பதவி நாற்காலிக்காக இன்னும் எத்தனை பலிகளை கொடுக்கப்போகிறார்கள்?... டிடிவி தினகரன் கேள்வி
Recommended Video
சென்னை: நீட்தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழக சட்டப்சபையில் 2 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட மசோதாவின் கதி என்ன ஆனது? என்று டி.டி.வி.தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. கடந்த ஆண்டைக்காட்டிலும் கட் ஆப் மதிப்பெண் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட 15 மதிப்பெண் அதிகரித்துள்ளது.

அதே நேரம், முன்னேறிய பிரிவினருக்கு கடந்த ஆண்டு 119 ஆக இருந்த கட் ஆப் மதிப்பெண் இந்த ஆண்டு 134 ஆக அதிகரித்துள்ளது. ஓ.பி.சி பிரிவினருக்கு 96 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த கட் ஆப் மதிப்பெண், இந்த ஆண்டு 107 ஆக அதிகரித்துள்ளது. நீட் தேர்வு எளிதாக இருந்ததால் மாணவர்கள் நிம்மதி அடைந்திருந்த நிலையில் கட் ஆப் மதிப்பெண் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பதவி நாற்காலிக்காக இன்னும் எத்தனை பலிகளைக் கொடுக்கப்போகிறார்கள்?
— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 6, 2019
நீட் தேர்வு முடிவுகளில், தமிழகத்தில் 48.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக டெல்லியில் 74.92 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 9.01% மாணவ, மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 57-வது இடம் பிடித்த ஸ்ருதி தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண் எடுத்து ஸ்ருதி சாதனை படைத்துள்ளார்.
இதற்கிடையே, நீட்தேர்வில் தோல்வி அடைந்த பட்டுக்கோட்டை மாணவி வைஸ்யா, திருப்பூர் மணவி ரிதுஸ்ரீ ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழக மாணவச் செல்வங்களின் மருத்துவ கனவில் மண் அள்ளி போடும் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவிகள் திருப்பூர் ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஸ்யா ஆகியோர் தங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொண்டிருப்பது அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. வேதனையில் மனம் விம்முகிறது.
இன்னும் எத்தனை உயிர்களை இந்த நீட் காவு வாங்கப் போகிறது? இன்னும் எத்தனை பேரின் கனவுகளைக் கருக்கிடப் போகிறது? நீட்தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழக சட்டப்பேரவையில் 2 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட மசோதாவின் கதி என்ன ஆனது? பதவி நாற்காலிக்காக இன்னும் எத்தனை பலிகளை கொடுக்கப்போகிறார்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications