Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

8 நாள் கஸ்டடி! ஹாஸ்பிட்டலில் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை எப்படி நடக்கும்? பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இன்று முதல் வரும் 23ம் தேதி வரை 8 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சென்னை நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. தற்போது அவர் புழல் சிறை காவலர்கள் கண்காணிப்பில் மருத்துவமனையில் உள்ள நிலையில் அமலாக்கத்துறை விசாரணை எப்படி நடக்கும் என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி முறைகேடு செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்த நிலையில் அமலாக்கத்துறை விசாரித்து அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

How Enforcement Dirctorate will investigate with Minister Senthil Balaji in Hospital?

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜி நெஞ்சுவலிப்பதாக கூறி கதறி துடித்தார். இதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்திய பரிசோதனையில் இதயத்துக்கான ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. மேலும் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்காக செந்தில் பாலாஜி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முன்னதாக செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி உத்தரவிட்டு இருந்தார். இதனால் புழல் சிறை காவலர்கள் கண்காணிப்பில் காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தொடர்பான 2 வழக்குகள் விசாரணைக்கு வந்தன. ஒன்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கு. இன்னொன்று செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை காவலில் விசாரணை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கு.

இந்த 2 வழக்குகளும் நீதிபதி அல்லி விசாரித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கிற்கு ஆஜரானார். இந்த வேளையில், இன்னும் 3 நாட்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டி உள்ளது. இதனால் அமலாக்கத்துறைக்கு காவல் வழங்கினால் அவரது உடல் நலம் பாதிக்கப்படும் என வாதிடப்பட்டது. மாறாக அமலாக்கத்துறை சார்பில், செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் அவரிடம் விசாரணை நடத்த 15 நாட்கள் அனுமதி வழங்க வேண்டும் என்ற வாதம் வைக்கப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை வரும் 23ம் தேதி வரை 8 நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இருப்பினும் விசாரணையை மருத்துவமனையிலேயே மேற்கொள்ள வேண்டும் என நீதிபதி அல்லி கூறிய நிலையில் வரும் 23ம் தேதி மாலையில் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியை ஆஜர்ப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அதோடு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதன் மூலம் இன்று முதல் வரும் 23ம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அமலாக்கத்துறையினர் துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தற்போது செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளதால் அவருக்கு புழல் சிறை காவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளதால் சிஐஎஸ்எப் எனும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் செந்தில் பாலாஜியின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் செந்தில் பாலாஜிக்கு இன்னும் 3 நாட்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதனால் அதற்கு முன்பாக விசாரணையை தீவிரப்படுத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இன்று இரவு அல்லது நாளை காலை முதல் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் சந்தித்து வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் விசாரணைக்கு முன்பாக செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்த விபரங்களை டாக்டர்களிடம் அமலாக்கத்துறை கேட்க வாய்ப்புள்ளது. தற்போது செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு மருத்துவமனை தனியாருக்கு சொந்தமானது என்பதால் செந்தில் பாலாஜியின் உடல் நலன் குறித்த விபரங்களை அறிய தனியாக டாக்டர்களை அமலாக்கத்துறை பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுபற்றிய இறுதி முடிவு என்பது அமலாக்கத்துறையின் கையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+