ஓஹோ.. இளையராஜாவுக்கு 'குறி' வைத்த பாஜக.. இதுதான் காரணமாம்.. அப்ப திமுகவுக்கு சிக்கல் ஆச்சே..!
இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த பாஜக முடிவு செய்துள்ளதாம்
சென்னை: திருமாவளவன் அடிக்கடி சொல்வதுபோல, அந்த சம்பவம் நடந்துவிடும் போல தெரிகிறது.. தமிழகத்துக்கு டெல்லி குறி வைத்துள்ளதாக தகவல்கள் வட்டமடிக்க ஆரம்பித்துள்ளன.
50 வருடங்களாகவே தமிழ்சினிமாவின் சிம்மசொப்பனமாக திகழ்ந்து வருபவர் இளையராஜா.. எனினும் சில நேரங்களில் இவர்மீது விமர்சனங்கள் எழுந்துவிடும்.
பிறருடன் பழக தெரியாதவர், யாரையாவது டக்கென எடுத்தெறிந்து பேசிவிடுவார் என்ற விமர்சனங்கள் உண்டு.. இதை நாமே பலமுறை இளையராஜவின் கச்சேரிகளிலும் நேரடியாக பார்த்து வந்துள்ளோம்.

இசைஞானி
எனினும் இதையெல்லாம் அவரது திறமையுடன் ஒப்பிட்டு, பொதுமக்கள் பெரிதுபடுத்தவில்லை.. தற்போது, பிரதமர் மோடியும் ஒப்பிட்டு பேசியதைதான் பெரும்பாலானோர் ஜீரணிக்க முடியவில்லை. தலைவர்கள் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.. இசைஞானி என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா? உப்புக்கல்லும்- வைரமும் ஒன்றா உதவாக்கரையும்- மாமனிதரும் ஒன்றா என்று கம்யூனிட்ஸ்ட் கட்சி கூறியது..திருமாவளவன் மட்டும், இளையராஜா பாவம் ஆர்எஸ்எஸ் காரர்கள் அவரை சுற்றிவளைத்திருக்கக்கூடும் என்று கூறியிருந்தார்....

இளையராஜா
நேற்றைய தினம் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி கொள்ள போவதில்லை என்று இளையராஜா சொன்னதாக அவரது தரப்பில் திட்டவட்ட செய்தி வெளியானவுடன்தான், பாஜக சுறுசுறுப்பானது.. அப்போது முதலே, இளையராஜாவை வாரி அணைத்து கொள்ள இரு கரம் நீட்டிவிட்டது.. எல்.முருகன்தான் முதல் நபராக இதற்கான மணியை அடித்தார்.. அடுத்து, மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், குஷ்பு, எச்.ராஜா என ஒவ்வொருவராக ஆதரவுக்குரல் எழுப்பிவிட்டனர்..

ஜேபி நட்டா
இதன் உச்சக்கட்டமாக, பாஜக தேசிய செயலாளர் ஜேபி நட்டாவே அறிக்கை விட்டு இளையராஜாவுக்கு ஆதரவை தெரிவித்துள்ளார். இதையெல்லாம் பார்த்த தமிழக மக்கள், இளையராஜாவுக்கு பாஜகவில் இந்த அளவிற்கு ஆதரவு இருக்கிறதா? என்று பலரும் ஆச்சரியப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

பாஜக குஷி
இதனிடையே, அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு இளையராஜா பேசியதில் பாஜக ஏக குஷியில் இருக்கிறதாம்.. இசை உலகில் அவருக்கு இருக்கும் ஆதரவை பயன்படுத்திக் கொள்ள பாஜக தலைமை திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. அதற்காக, இளையராஜாவுக்கு தேசிய அளவில் ஒரு பிரமாண்டமான பாராட்டு விழாவை மத்திய அரசின் சார்பில் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.

கலைஞர்கள்
திரை உலகிலும் இசை உலகிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் பிரபலமாக இருக்கும் கலைஞர்களை இந்த விழாவில் கலந்து கொள்ள வைத்து நிகழ்ச்சியை தேசிய அளவில் பிரமாண்டமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கமல், சிரஞ்சீவி என சீனியர் ஹீரோக்கள் முதல் தற்போது சினிமா துறையில் கோலோச்சும் இன்றைய மாஸ் ஹீரோக்கள் வரை அத்தனை பேரையும் விழா மேடையில் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
Recommended Video

பாராட்டு விழா
வரவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் தென்னிந்தியாவை குறி வைத்து குறிப்பாக தமிழகத்தை குறி வைத்து அரசியல் செய்ய பாஜக தலைவர்கள் திட்டமிட்டிருப்பதால் இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் நடத்தலாம் என தீர்மானிக்கப்படுவதாக தகவல்கள் கிடைக்கின்றன.. ஏற்கனவே எம்பி பதவி தரப்போவதாக தகவல்கள் கிசுகிசுத்து வரும் நிலையில், ஒரு தேசிய கட்சி, ராஜாவுக்கு, தேசிய அளவில் பாராட்டுவிழா என்பது அதைவிட சர்ப்ரைஸ்ஸாக வலம் வந்து கொண்டிருக்கிறது..!












Click it and Unblock the Notifications