ரூ.42,14,31,50,000 போச்சு.. பாகிஸ்தானின் கழுத்தை நெரித்த இந்தியா.. சைலண்ட் அட்டாக்.. தரமான சம்பவம்
டெல்லி: இந்தியா மேற்கொண்டு உள்ள வர்த்தக தடை மற்றும் வர்த்தக ரீதியான தாக்குதல்களால் பாகிஸ்தானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானுக்கு விரைவில் இந்தியா ராணுவ ரீதியாக பதிலடி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக நிர்வாக ரீதியாக, பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக இந்தியா அட்டாக் செய்து வருகிறது . அதாவது பாகிஸ்தான் அரசியலில் மறைமுகமாக ஆட்டத்தை ஏற்படுத்துவது. அங்கே அரசியல் நிலையற்ற தன்மையை உளவாளிகள் மூலம் ஏற்படுத்துவது. ஏன் அரசையே கூட கவிழ்ப்பது பல நடவடிக்கைகளை இந்தியா விரைவில் மேற்கொள்ளலாம். இது இந்தியாவிற்கு கைவந்த கலை. இதனால் இந்தியா விரைவில் அது போன்ற தாக்குதல்களையும் கூட தொடங்கும்.
அதில் முதல் கட்டமாக பாகிஸ்தானின் கழுத்தை நெறிக்கும் விதமாக.. பாகிஸ்தான் உடன் முற்றிலுமாக வர்த்தக நடவடிக்கைகளை இந்தியா நிறுத்தி உள்ளது. அதாவது பாகிஸ்தான் உடன் இந்தியா கொண்டிருந்த அனைத்து விதமான வர்த்தக உறவும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
1. பாகிஸ்தான் ஏற்றுமதி தடை
பாகிஸ்தான் உடன் வர்த்தக நிறுத்தம் என்றால் மொத்தமாக ஏற்றுமதி நிறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் இறக்குமதி நிறுத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தானுக்கு இரண்டு வகையில் இந்தியா ஏற்றுமதி செய்தது. ஒன்று நேரடி ஏற்றுமதி . ஒன்று துபாய் போன்ற மத்திய கிழக்கு நாடுகள் வழியாக ஏற்றுமதி. அதேபோல் இறக்குமதியும் இந்த இரண்டு வழிகளில் நடத்தப்பட்டது. இது இரண்டும் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது.
2. முக்கிய துறைகள் காலி
இந்த தடைகள் காரணமாக இரண்டு தரப்பிற்கும் இடையே 100% வர்த்தகம் நிறுத்தப்பட்டு உள்ளது. முக்கியமாக உரத்துறை, மருந்துவ துறை, ஆடைகள் துறை, ஸ்டீல் துறை, பர்னிச்சர் துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த துறைகள் இந்திய பொருட்கள் இல்லாமல் தள்ளாட தொடங்கி உள்ளன. முக்கியமாக மருத்துவ துறை கடுமையாக தள்ளாடி வருகிறது.

3. இறக்குமதி தடை
பாகிஸ்தானில் இருந்து 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலர் பழங்கள் மற்றும் ரசாயனங்கள் உள்ளிட்ட பொருட்கள் இடைத்தரகர் நாடுகள் வழியாக இந்தியாவிற்குள் நுழைவதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு நேரடியாக அனுப்பப்பட்ட 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் தடை செய்யப்பட்டன. இவற்றில் கணிசமான பகுதி இப்போது மாற்று நாடுகள் வழியாக திருப்பி விடப்படுகிறது. கணிசமான அளவு பொருட்கள் மூன்றாம் நாடுகள் வழியாக இந்தியாவிற்குள் நுழைகின்றன. குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கை வழியாக, கொண்டு வரப்பட்டன. இவையும் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் கடந்த சில வாரங்களில் மட்டும் பாகிஸ்தானுக்கு 4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
4. பாகிஸ்தான் விவசாயிகள் கதறல்
பாகிஸ்தானின் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பழங்கள், உலர் பேரீச்சம்பழம், தோல் மற்றும் ஜவுளி உள்ளிட்ட பாகிஸ்தானிய பொருட்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மறு பேக்கேஜிங் செய்யப்பட்டு இந்தியா வருகிறது. அதே நேரத்தில் ரசாயனங்கள் மற்றும் சில சிறப்புப் பொருட்கள் சிங்கப்பூர் வழியாக இந்தியா வருகின்றன. பாகிஸ்தானில் இருந்த இந்தோனேசிய வழியாக சிமென்ட், சோடா சாம்பல் மற்றும் ஜவுளி போன்றவை வருகின்றன. கூடுதலாக, உலர் பழங்கள், உப்பு மற்றும் தோல் பொருட்கள் இலங்கை வழியாக பதப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. இவை எல்லாம் தடை செய்யப்பட்டதால் பாகிஸ்தானின் விவசாயிகள், நெசவாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
5. மருத்துவ துறை காலி
பாகிஸ்தான் உடன் வர்த்தகத்தை மொத்தமாக இந்தியா கைவிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் பல துறைகள் கடுமையான விளைவுகளை, சரிவுகளை சந்திக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக அங்கே மருந்துகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளதால் மருத்துவ அவசரநிலை பிறப்பிக்கும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் சுகாதார அதிகாரிகள் இதனால் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர். பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஆர்ஏபி) அங்கே கடும் பரபரப்பில் உள்ளது. பாகிஸ்தானின் மருந்து விற்பனையில் 40 சதவிகிதம் வரை இந்தியாவில் இருந்து நேரடியாகவும்.. இந்தியாவில் உருவாக்கப்பட்டு வேறு நாடுகள் வழியாகவும் பாகிஸ்தானுக்கு செல்கிறது.
இப்போது பாகிஸ்தான் உடன் வர்த்தகத்தை மொத்தமாக இந்தியா கைவிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் மருத்துவ துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது, பாகிஸ்தான் அதன் மருந்து மூலப்பொருட்களில் 30% முதல் 40% வரை இந்தியாவை நம்பியுள்ளது, இதில் செயலில் உள்ள மருந்து பொருட்கள் (API) மற்றும் பல்வேறு மேம்பட்ட சிகிச்சை பொருட்கள் அடங்கும்.. இதெல்லாம் பாகிஸ்தானுக்கு கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் அதன் மருந்து மூலப்பொருளில் 30%-40% இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. மிக முக்கியமாக, புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சைகள், உயிரியல் தயாரிப்புகள், தடுப்பூசிகள் மற்றும் செரா, குறிப்பாக ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி மற்றும் பாம்பு விஷத்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. கிட்டத்தட்ட பாகிஸ்தானின் மருத்துவ துறையின் ப்யூஸை பிடிங்கி உள்ளது இந்தியா. மருந்துகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளதால் மருத்துவ அவசரநிலை பிறப்பிக்கும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications