கொரோனாவை கண்டறியும் பி.சி.ஆர். ஆய்வகங்கள் நாடு முழுவதும் எத்தனை உள்ளது.. ஹைகோர்ட்
சென்னை: கொரோனா தொற்றை கண்டறியும் பி.சி.ஆர். ஆய்வகங்கள் நாடு முழுவதும் எத்தனை உள்ளன என்பது குறித்த அறிக்கையை மத்திய மாநில அரசுகள் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு மட்டும் போதாது எனவும், வைரசை கண்டறிந்து, வைரஸ் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்க வேண்டியது முக்கியம் என்ற, உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலைச் சுட்டிக் காட்டி, மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், 138 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 10 லட்சம் மக்கள் தொகையில், 452 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும், அதில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாகவும், உலக நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள 41 ஆய்வகங்கள் தவிர்த்து, தமிழகத்தில் அறிவியல் பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் 126 பி.சி.ஆர்., ஆய்வகங்கள் இருப்பதாகவும், அவற்றை முழு அளவில் பயன்படுத்துவதாக இருந்தால் 30 நாட்களில் 14 லட்சம் பேருக்கு சோதனை செய்ய முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்த ஆய்வகங்கள் தவிர, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் உள்ள பி.சி.ஆர்., ஆய்வகங்கள் எத்தனை என்பது குறித்து மத்திய அரசும், தமிழகத்தில் எத்தனை கல்வி நிறுவனங்களில் இந்த வசதிகள் உள்ளன என்பது குறித்து மாநில அரசும் அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் எனவும், அந்த ஆய்வகங்களை பரிசோதனைக்கு பயன்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். 2013-14 முதல் இரண்டு சுகாதார ஆராய்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு ஆயிரத்து 100 கோடி ரூபாய் ஒதுக்கியதில் என்ன கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டது என்ற அறிக்கையையும் தாக்கல் செய்ய மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வு, இந்தியா முழுதும் ஐ.சி.எம்.ஆர். திட்ட்டத்தை தவிர்த்து அனுசக்தி துறை, அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (CSIR), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO), பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில் உள்ள பிசிஆர் ஆய்வகங்களின் எண்ணிக்கை குறித்து மத்திய மாநில அரசுகள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கை மே 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications