கரண்ட் இல்லாத நேரங்களிலும் இயங்குவதுதான் இன்வெர்ட்டர் ஏசியா?
சென்னை: இன்வெர்ட்டர் ஏசிக்கும் நான் இன்வெர்ட்டர் ஏசிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ளுங்கள்.
கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. சீலிங் பேன், டேபிள் பேன் ஓடிக் கொண்டிருந்தாலும் காற்று பற்றவே இல்லை என்பதுதான் புலம்பலாக இருக்கிறது. ஏசி இருந்தாலும் கரண்ட் பில் அதிகரிக்கும் அச்சம் இருக்கிறது.

இப்போதாவது ஏசியில் நாம் வெக்கையை சமாளிக்கிறோம். அந்த காலத்தில் ஏசியாவது ஒன்னாவது! எதுவும் கிடையாது! வீடுகள் தோறும் மரம் வளர்ப்பார்கள். அதிலும் வேப்ப மரமும் புங்கை மரமும் கட்டாயம் வளர்ப்பார்கள்.
அது போல் தோட்டத்திலும் வளர்ப்பார்கள். இதனால் இந்த மரங்களுக்கு கீழே கீற்றுக் கட்டிலை போட்டுக் கொண்டு உட்கார்வதோ படுப்பதோ சொர்க்கமாக இருக்கும். ஆனால் இப்போதும் சில கிராமங்கள் மட்டுமில்லை நகர்ப்புறங்களில் ஏசியை பயன்படுத்தாமல் முடிந்தவரை இயற்கை காற்றை சுவாசிக்கிறார்கள்.
அந்த வகையில் ஏசி இயந்திரத்தை கூட இன்ஸ்டால்மென்ட்களில் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் மின்சார கட்டணத்தை செலுத்துவதுதான் மிகப் பெரிய கஷ்டமாக இருக்கிறது. இதற்கு அந்த வெக்கையே எவ்வளவோ தேவலாம் என்ற நிலை ஏற்படுகிறது. இரவு நேரங்களில் என்னதான் ஏசியை ஆப் செய்து ஆன் செய்தபடியே இருந்தாலும் கரண்ட் பில் கையை கடிக்கத்தான் செய்கிறது.
ஏசியில் டெம்பரேச்சர் 16, 17 உள்ளிட்டவைகளில் வைத்துவிட்டால் கரண்ட்பில் எகிறும். இதனால் 24, 25 டிகிரியில் temperature வைத்துக் கொண்டால் புழுக்கமாக இருக்காது. கரண்ட் பில்லும் மிச்சமாகும். ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஏசியை சர்வீஸ் செய்ய வேண்டும்.
அது போல் ஸ்லீப் மோட் இருக்கும் ஏசியை வாங்கினாலும் அதில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ஆப் செய்வது என்ற ஆப்ஷனை செட் செய்துவிட்டாலும் கரண்ட் பில் ஏறாது. இதனால் 36 சதவீதம் மின்சார கட்டணம் குறையும். இன்வெர்ட்டர் ஏசி குறித்து மக்களுக்கு புரிதல் இல்லாத நிலை உள்ளது. இன்வெர்ட்டர் என்றால் கரண்ட் இல்லாத நேரங்களில் சேமித்து வைத்த கரண்ட் டை வைத்து ஃபேன், லைட் ஆகியவற்றை இயக்கிக் கொள்ளலாம்.
அது போல் இன்வெர்ட்டர் ஏசி என்றால் கரண்ட் இல்லாத நேரங்களிலும் ஏசியை இயக்கலாம் என மக்கள் தவறாக நினைக்கிறார்கள். அதாவது சாதாரண ஏசிகளில் Alternate Current AC பயன்படுத்தப்படுகிறது. இதில் கூலிங் ஃபேனின் ஸ்பீடை உள்ளுக்குள்ளேயே குறைக்காது. இதனால் எப்போதும் ஏசி ஒரே ஸ்பீடில் ஓடுவதால் அதிக அளவு கரண்ட் பில் இழுக்கும். ஆனால் இன்வெர்ட்டர் ஏசிக்களில் அப்படி இல்லை.
Direct Current (DC) பயன்படுத்தப்படுகிறது. இதில் புல்லிங் திறன் அதிகமாக இருக்கும். இன்வெர்ட்டர் ஏசியில் கம்ப்ரெஸ்ஸரின் ஸ்பீடு மாறுபட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் இன்வெர்ட்டர் ஏசி கம்ப்ரெஸரில் ஃபிக்ஸடு ஸ்பீடு இருக்கும். ஃப்க்ஸடு கம்ப்ரச்சரை விட variable speed compressorரே சிறந்தது. வேரியபிள் கம்ப்ரசரில் குறைந்த அளவு சப்தம் கேட்கும்.
இன்வெர்ட்டர் ஏசியானது அறையின் வெப்பநிலைக்கு ஏற்க கம்ப்ரச்சரின் மோட்டர் ஸ்பீடை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் திறன் உள்ளது. இன்வெர்ட்டர் ஏசிக்களில் கூலிங்கிற்காக ஆர் 32 என்பது பயன்படுத்தப்படுகிறது. இது சிறந்த கூலிங் திறனை கொடுக்கும். சுற்றுச்சூழலுக்கு குறைந்த அளவுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை உமிழும். ஆனால் நான் இன்வெர்ட்டர் ஏசியில் பயன்படுத்தப்படும் கூலிங் ஏஜென்ட் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ரசாயனங்களை உமிழும். ஏசி கரண்ட் பயன்படுத்துவதற்கு பதிலாக டிசி கரென்ட் பயன்படுத்தப்படுவதால் அதற்கு இன்வெர்ட்டர் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications