சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"போன் போட்டதும் வந்துவிட்டார்".. பம்பரமாக சுழலும் "மா. சு".. தூங்க கூட நேரமில்லை.. ஸ்டாலின் திருப்தி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் உயர்ந்து வரும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒரே வாரத்தில் தனது பணிகளை வேகப்படுத்தி உள்ளார். சிறு சிறு குறைகளை களைந்து, முந்தைய அரசு செய்யாத சில பணிகளை மா. சுப்பிரமணியன் துரிதமாக செய்ய தொடங்கி உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்து வருகிறது. ஆனால் மற்ற தென்னிந்திய மாநிலங்களான கேரளா, கர்நாடகாவோடு ஒப்பிட்டு பார்த்தால் தமிழகத்தில் இரண்டாம் அலை கொஞ்சம் கட்டுப்பாடோடுதான் இருக்கிறது.

அதான் ரம்ஜான் வாழ்த்து சொல்லிட்டோம்ல.. எப்ப சார் பிரியாணி கொண்டு வந்து தருவீங்க?அதான் ரம்ஜான் வாழ்த்து சொல்லிட்டோம்ல.. எப்ப சார் பிரியாணி கொண்டு வந்து தருவீங்க?

முக்கியமாக கேரளா போன்ற சின்ன மாநிலத்தில் தினசரி கேஸ்கள் தமிழகத்தை விட 10 ஆயிரம் அதிகமாக தினமும் பதிவாகி வருகிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த துரிதமாக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

சென்னை மேயர்

சென்னை மேயர்

சென்னையின் முன்னாள் மேயரான மா. சுப்பிரமணியனத்திற்கு நிர்வாக அனுபவம் இருப்பதாலேயே அவரை முதல்வர் ஸ்டாலின் சுகாதாரத்துறைக்கு தேர்வு செய்தார். அதை போலவே மா. சுப்பிரமணியனும் தற்போது வேகமாக பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். தன்னுடைய கொரோனா தடுப்பு பணிகளை 4 விதமாக பிரித்து மா. சுப்பிரமணியன் மேற்கொண்டு வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிகின்றன.

எப்படி

எப்படி


அதன்படி சென்னைக்கு என்று கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள தனி திட்டம், சென்னை இல்லாமல் கேஸ்கள் அதிகம் வரும் செங்கல்பட்டு, குமரி, மதுரை போன்ற மாவட்டங்களுக்கு தனி திட்டம், உள் மாவட்டங்களுக்கு தனி திட்டம், ஆக்சிஜன் ரெமிடிஸ்வர் தேவையை கவனிக்க தனி திட்டம் என்று மா. சுப்பிரமணியன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதிலும் ஆக்சிஜன், ரெமிடிஸ்சுவர் தட்டுப்பாட்டை குறைக்க மிக கடுமையாக முயற்சிகளை இவர் மேற்கொண்டு வருகிறார்.

சென்னை

சென்னை

முந்தைய ஆட்சியில் சென்னையில் மட்டுமே ரெமிடிஸ்வர் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழகம் முழுக்க பெரு நகரங்களில் ரெமிடிஸ்வர் தரப்படுகிறது. ஸ்டாலினுடன் ஆலோசனைக்கு பின் இந்த முடிவை எடுத்தது மா. சுப்பிரமணியன்தான். அதிலும் கோர்ட் இதில் தலையிட்டு உத்தரவுவை போடும் முன் துரிதமாக செயல்பட்டு கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் விற்று வந்த ரெமிடிஸ்வர் மருந்தை நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு மாற்றும் முடிவையும் இவர்தான் எடுத்தது.

தட்டுப்பாடு

தட்டுப்பாடு

இதில் மா. சுப்பிரமணியன் துரிதமாக முடிவுகளை எடுத்தாலும் இன்னும் ரெமிடிஸ்வர் தட்டுப்பாடு நிலவுவது உண்மைதான். தமிழகத்திற்கு தினசரி ரெமிடிஸ்வர் தேவை 20000 ஆனால் தினமும் 7000 மருந்துகள் கூட மத்திய அரசிடம் இருந்து வருவது இல்லை. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் முடிந்த அளவு மக்கள் சிரமப்படாமல், எல்லோருக்கும் மருந்து கிடைக்கும் வகையில் மா. சுப்பிரமணியன் செயல்பட்டு வருகிறார்.

வேறு எப்படி

வேறு எப்படி

தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் கொஞ்சம் ஏற்பட தொடங்கி உள்ளது. 420 டன் ஆக்சிஜன் தேவை என்ற நிலையில், தமிழகத்திற்கு தினமும் 420 டன் ஆக்சிஜன் கிடைப்பது இல்லை. வரும் நாட்களில் தேவை 840 டன்னாக உயரும் என்றும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையிலும் கூட முடிந்த அளவு பெரிய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பாடாத வகையில் மா. சுப்பிரமணியன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ஆக்சிஜன்

ஆக்சிஜன்

ஆக்சிஜன் இருந்தாலும் கூட அதை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சிலிண்டர்கள் இல்லை. முந்தைய ஆட்சியில் போதிய சிலிண்டர்கள் கூட வாங்கிவைக்கப்படாத நிலையில், தற்போது மா. சுப்பிரமணியன் - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைக்கு பின் சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து காலி சிலிண்டர்கள் நூற்றுக்கணக்கில் வாங்கப்பட்டு இருக்கின்றன. மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்ல காலி சிலிண்டர்கள் இந்த ஆட்சியில்தான் வாங்கப்பட்டுள்ளன.

 போன் போட்டதும் வந்துவிட்டார்

போன் போட்டதும் வந்துவிட்டார்

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை உட்பட சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் சிலர் உயிர் இழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. ஆக்சிஜன் இருந்தாலும் பெட் இல்லாத காரணத்தால் இப்படிப்பட்ட மரணங்கள் ஏற்படுகின்றன. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் 3 பேர் பலியான நிலையில், இது தொடர்பாக போன் வந்ததும் மா. சுப்பிரமணியன் அங்கு சென்று பார்வையிட்டு இருக்கிறார். போன் போட்டதும் வேகமாக இவர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தி உள்ளார். அதோடு அங்கு கூடுதல் பெட்களை ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மீடியா

மீடியா

ஒடிசா, மேற்கு வங்கத்தில் இருந்து தமிழகத்திற்கு ஆக்சிஜன் கொண்டு வருவதில் இவர் முக்கிய பங்காற்றி இருக்கிறார். பெரிய அளவில் மீடியா முன் தோன்றாமல், விளம்பரங்களை செய்யாமல், களப்பணிகளில் மா. சுப்பிரமணியன் கவனம் செலுத்தி வருகிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். எப்போதும் அதிகாரிகளுடன் போனில் தொடர்பில் இருக்கிறார். முக்கிய விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் காதுக்கு கொண்டு செல்கிறார். பெரிதாக ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து வேலை பார்த்து வருகிறார் என்று மா. சுப்பிரமணியனுக்கு நிர்வாகிகள் குட் மார்க்தான் கொடுத்துள்ளனர்.

சில குறைகள்

சில குறைகள்

ஸ்டாலினும் இவரின் செயல்பாட்டில் இதுவரை திருப்தியோடு இருப்பதாகவே கூறுகிறார்கள். புதிய ஆட்சியின் சுகாதாரத்துறை அமைச்சர் என்பதால் முதல் 2 நாட்கள் கொஞ்சம் முடிவு எடுப்பதில் சிரமங்கள் இருந்துள்ளன. கொஞ்சம் குழப்பங்கள் நிலவியது உண்மைதான் என்கிறார்கள். இதனால்தான் ரெமிடிஸ்வர் தட்டுப்பாடு கொஞ்சம் நிலவியது. ஆனால் இப்போது மா. சுப்பிரமணியன் பார்மிற்கு வந்துவிட்டார். நேற்றும், இன்று பெரிதாக ரெமிடிஸ்வர் தட்டுப்பாடு இல்லை.. நிலைமை விரைவில் சரியாக்கலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிகின்றன.

சென்னை

சென்னை


முக்கியமாக சென்னையில் நேற்று கொரோனா கேஸ்கள் 7000க்கும் குறைவாக வந்தது. நீண்ட நாட்களுக்கு பின் கேஸ்கள் இப்படி கொஞ்சம் குறைந்துள்ளது. இது ஒருவேளை சென்னை உச்சத்தை கடத்துவிட்டதை காட்டுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை சென்னை உச்சத்தை கடந்தால் மா. சுப்பிரமணியனின் செயல்பாடு முக்கியத்துவம் பெறும். சென்னையில் கேஸ்கள் குறைந்தால்.. அங்கு இவர் கொண்டு வந்த திட்டங்களை மற்ற மாவட்டங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டிய பணிகள் விரைவில் நடக்கும் என்கிறார்கள்.

English summary
How Ma Subramanian the new health minister of Tamilnadu works against Covid 19 surge? How Ma Subramanian the new health minister of Tamilnadu works against Covid 19 surge in the state so far?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X