணிநேர உழைப்பு மறைந்து இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
திட்டத்தின் நோக்கம்: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்காகவும், அவரவர் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் காக்கவும் இந்தச் சமூகத்திற்காகவும், வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் பெண்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த உழைப்புக்கு ஊதியம் கணக்கிடப்பட்டிருந்தால், குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெண்கள் பெயரும், சட்டம் இயற்றாமலேயே இடம் பெற்றிருக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications