திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு! என்னென்ன தொகுதிகள்
சென்னை: வரும் லோக்சபா தேர்தலையொட்டி திமுக- மார்க்சிஸ்ட் இடையே நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்து பேசி வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு முறையே நாமக்கல், ராமநாதபுரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதை தவிர்த்து வேறு எந்த தொகுதிகளும் தமிழகத்தில் இறுதி பெறவில்லை. திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் இன்னமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
அது போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இன்று திமுக- மார்க்சிஸ்ட் இடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கட்சி 4 தொகுதிகளை கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் திமுகவே அக்கட்சிக்கு இரு தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் திமுக- மார்க்சிஸ்ட் கட்சி இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுவிட்டது. அதன்படி மார்க்சிஸ்ட்டுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இனிதான் முடிவு செய்யப்படும்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இரண்டிலும், முறையே, பி.ஆர். நடராஜன், சு. வெங்கடேசன் ஆகியோர் வெற்றி பெற்ற நிலையில் இந்த முறையும் அதே தொகுதிகளை திமுக ஒதுக்கும் என தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications