எத்தனை மாநிலங்களில் து. முதல்வர் பதவி இருக்கிறது? அதன் அதிகாரம் என்ன? உதய்க்கு என்ன இடம்?
சென்னை: தமிழ்நாட்டின் 3ஆவது துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது? அந்தப் பதவியில் யார்? யார் இருந்துள்ளனர் என்பதற்கான முழுப்பட்டியல் ஒன்றை தொகுத்து அளித்துள்ளோம்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் முதன்முதலாக துணை முதலமைச்சர் பதவியை வகித்தவர் மு.க.ஸ்டாலின்தான். இவர் 2009 மே மாதம் முதல் 2011 மே மாதம் வரை மொத்தம் ஒரு வருடம் 351 நாட்கள் து.முதல்வராக இருந்தார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், அன்றைய திமுக தலைவர் கருணாநிதிக்கு அடுத்து அரசியல் வாரிசு யார் எனச் சொந்த குடும்பத்திற்குள் பூகம்பம் வெடித்தது. ஆகவே ஆட்சி அதிகாரத்தை அப்பாவுடன் பங்கு போட்டுக் கொண்டதன் மூலம் மு.க.ஸ்டாலின் திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் என்பது அதிகாரப்பூர்வ உறுதியானது.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் திடீர் உடல்நலக் குறைவையொட்டி ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். சிகிச்சை பலனின்றி அவர் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் சசிகலாவை முதல்வர் பதவியில் உட்கார வைப்பதற்கான முயற்சிகள் நடந்தன. தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்ததாகக் கூறி ஓபிஎஸ் பதவியை விட்டு விலகினார். தர்மயுத்தம் நடத்தினார். கட்சி இரண்டாகப் பிரிந்தது. யாருக்குப் பெரும்பான்மை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆகவே, தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களைக் கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைத்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அமரவைத்தார் சசிகலா. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவின் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் அவர் சிறைக்குச் சென்றார். கட்சியில் கலவரம் தொடங்கியது. பிறகு ஓ. பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் முதல்வராக இருந்த ஓபிஎஸ், மொத்தம் 3 ஆண்டுகள் 258 நாட்கள் வரை துணை முதல்வர் பதவியிலிருந்தார். அதிக காலம் இந்தப் பதவியிலிருந்தவர் இவர்தான்.
இவரைத் தொடர்ந்து இப்போது உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் மூன்றாவது துணை முதலமைச்சர் பதவியில் அமரவைக்கப்பட்டுள்ளார். இதனை அவரது கட்சிக்காரர்கள் கொண்டாடி வரும் அதே வேளையில் எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையான விமர்சனத்தைத் தெரிவித்து வருகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டம் துணைக் குடியரசுத் தலைவருக்கான வரம்புகளையும் அதிகாரத்தையும் திட்டவட்டமாக வகுத்துக் கூறியுள்ளது.
ஆனால், துணைப் பிரதமர் மற்றும் துணை முதல்வருக்கான வரம்புகள் மற்றும் அதிகாரங்கள் என்ன என்பதை விளக்கவில்லை. ஏனெனில் இவை கேபினட் பதவியல்ல. இதற்கு ஆளுநரின் அனுமதியோ, நீதிபதியால் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டிய தேவையோ இல்லை. முதல்வர் நினைத்தால், ஒரு அரசாணை மூலம் தனக்கு ஒரு துணை முதல்வரை உருவாக்கிக் கொள்ளச் சட்டம் அனுமதி அளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைத்த வி.பி.சிங் அமைச்சரவையில் 1989 ஆம் ஆண்டு தேவிலால் துணைப் பிரதமராகப் பதவி வகித்தார். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அமைச்சர்களில் ஒருவராகவே தேவிலால் பதவியை அங்கீகரிப்பதாகக் கூறிய உச்சநீதிமன்றம், பிரதமருக்கான அதிகாரம் எதையும் வழங்க முடியாது எனத் தீர்ப்பில் தெரிவித்தது. இவருக்கு முன்பாகவே சர்தார் வல்லபாய் பட்டேல், மொரார்ஜி தேசாய், லால் கிருஷ்ணா, ஜெகஜீவன் ராம், சந்திர சிங், யஷ்வந்த்ராவ் சவான், அத்வானி போன்றவர்கள் துணைப் பிரதமராக இருந்துள்ளனர். ஆனால், தேவிலால் காலகட்டத்தில்தான் இந்த விவகாரம் நீதிமன்றம் வரை போகவில்லை.
அதேபோல் ஓபிஎஸ் துணை முதல்வராகப் பதவியேற்றபோது உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம் முதல்வருக்கான அதிகாரம் எதையும் அவருக்கு வழங்க முடியாது என்று தீர்ப்பில் கூறியது. இவ்வாறு துணை முதலமைச்சர் பதவிக்கு எதிராகத் தொடங்கப்பட்ட வழக்குகளை ஒட்டு மொத்தமாகச் சேர்த்து விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு தீர்ப்பை வழங்கி இருந்தது. அதில், அமைச்சராக இருக்கும் ஒருவரே துணை முதல்வர் பதவியை வகித்து வருவதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், அந்தப் பதவி அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக இல்லை என்றும் தீர்ப்பு வங்கியது.
இதே தீர்ப்பில் யார் துணை முதல்வராக இருக்கின்றாரோ அவர் கட்டாயம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கவேண்டும் என்றும் கூறியிருந்தது. பல கட்ட களேபரங்களுக்கு இடையில் துணை முதல்வராக உதயநிதி பதவியேற்று இருந்தாலும் அது ஒரு அமைச்சரைவிடக் குறைவான பதவியாகவே அரசியலமைப்புச் சட்டத்தின்படி வரையறை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் துணை முதல்வர் பதவி இந்தியாவில் பல மாநிலங்களில் இருக்கின்றன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் பவன் கல்யாண் துணை முதல்வராக உள்ளார். கர்நாடகாவில் டி.கே. சிவக்குமார் இருக்கிறார். அருணாச்சல பிரதேசத்தில் செளனா மெய்ன் இருந்துள்ளார். பீகாரில் சம்ரத் செளத்ரியும் விஜய் குமார் சின்ஹாவும் இருந்துள்ளனர். சதீஷ்கரில் அருண் சாவ், விஜய் சர்மா துணை முதல்வராகக் கடந்த ஆண்டு வரை இருந்தனர். ஹிமாச்சல பிரதேசத்தில் முகேஷ் அக்னிஹோத்ரியும் மத்தியப் பிரதேசத்தில் ராஜேந்திர சுக்லா, ஜெகதீஷ் தேவா, தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் எனப் பலர் இந்தத் துணை முதல்வர் பதவிக்கான பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
மேகாலயாவில் பிரஸ்டோன் டைன்சாங், ஸ்னியாவ்பலாங் தார் ஆகியோரும் நாகாலாந்தில் யாந்துங்கோ பாட்டன்,டி.ஆர்.ஜெலியாங் ஆகியோரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒடிசா மாநிலத்தில் இப்போது பாஜக ஆட்சியில் கனக் வர்தன் சிங் தியோ, ப்ரவதி பரிதா ஆகிய இருவரும் துணை முதல்வராகப் பதவி வகித்து வருகின்றனர். தெலங்கானாவில் மல்லு பாட்டி விக்ரமார்கா, உபியில் கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோரும் துணை முதல்வராக இருந்துவருகின்றனர். ராஜஸ்தானில் தியா குமாரி, பிரேம் சந்த் பைர்வா ஆகிய இருவரைத் தொடர்ந்து இப்போது இந்தப் பட்டியலில் உதயநிதி இணைந்துள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications