இட்லி மாவை ஃப்ரிட்ஜில் வச்சி சாப்பிட்டா சீக்கிரமா நாம் ஃப்ரீஸருக்குள்ளே போயிடுவோமா.. வீடியோ பாருங்க
சென்னை: இட்லி மாவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் சீக்கிரமாக நாம் ஃப்ரீஸருக்குள்ளே போயிடுவோமா என்னப்பா சொல்றீங்க என்பது போல், நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் வரும் பெண், இட்லி மாவை ஃப்ரிட்ஜில் நீண்ட நாட்கள் வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி உள்ளார். இதை நெட்டிசன்கள் ஆமோதிக்கிறார்கள்..
அந்த வீடியோவில் அந்த பெண் கூறுகையில், இட்லி சாப்பிட்டால் சைட் பக்க விளைவுகள்இருக்குமா? என்னப்பா புதுசா சொல்றீங்க என்கிறீர்களா.. எனக்கு தெரிந்து 10 வருசமாக காலை, மாலை டிபன் தான் எடுத்துட்டு வர்றாங்க.. அதுலயும் மெயினாக இட்லி தோசை தான் எடுத்துட்டு வர்றாங்க..

இந்த 10 வருசமாகத்தான் நிறைய உணவு ஒவ்வாமை, நிறைய பேருக்கு அல்சர் பிரச்சனை, குடல் பிரச்சனை, குடல் சம்பந்தமான புற்றுநோய்கள், வீசிங், மூலம், வாயில் இருந்து ஆசன வாய் வரை நிறைய பிரச்சனைகள், இந்த மாதிரி நிறைய பிரச்சனைகளை நம்மால் பார்க்க முடிகிறது. அதுமட்டும் இல்லாமல் உடல் பருமன் ஆவது.. நிறைய சர்க்கரை வியாதி நோயாளிகள், கை கால் வலி, மூட்டு வலி, இதெல்லாம் நம்மால் நிறைய பார்க்க முடிகிறது.
இதுக்கு எல்லாம் காரணம் என்னவென்று பார்த்தீர்கள் என்றால், தவறான முறையில் செய்யக்கூடிய உணவு தயாரிப்பு முறை தான்.. இட்லி மாவு தயாரிப்பதில் என்ன பிரச்சனை என்றால், மாவு ஆட்டிவிட்டு, அதனை ஒரு வாரத்தில் இருந்து ஒரு மாத காலத்திற்கு வைத்திருக்கிறார்கள்.. அதே இட்லியை நிறைய எடுத்துக் கொள்கிறார்கள்..
*இட்லி மாவை ஃப்ரிட்ஜ்ல வச்சி சாப்பிட்டா சீக்கிரமா நாம் ஃப்ரீஸருக்குள்ளே போயிடுவோம்னு சொல்லாம சொல்லிட்டாங்களே டாக்டர்...*🙏🏻🙏🏻 pic.twitter.com/MVSXtvq9Xa
— ☆ 𝙄𝙉𝘽𝘼 ☆ (@im_inba1) February 28, 2024
இப்போது மாவை அரைத்து ஃப்ரிட்ஜில் எடுத்து வைப்போம்.. 10 நாட்கள் மாவாக இருந்தாலும் புளித்த வாடை வெளியில் தெரியாது. அதே மாவினை வெளியில் திறந்து வைத்து பாருங்கள்.. வீட்டில் யாராலும் இருக்க முடியாது.. 12ம் தேதி அரைத்த மாவு வீட்டில் இருக்கிறது என்றால், 22ம் தேதி வரை அதை வைத்து இட்லி தோசை ஊற்றுவார்கள்..
நாம் நம்மை தூக்கி பிரிட்ஜில் வைத்துக் கொள்ள முடியாது. நம்ம உடம்பில் இட்லி போய் புளித்து போகும்.. இட்லி புளிப்பாக மாறிய பின்னர், நம் உடலில் அது கொழுப்பாக மாறும்.. அதனால் தான் இன்றைக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் நிறைய இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் நிறைய பேருக்கு வீசிங் உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளையும் ஈஸியாக வரவைக்கும் இந்த பழைய இட்லி..இதில் பிரச்சனை இட்லியில் இல்லை.. ,இட்லி மாவு தயாரிப்பில் தான் பிரச்சனை.. ஆனால் தயவு செய்து இட்லி மாவை ப்ரிட்ஜில் நீண்ட நாட்கள்வைத்து சாப்பிடாதீர்கள்' என்று கூறினார். இவரது கருத்தை பலரும் ஆமோதித்து இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
இட்லி மாவு குறித்த டாக்டர் ஒருவர் ஒருமுறை அளித்த பேட்டியில், இட்லி மாவை பொறுத்தவரை ஆட்டிய அன்று இரவு மாவு புளித்து வரும், மறுநாள் காலை இட்லி ஊற்றலாம்.. அன்று இரவுதோசை ஊற்றலாம். மிச்சம் இருந்தால் மறுநாள் காலை வரை ஊற்றலாம். இதுவே ஜாஸ்தி, இதற்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்திருந்தார.












Click it and Unblock the Notifications