பெரிய சிக்கலாக முடியும்.. உளவுத்துறை ரிப்போர்ட்.. நிர்மலா தூத்துக்குடிக்கு பறப்பது ஏன்? இதுதான் காரணம்
சென்னை: தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென பார்வையிட முடிவு செய்தது ஏன் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
மழை வெள்ளம் பாதிப்புகள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மழை வெள்ள பாதிப்புகளை ஆராய்ந்த மத்திய அரசு குழு தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்திருந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்த போது, தென்மாவட்ட வெள்ளப் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. ஒருநாள் முழுவதும் டெல்லியில் இருந்து I.N.D.I.A கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போகிறபோக்கில் சந்தித்துக்கொள்ளலாம் என்ற தோரணையில் பிரதமர் மோடியை இரவில் சந்தித்தார் என் மக்களை நான் பார்க்க வேண்டும் என்று கூட்டணியினரிடம் சொல்லிவிட்டு, 'என் மண் என் மக்கள்'தான் முக்கியம் என்று முதலமைச்சர் சென்றிருக்க வேண்டாமா?
ரூ4,000 கோடி செலவு செய்திருக்கிறோம். என்ன மழை வந்தாலும் சென்னைக்கு ஒன்றும் ஆகாது' என ஒரு தமிழ்நாடு அமைச்சர் பேசினார். ஆனால், சென்னையில் வெள்ளம் வந்த பிறகு, 42% தொகை மட்டுமே செலவு செய்தோம் என்கிறார். வானிலை ஆய்வு மையம் துல்லியமாக முன்னறிவிப்பு செய்யவில்லை என்று குற்றம்சாட்டுபவர்கள், ஏன் ரூ4,000 கோடி பற்றி தவறான தகவலை கொடுத்தார்கள்?
ரூ.6,000 நிவாரணத் தொகையை வங்கிக்கணக்கு மூலம் அளிக்கலாமே; ஏன் ரொக்கமாக வழங்குகிறீர்கள்? ரூ.6,000 ரொக்கமாக வழங்கியதற்கு பதில் வங்கியில் செலுத்தினால் வெளிப்படைத்தன்மை இருக்கும். ஏன் அந்த வெளிப்படைத்தன்மை இல்லை, என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
என்ன காரணம்: இந்த நிலையில்தான் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் நாளை பார்வையிட உள்ளார். நாளை தூத்துக்குடி சென்று அங்கே வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளார். தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென பார்வையிட முடிவு செய்தது ஏன் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. அவரின் இந்த முடிவிற்கு பின் முக்கியமான காரணங்கள் உள்ளதாம்.
தென்மாவட்ட வெள்ளப் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. அப்படி ஒரு வழக்கம் இல்லை. எந்த மாநிலத்திற்கும் இப்படி அறிவித்தது இல்லை என்று அவர் கூறினார். அதோடு அவர் பேட்டியில் கூறிய விஷயங்கள், பேசிய விஷயங்கள், அவர் பேசிய தொனி ஆகியவை கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
உளவுத்துறை: இந்த நிலையில் மத்திய உளவுத்துறை சார்பாக டெல்லிக்கு முக்கிய ரிப்போர்ட் சென்றுள்ளது. அந்த பேட்டி பாஜகவினருக்கு பிரஷரை கொடுத்துள்ளது. மத்திய அரசுக்கு எதிராக இது மாறும். முக்கியமாக தென் மாவட்டத்தில் பாஜகவிற்கு எதிராக மாறும்.
நெல்லை, தூத்துக்குடியில் போட்டியிட பாஜக முயன்று வருகிறது. ஆனால் அங்கே மத்திய அரசு நிர்வாகிகள் செல்லாமல் இருப்பது அரசுக்கு பெரிய பிரஷரை கொடுக்கும். இதில் இருந்து தப்பிக்க ஒரே வழி அமைச்சர் ஒருவர் அங்கே செல்ல வேண்டும் என்று மத்திய உளவுத்துறை சார்பாக டெல்லிக்கு முக்கிய ரிப்போர்ட் சென்றுள்ளது. இதையடுத்து டெல்லி ஆலோசனையின் பெயரில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடிக்கு செல்ல முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
-
இந்தியன் வங்கியின் மைக்ரோ கிரெடிட் கார்டு வழங்கும் விழா… மும்பையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications