"தல" தோனி.. மிரட்டும் சிஎஸ்கே.. ரொம்ப டேஞ்சர்.. ஒரே ஆண்டில் தலைகீழ் மாற்றம்.. வேற லெவல் ஆட்டம்!
சென்னை: ஐபிஎல் போட்டிகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சிஎஸ்கே வேற லெவலில் கலக்கி வருகிறது. இதற்கான காரணத்தை நாம் இப்போது பார்க்கலாம்.
ஐபிஎல் லீக் போட்டிகள் இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போது ஹைதராபாத், டெல்லி அணிகளைத் தவிர கிட்டதட்ட அனைத்து அணிகளும் 11 லீக் போட்டிகளில் விளையாடிவிட்டன.

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு லீக் டெபிள் மிகவும் நெருக்கமாக உள்ளது. இதனால் எந்த அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்லும் என்று இன்னுமே ஒரு தெளிவாகத் தெரியவில்லை.
ஐபிஎல்: இப்போது வரை பார்த்தால் குஜராத் அணி 16 புள்ளிகளுடன் டாப் இடத்தில் இருக்கிறது. சென்னை அணி 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கடந்தாண்டு மிக மோசமாக விளையாடிய சென்னை அணி, இந்த ஆண்டு வேற லெவலில் கம்பேக் கொடுத்துள்ளது. தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2023 புள்ளிகள் பட்டியலில் 11 ஆட்டங்களில் 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அவர்கள் கடைசியாக விளையாடிய நான்கு ஆட்டங்களில் இரண்டில் தோல்வி, ஒன்று போட்டி ரத்தாகியுள்ளது. 41 வயதான தோனியின் கடைசி ஐபிஎல் இதுவாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், சிஎஸ்கே மீது பெரியளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இருப்பினும் தோனி ஓய்வு குறித்து இதுவரை எதையும் வெளிப்படையாகக் கூறவில்லை.

தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என்றே பலரும் கூறி வருகின்றனர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலினும் கூட இதையே வலியுறுத்தியிருந்தார். தோனி சென்னையின் செல்லப் பிள்ளை என்றும் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றே அவர் வலியுறுத்தியிருந்தார்.
என்ன காரணம்: சிஎஸ்கே பிளேஆப்க்கு நுழைய வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.. இதற்கிடையே நான்கு முறை சாம்பியனான சிஎஸ்கே மிகவும் ஆபத்தானதாகத் தோற்றமளிக்க 'தோனி தான் காரணமாக இருப்பதாக முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "அவர் (தோனி) சரியான கம்பினேஷனை உருவாக்குவதில் ஒரு மாஸ்டர். அதுதான் அவரது உள்ளுணர்வு. அது புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றுதான். 2022இல் அவருக்குச் சரியாக அமையவில்லை என்ற போதிலும், 2023 சிறப்பாக இருக்கும் என்று நம்பும் தொலைநோக்கு பார்வை கொண்டவர். அவர் எப்போதும் முன்கூட்டியே யோசிக்கும் ஆற்றல் கொண்டவர்.
சில வீரர்களை அவர் கம்பேக் கொடுக்க வைத்திருப்பார். இதைப் பார்த்து நான் ஆச்சரியப்படமாட்டேன். ஆனால், நிச்சயமாக அவர் அந்த பாணியில்தான் வேலை செய்வார்.. இப்போது சிஎஸ்கேவை பார்த்தால், அவர்கள் பிளே ஆப் சுற்றுக்குச் செல்வது ஈஸி என்றே தெரிகிறது. பிளேஆஃப்களில் அவரகள் மிகவும் ஆபத்தாகவே தெரிகிறார்கள்.
பிளேஆப்: மேலும், சென்னையில் இரண்டு பிளேஆப் போட்டிகள் நடக்கிறது. அவர்கள் எளிதாக இதில் சாதிக்க முடியும். அவர்கள் அணியாக ஏற்கனவே செட்டில் ஆகி விட்டனர். அணியின் மாற்றம் வேண்டும் என்றால் அது அது காயத்தின் காரணமாக இருக்கும். இல்லையென்றால் டீமில் மாற்றம் தேவையே இல்லை. அவர்கள் பக்காவாக செட்டில் ஆகிவிட்டார்கள்.

ஐபிஎல் 2023 இல் அவரது அணி சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் சூழலில் முன்னாள் சிஎஸ்கே அணி வீரர் சுரேஷ் ரெய்னா, ஓய்வு குறித்து தோனி கூறியது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அதில் அவர் கோப்பையை வென்ற பிறகு, இன்னும் ஒரு வருடம் விளையாடுவேன்" என்று கூறியதாகக் குறிப்பிட்டார்.
அதாவது தல தோனி இன்னும் ஒரு ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications