இந்த ஒரு சீட்தான் திமுகவிற்கு சவால்.. பறந்து வரும் எச்சரிக்கை..களமிறக்கப்பட்ட ஆட்கள்..என்ன நடக்குது?
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுகவிற்கு 39 இடங்களை வெல்லும் வாய்ப்புகள் உள்ளன. அதிலும் கண்டிப்பாக 35 இடங்களில் வெல்வார்கள். 4 இடங்களில் கொஞ்சம் போட்டி இருக்கலாம் அவ்வளவுதான். இப்போது வரை களம் திமுகவிற்கு ஆதரவாக உள்ளது, என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த 2 வாரம் முன் வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.

இந்த லோக்சபா தேர்தல் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், இப்போது அதிமுக - பாஜக பிரிந்து இருப்பதால் திமுக அணிக்கு களத்தில் போட்டியே இல்லை. 4- 5 தொகுதிகளில் கொஞ்சம் போட்டி இருக்கும்.
பாஜக தோல்வி பயத்தில் இருக்கிறது. அதனால் மோடி என்ன பேசுகிறார்.. காங்கிரஸ் இந்துக்கு விரோதி இருக்கிறார். காங்கிரஸ் எங்கே இந்துக்கு எதிராக பேசி உள்ளார். அவர்கள் ராமர் கோவிலை அரசியலுக்கு பயன்படுத்துகிறார்கள். அதற்கு எப்படி காங்கிரஸ் செல்ல முடியும். பாஜக தோல்வி பயத்தால் இப்படி மோடி பேசுகிறார். தமிழ்நாட்டில் மினிமம் 35 திமுக கூட்டணி வெல்லும்.
39 இடங்களை வெல்லும் வாய்ப்புகள் உள்ளன. அதிலும் கண்டிப்பாக 35 இடங்களில் வெல்வார்கள். 4 இடங்களில் கொஞ்சம் போட்டி இருக்கலாம் அவ்வளவுதான். இப்போது வரை களம் திமுகவிற்கு ஆதரவாக உள்ளது. சில இடங்களில் களம் திமுகவிற்கு ஆதரவாக உள்ளது போல கிளப்பிவிட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
பொள்ளாச்சியில் கொஞ்சம் திமுகவிற்கு சாதகமற்ற சூழல் உள்ளது. அங்கே அதிமுக கொஞ்சம் தீவிரமாக வேலை பார்க்கிறது, இரட்டை இலை சின்னம், கொஞ்சம் அங்கே ஆதரவாக அதிமுகவிற்கு உள்ளது. கொஞ்சம் வலிமையான போட்டி இருக்கலாம். இதனால் பொள்ளாச்சியில் திமுக தீவிரமாக கவனம் செலுத்துகிறது. அங்கே சின்னம் வலிமையாக உள்ளது.
இதை திமுகவே கருதுகிறது. அதனால்தான் இங்கே திமுக அதிக அளவில் ஆட்களை களமிறக்கி உள்ளது. மற்றபடி மற்ற இடங்கள் திமுகவிற்கு சாதகமாக உள்ளது. திமுகவிற்கே அதிக வாய்ப்பு களத்தில் உள்ளது. திமுகவிற்கு எதிரான வாய்ப்பு மூன்றாக பிரிகிறது. வாக்குகள் பிரிவதால் திமுகவிற்கு சாதகமான சூழல் உள்ளது.
இது கட்சி தொடர்பான போட்டி. பொள்ளாச்சியில் அதிமுகவின் வேட்பாளருக்கு தனிப்பட்ட வாக்குகள் இல்லை. ஆனால் சின்னத்திற்கு வாக்குகள் இருக்கிறது. திமுக மிகப்பெரிய அளவில் வெற்றிபெறாது. கடந்த முறையை விட வாக்கு சதவிகிதம் குறையும். ஏனென்றால் கண்டிப்பாக வாக்குகள் குறையும்.
ஆனால் தோல்வி அடைய மாட்டார்கள். பெண்களை மையப்படுத்தி திட்டங்களை கொண்டு வந்துவிட்டனர். அப்படி இருக்க அந்த வாக்குகள் திமுகவிற்கு செல்லும். பெண்கள் வாக்குகள் அப்படியே திமுகவிற்கு செல்லும் . இது தேர்தல் முடிவுகளில் திமுகவிற்கு பெரிய பலனை கொடுக்கும், என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications