தாறுமாறாக வரியை ஏற்றிய மத்திய அரசு.. பிப்ரவரி 1ம் தேதி முதல் ஒரு சிகரெட் விலை எவ்வளவு உயரும்?
டெல்லி: மத்திய அரசு சிகரெட் உள்ளிட்ட அனைத்துப் புகையிலைப் பொருட்களுக்கான வரிகளை உயர்த்தியுள்ளது. இந்த வரி உயர்வு பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிலையில், ஒவ்வொரு சிகரெட்டின் விலையும் எந்தளவுக்கு உயர்கிறது. எந்த சிகரெட்டின் விலை எந்தளவுக்கு உயர்கிறது என்பது எப்படி முடிவு செய்யப்படுகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
புகைபிடிக்கும் மற்றும் புகையிலை உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்கும். இதனால் அதன் பயன்பாட்டைக் குறைக்க எப்போதுமே அரசு வரிகளை உயர்த்தும். இந்தியாவில் சமீபத்தில் தான் இதற்கான வரிகள் உயர்த்தப்பட்ட நிலையில், வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்தியாவில் சிகரெட் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

விலை உயர்வு
கடந்த மாதம் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது மத்திய அரசு புகையிலைப் பொருட்களுக்கான வரிகளை உயர்த்தும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா என இரண்டிலும் இந்த மசோதா எந்தவொரு சிக்கலும் இல்லாமல் நிறைவேறியது. சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்களுக்கான வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் விலை உயர்கிறது.
எவ்வளவு உயரும்?
ஒரு சிகரெட் எந்தளவுக்கு உயர்கிறது என்பதே இப்போது பலருக்குமான கேள்வியாக இருக்கிறது. அதற்கான பதிலை நாம் பார்க்கலாம். சிகரெட் எந்தளவுக்கு விலை உயர்கிறது என்பது ஒரு சிகரெட் எந்தளவுக்கு நீளமாக இருக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும். புதிய வரி அமைப்பில் சிகரெட்டின் நீளம், அது ஃபில்டர் செய்யப்பட்டதா இல்லையா என்பதைப் பொறுத்து வரி மாறுபடும்.. நீளமான சிகரெட்டுகளுக்கு அதிக வரி விதிக்கப்பட்டு, அது விலையை அதிகரிக்கும். வரி உயர்வால் சராசரியாகச் சிகரெட் விலைகள் 20 முதல் 30 சதவீதம் வரை உயரக்கூடும்.
நீளத்தைப் பொறுத்து மாறும்
65 மி.மீ. வரையிலான சிகரெட் வகைகளில் ஆயிரம் சிகரெட்களின் விலை ₹2,700-₹3,000 வரை உயரும்.. 70 மி.மீ. முதல் 75 மி.மீ. வரையிலான சிகரெட்டுகளுக்கு ₹7,000 வரையும் வரி விதிக்கப்படுகிறது. இதர சிகரெட் வகைகளுக்கு அதிகபட்சமாக ₹11,000 வரையும் வரி விதிக்கப்படுகிறது. பொதுவாகவே இந்த "இதர" என்ற வகையில் வரும் சிகரெட்களே அதிகம் விற்கப்படும். ஆனால், அதற்குத் தான் இங்கு அதிக வரி விதிக்கப்படுகிறது.
அதன்படி பார்க்கும்போது 65 மிமீக்கு கீழ் இருக்கும் சிகரெட் ஒன்றின் விலை ரூ.2.70 உயரும். அதேபோல 70 முதல் 75 மிமீ வரையிலான சிகரெட் ஒன்றின் விலை ரூ.7 உயர்கிறது. இதர என்ற பிரிவுகளின் கீழ் வரும் சிகரெட் விலை ₹11 (₹11,000 வரிக்கு) வரை எட்டக்கூடும்.
முக்கியமான மேட்டர்
அதேநேரம் இந்த வரி உயர்வால் மட்டுமே சிகரெட் விலை தானாக உயர்ந்துவிடும் என அர்த்தமில்லை. ஒரேயடியாக இந்தளவுக்கு விலையை உயர்த்தினால் விற்பனை பாதிக்கப்படும் என்பதால் இதன் ஒரு பகுதியைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே எடுத்துக் கொள்ளும். அதன் பிறகு படிப்படியாகவே விலை உயர்வைக் கொண்டு வரும். இதன் மூலம் விலையேற்றத்தை வாடிக்கையாளர்கள் உணரமாட்டார்கள்!
எப்போது தெரிய வரும்!
நீளம் குறைவாக இருக்கும் சிகரெட்டுகளின் விலை குறைவாக அதிகரிக்கும் நிலையில், நீளமான மற்றும் பிரீமியம் ரகங்களுக்கு அதிக வரிச்சுமை இருப்பதால், அவற்றின் விலை கணிசமாக உயரும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் சிகரெட் விலை ஏற்றம் அனைத்திற்கும் ஒரே மாதிரி சீராக இருக்காது. எந்த பிராண்டு, எந்த நீளம் என்பதைப் பொறுத்து விலை ஏற்றம் மாறுபடும். சிகரெட்டின் நீளமே விலையைத் தீர்மானிக்கும். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் கணிசமான விலையேற்றத்தை ஏற்கும் என்பதால் விலை துல்லியமாக எந்தளவுக்கு உயரும் என்பது பிப்ரவரி 1ம் தேதியே தெரிய வரும்.
Disclaimer: புகைபிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும். புகைபிடிப்பதை உடனே விட்டுவிடுங்கள்!
-
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு! -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல












Click it and Unblock the Notifications