'தலைகுனியும்' தலைநகர்.. 'வியக்க' வைக்கும் கேரளா - 'ஆக்சிஜன்' தேவையை கணித்தது எப்படி?
சென்னை: கொரோனா காரணமாக 'ஆக்சிஜன்' பற்றாக்குறை ஏற்படும் என்று ஒரு வருடத்திற்கு முன்பே கணித்து, இன்று 'O' மிகை மாநிலமாக கேரளா கெத்து காட்டுகிறது.
ஆக்சிஜன் தேவையை முன்பே சரியாக கணிக்காமல், இன்று 'தலைநகர்' முதல் பல மாநிலங்கள் சுவாசத்திற்காக அல்லோலப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில், 'இங்கு ஆக்சிஜன் சப்ளை இல்லை' என்று வெளியே போர்டை தொங்கவிடும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. அங்கு ஒருநாளைக்கு 700 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில், கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

அப்பவே ஆரம்பிச்சாச்சு
இதற்கு முக்கிய காரணம், பெசோ PESO (Petroleum and Explosive Safety Organisation) மற்றும் மாநில சுகாதாரத் துறை ஆகியவை ஒவ்வொரு நோயாளியின் ஆக்ஸிஜன் தேவையை கணக்கிட்டு அதற்கான உற்பத்தியை முன்பே உறுதி செய்தது தான். ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் மற்றும் நிரப்பு ஆலைகளுடன் கேரளா கடந்த ஆண்டு மார்ச் 23 முதல் ஆக்ஸிஜன் கண்காணிப்பைத் தொடங்கிவிட்டது என்று PESO அதிகாரி ஆர்.வேணுகோபால் கூறினார்.

அப்பவே ஆரம்பிச்சாச்சு
இதற்கு முக்கிய காரணம், பெசோ PESO (Petroleum and Explosive Safety Organisation) மற்றும் மாநில சுகாதாரத் துறை ஆகியவை ஒவ்வொரு நோயாளியின் ஆக்ஸிஜன் தேவையை கணக்கிட்டு அதற்கான உற்பத்தியை முன்பே உறுதி செய்தது தான். ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் மற்றும் நிரப்பு ஆலைகளுடன் கேரளா கடந்த ஆண்டு மார்ச் 23 முதல் ஆக்ஸிஜன் கண்காணிப்பைத் தொடங்கிவிட்டது என்று PESO அதிகாரி ஆர்.வேணுகோபால் கூறினார்.

35 டன் கொரோனாவுக்கு
இதன் மூலம், கேரளா ஒரு நாளைக்கு 204.75 டன் மருத்துவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்தது. இதில், ஒரு நாளைக்கு 35 டன் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு, 45 டன் கோவிட் அல்லாத பராமரிப்பு பிரிவுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு, இந்த நேரத்தில், தேவை ஒரு நாளைக்கு 100 டன்னாக (கோவிட் மற்றும் கோவிட் அல்லாதவை) இருந்தது. கேரளா தனது மருத்துவ ஆக்ஸிஜனை பல்வேறு மாநில மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் உற்பத்தி செய்தது. (தீயா வேலை செஞ்சிருக்காங்க!)

சுமார் 1.5 டன்
கேரளாவில் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் கர்நாடகா, தமிழ்நாடு, கோவா மாநிலங்களின் மருத்துவமனைகளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. (செம ஜி.. செம). கடந்த திங்களன்று, BPCL தனது கொச்சி சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 1.5 டன் மருத்துவ ஆக்ஸிஜனை வழங்கியது.

பெர்ஃபெக்ஷன் கேரளா
இதுகுறித்து PESO-வின் வேணுகோபால் கூறுகையில், கேரளாவில் அதிக தேவை இருந்தால் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தியின் திறனை அதிகரிக்க முடியும் தற்போது, அனைத்து ஆலைகளும் 100% திறனில் இயங்கவில்லை. தேவை இருந்தால், 100% திறனை அதிகரிப்போம்" என்றார். ஒட்டுமொத்தமாக, ஏற்கனவே ஆக்சிஜனை போதுமான அளவு உற்பத்தியும் செய்து வைத்து, இனிமேல் தேவை என்றாலும், அதனை உற்பத்தி செய்ய ஆலைகளையும் ரெடி செய்து வைத்து பெர்ஃபெக்ஷன் காட்டுகிறது கேரளா. ஆனால், நாட்டின் தலைநகரமோ ஆக்சிஜன் உற்பத்தி இல்லாமல் இன்று மாபெரும் தலைகுனிவை சந்தித்துள்ளது.
-
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications