கூகுளால் ஏற்பட்ட மாற்றம்.. சேலம் 8 வழி சாலை வழக்கில் எப்படி திருப்பம் ஏற்பட்டது தெரியுமா?
சேலம் 8 வழி சாலை வழக்கில் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததற்கு பின் கூகுளும் முக்கிய காரணமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

சென்னை: சேலம் 8 வழி சாலை வழக்கில் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததற்கு பின் கூகுளும் முக்கிய காரணமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய அளவில் எதிர்ப்புகளை சந்தித்த சேலம் 8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த திட்டத்தில் நிலத்தை கையகப்படுத்தியதை மட்டும் நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை.
மாறாக மொத்த திட்டத்தையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முக்கியமாக தமிழக அரசு இது தொடர்பாக வெளியிட்ட அரசாணையையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

எப்படி இருக்கும்
பொதுவாக ஒரு சாலை திட்டம் கொண்டு வரப்படும் போது அது தொடர்பான கள ஆய்வுகள் நடத்தப்படும். அரசோ, இல்லை அரசு சார்பாக தனியார் நிறுவனமோ கள ஆய்வுகளை நடத்தும். ஆனால் இந்த சாலை திட்டத்தில் அப்படி எந்த விதமான சோதனையும் நடத்தப்படவில்லை.

அதே நாள்
திட்டத்தை அறிவித்த அதே நாளில் ஆய்வுகள் இன்றி பணிகளை தொடங்கி இருக்கிறார்கள். வன ஆய்வு, சுற்றுசூழல் ஆய்வு, வீடுகளில் ஆய்வு என்று எதையும் செய்யவில்லை. திட்டத்தில் கடைசி நேரத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள். இதுதான் இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது.

அனுமதி இன்றி
எந்த அனுமதியும் பெறாமல் மூன்று மாதத்தில் இது செய்யப்பட்டு இருக்கிறது. சேலம் முதல் சென்னை வரை கூகுள் மேப்பில் மட்டும் ஆய்வு செய்து அதை அறிக்கையாக சமர்ப்பித்து இருக்கிறது. கூகுள் மேப்பில் இருக்கும் விவரங்களை வைத்து ஆய்வு அறிக்கையாக சமர்ப்பித்து இருக்கிறார்கள்.

என்ன ஆய்வு
எந்த கள ஆய்வும் இல்லாமல் இதை மட்டும் சமர்ப்பணம் செய்துள்ளனர். இதனால் நீதிமன்றம் தமிழக அரசின் வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. வெறும் கூகுள் புள்ளி விவர ஆய்வுகளை வைத்து எல்லாம் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

சரியான திசை
இதுவரை இந்த வழக்கு விவசாயிகளுக்கு எதிரான திசையில்தான் சென்று கொண்டு இருந்தது. ஆனால் தமிழக அரசு முறையான ஆய்வுகளை செய்யவில்லை என்றபின்தான் இந்த வழக்கின் திசை மாறியது. அதற்கு இந்த கூகுள் அறிக்கையும் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications