இனி கலங்காதே ராசா! தமிழக இளைஞர்களுக்கு இதைவிட நல்ல செய்தி இருக்காது.. புதிய ரூட் எடுத்த டிஎன்பிஎஸ்சி
சென்னை: தமிழ்நாட்டில் குரூப் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கியமான நல்ல செய்தி ஒன்றை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு உள்ளது. இத்தனை காலம் டிஎன்பிஎஸ்சியில் இருந்த சுணக்கம் அடியோடு குறைந்து.. இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நிகழ்வு ஒன்று நடந்து உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இப்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் குரூப் 8 வரை தேர்வுகளை நடத்துகிறது.

அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் நேற்று முதல்நாள் வெளியானது.
இதில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி குரூப் 1 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதில் முதலில் prelims எனப்படும் முதல்நிலை தேர்வும், இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு mains எனப்படும் முதன்மை தேர்வும் நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி குரூப் 1 முதல் நிலை தேர்வு நடந்தது. சரியாக 30 நாட்களில் ரிசல்ட் வெளியானது. வரும் டிசம்பர் 10 முதல் 13 ஆம் தேதி வரை குரூப் 1 முதன்மை தேர்வானது நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வை எழுத தகுதி பெறுவர்.
கடந்த ஜனவரி 30ம் தேதி இந்தாண்டு குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.. பிப். 28ம் தேதி வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்தாண்டு மொத்தம் 6,244 காலியிடங்களை நிரப்பத் தேர்வுகள் நடத்தப்பட்டன. விஏஓ, வனக் காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட காலியிடங்கள் நிரப்பத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். குரூப் 4 தேர்வுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும் என்பதால் டிகிரி, என்ஜினியரிங் படித்தவர்கள் மட்டுமின்றி பள்ளிப் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பித்தனர். கடந்த ஜூன் 9ம் தேதி குரூப் 4 தேர்வு நடந்தது. இதில் பல லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதினர்.
வேகமான ரிசல்ட்: இப்படி குரூப் தேர்வு எழுதியவருக்கு எல்லாம் உடனுக்குடன் ரிசல்ட் வர தொடங்கி உள்ளது கவனம் பெற்றுள்ளது. முன்னதாக குரூப் 4 ரிசல்ட் ஜனவரி - பிப்ரவரி மாதமே வெளியாகும் என்று கூறப்பட்டது.
ஆனால் இந்த முறை முன்கூட்டியே.. அதாவது அக்டோபர் மாதமே ரிசல்ட் வெளியாகும் என்று இப்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இத்தனை காலம் காட்டப்பட்ட சுணக்கம் இப்போது இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இனி வரும் நாட்களில் தேர்வு முடிவுகள் வேகமாக வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications