"அதெல்லாம் யூகம்".. முருகன் பல்டி.. அப்படீன்னா அந்த 60 தொகுதி மேட்டர் என்னாச்சு.. குழப்பத்தில் பாஜக?
பாஜக அதிமுக கூட்டணியில் எத்தனை சீட்களை கேட்கும் என்ற ஆவல் எழுந்துள்ளது
சென்னை: எல்.முருகனிடம் ஒரு கேள்வியை செய்தியாளர்கள் கேட்டால், அப்படியே மலைத்து போகும் அளவுக்கு ஒரு பதிலை சொல்லி உள்ளார்.. ஆனால், தமிழக பாஜகவுக்கு அதிமுக எத்தனை சீட்டுகளை ஒதுக்கும் என்ற எதிர்பார்ப்பும், ஆர்வமும் இன்னும் குறையவே இல்லை.
மதுரை ஏர்போர்ட்டில் தமிழக பாஜக தலைவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, அதிமுக கூட்டணியில், 40க்கும் மேற்பட்ட தொகுதிகள் கேட்டு, பாஜக நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு, "யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது.. தொகுதி பங்கீடு குறித்து, தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும்" என்றார்.
முருகனின் இந்த பதில்தான் பெருத்த அதிர்ச்சியை உண்டு பண்ணி வருகிறது.. இதே முருகனிடம்தான் அன்று செய்தியாளர்கள், "60 சீட்டில் ஜெயிப்போம் என்று சொல்லி இருக்கிறீர்களே" என்று கேட்டதற்கு, 2016ஆம் ஆண்டில் 75 இடங்களில் வெற்றி, தோல்வியை நிர்ணயித்தது பாஜகதான்.. அதன் அடிப்படையில்தான் இப்பவும் 60 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொன்னேன் என்றார். இப்படி ஒரு விளக்கத்தை தந்துவிட்டு, இப்போது முருகன் அதை யூகம் என்று சொல்வது ஏன் என்று தெரியவில்லை.

சீட்கள்
அதேசமயம், உண்மையிலேயே எத்தனை சீட்தான் அதிமுகவிடம் கேட்க உள்ளது என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புதான்.. சில தினங்களுக்கு முன்பு 38 தொகுதிகள் லிஸ்ட்டை கசிய விட்டு, அதிமுகவுக்கு ஜெர்க் தந்தது பாஜக.. அத்துடன் அதிமுகவையும் ஆழம் பார்த்தது.. அன்றைய நாள் முழுவதும் அந்த அந்த 38 பேரின் தொகுதிகளின் உத்தேச லிஸ்ட்தான் இணையத்தில் வைரலாகி கொண்டே இருந்தது.. அது குறித்த கருத்துக்களும், விவாதங்களும் அலசல்களும் அனல்பறக்க எழுந்தபடியே இருந்தன.. இறுதியில் அன்று இரவு வந்து "அதெல்லாம் சும்மா" என்று ஒத்த வார்த்தை சொல்லி மறுத்துவிட்டனர்.

லிஸ்ட்
சென்னையில் 6 தொகுதிகள், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு தொகுதி.. அப்படித்தான் 38 தொகுதிகளை பாஜக கேட்கிறது.. அந்த வகையில்தான் அப்படி ஒரு உத்தேச லிஸ்ட்டும் வெளியானது.. இந்த தகவலை உண்மையில்லை என பாஜக மறுத்துவிட்டாலும், சில தொகுதிகளை எக்காரணத்தை கொண்டும் அதிமுகவிடம் விட்டு தர கூடாது என்பதிலும் பிடிவாதமாக இருக்கிறோம்.. குறிப்பாக, கோவை, ராமநாதபுரம், திருப்பூர், கன்னியாகுமரி, நாகர்கோவில் தொகுதிகளில் கள வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

சந்தேகம்
முதலில் 60 சீட் என்றார்கள், பிறகு 40 சீட் கேட்டார்கள். பிறகு 38 தொகுதிகளுக்கான லிஸ்ட் வெளியிட்டார்கள், இப்போது வரை தங்கள் பிடிவாதத்தில் கெத்தாக இருந்து வரும் பாஜக, எந்த அடிப்படையில் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றது எந்த சந்தேகமும் எழுகிறது.

வளர்ச்சி
2016- தேர்தலில் 2.86 சதவீதமும், 2019 எம்பி தேர்தலில் 3.66 சதவீதமும்தான் பெற்றுள்ளது.. கூட்டணி வைத்தே இவ்வளவுதான் அந்த கட்சியால் எடுக்க முடிந்திருக்கிறது.. இப்போது பாஜக மீதான அதிருப்திகளும் வெறுப்புகளும் தமிழக மக்களுக்கு கூடி வரும் நிலையில், 3 சதவீத வாக்கு வங்கியை வைத்து கொண்டு, இத்தனை சீட் கேட்டால் எப்படி தருவது என்பதுதான் திமுகவின் யோசனை.

திமுக
அதுமட்டுமல்ல, எத்தனை சீட்டுகளை பாஜகவுக்கு தருகிறோமோ, அவ்வளவும் திமுகவுக்கு பலம் என்பதையும் அதிமுக அறியாமல் இல்லை.. இந்த முறை ஆட்சியை தக்க வைக்கவும், ஸ்டாலலின் வளர்ச்சியை வீழ்த்தவும், பெரும்பாலான இடங்களில் போட்டியிடுவது ஒன்றுதான் முடிவு என்று அதிமுக ஒரு ரூட்டில் செல்லும்போது, பாஜக என்ன செய்ய போகிறதோ? நட்டா சென்னை வந்தால் இதுக்கெல்லாம் ஒரு முடிவு கிடைத்துவிடும்!
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications