கடந்த ஜூலையில் பர்சனல் லோன் போட்டு தங்கம் வாங்கியவர்களுக்கு இப்போது எவ்வளவு லாபம் தெரியுமா?
சென்னை: வரலாறு காணாத வகையில் புதிய உச்சமாக தங்கம் விலை ஒரே நாளில் ரூ.2,200 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. ஆனால் நேற்று முன்தினம் தங்கம் விலை ஏறிய 2200 ரூபாய் இன்று இறங்கியது. எனினும் தங்கம் விலை ஒரு சவரன் வழக்கம் போல் 72120க்கு விற்பனையாகிறது. கடந்த ஜூலை மாதம் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பை தொடர்ந்து தனிநபர் கடன் வாங்கி தங்கம் வாங்கியவர்களுக்கு எவ்வளவு லாபம் தெரியுமா? மிரள வைக்கும் வகையில் லாப விகிதம் இருக்கிறது.
நகைக்கடைகளில் தங்கம் வாங்காமல், வங்கியில் சேமிக்கலாம்,தபால் நிலையத்தில் சேமிக்கலாம்.. மியூட்சுவல் பண்டில் போடலாம் என்று மனைவியை சமாதானம் செய்தவர்கள், பழைய நகையை மனைவியின் பேச்சை கேட்காமல் விற்றவர்கள் இன்று திட்டு வாங்கி கொண்டிருக்கிறார்கள்.. ஏனெனில் தங்கம் விலை இந்த அளவிற்கு உயரும் என்று யாருக்குமே தெரியாது.. நாங்கள் என்ன கனவா கண்டோம் என்று புலம்பி வருகிறார்கள்..

அதேநேரம் சிலர் தங்கம் விலை குறைந்த போது, தனிநபர் கடன் வாங்கியாவது ஓடிப்போய் தங்கம் வாங்கினார்கள்.கடந்த ஜூலை மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தங்கத்தின் மீதான சுங்க வரியை குறைத்தபோது பெரிய அளவில் தங்கம் விலை குறைந்தது. அப்போது ஓடிப்போய் தங்கம் வாங்கிய பலருக்கு தங்கம் நல்ல லாபம் கொடுத்துள்ளது. 4 லட்சம், ஐந்து லட்சம் தனிநபர் கடன் வாங்கி தங்க நகை வாங்கியவர்களுமே.. அப்படா தங்கத்தை லோன் போட்டு வாங்கியதால் நல்ல லாபம் கிடைத்தது.. இப்போதைய சூழலுக்கு வாங்கிவிட முடியுமா என்று பிரம்மித்து வருகிறது.-
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புக்கு பின்னர் ஜூலை இறுதியில் 51000 என்கிற அளவில் தங்கம் விலை சரிவினை சந்தித்தது. அப்போது 916 நகைகளை ஓடிப்போய் தனிநபர் லோன் போட்டு வாங்கியவர்களுக்கு கிட்டத்தட்ட லட்சங்களில் லாபம் கிடைத்துள்ளது. ஐந்து லட்சத்திற்கு கிட்டத்தட்ட 8 .5 பவுன் நகைகளை வாங்கினார். இன்றைக்கு அதே நகைகயை வாங்க வேண்டும் என்றால், 6 லட்சத்து 80 ஆயிரம் வரை தேவைப்படுகிறது. அந்த அளவிற்கு விலை உயர்ந்துள்ளது. நகை வாங்குவோம் ஜிஎஸ்டி, செய்கூலி சேதாரம் எல்லாம் இருக்கிறது. இவற்றை எல்லாம் சேர்த்து தான் இந்த அளவிற்கு விலை கொடுத்து வாங்க வேண்டியதிருக்கிறது.
தனிநபர் கடன் வாங்கி, தங்க நகை வாங்கியவர்களுக்கு அவர்கள் வாங்கிய அளவில் இருந்து ஒரு பவுனுக்கு 20 ஆயிரம் ரூபாய் என்கிற அளவில் லாபம் கிடைத்துள்ளது. ஆனால் சேமிப்பிலோ அல்லது வேறு எதிலும் இந்த அளவிற்கு லாபம் இந்த காலக்கட்டத்தில் கிடைக்கவில்லை.. பொதுவாக வீடுகளில் பெண்கள் தங்கம் வாங்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவார்கள். அப்போது ஆண்களின் சமாதானத்தை நம்பி தங்க நகை வாங்காமல் விட்டவர்கள்.. ஏன் இப்படி செய்தோம் என்று புலம்பி வருகிறார்கள்..
தற்போதைய நிலையில் சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகிறார்கள். அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போரும், ரஷ்யாவிற்கு அமெரிக்காவிற்கும் இடையே உள்ள பொருளாதார தடையும் தங்கம்விலை ஏறுவதற்கு காரணமாக அமைந்தது. சீனா, ரஷ்யா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ததன் காரணமாகவே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வரும் 30-ந் தேதி அட்சய திருதியை வருகிறது. அட்சய திருதியை அன்று பொதுமக்கள் ஒரு கிராம் தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்று விரும்புவார்கள். இதனால், நகைக் கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், அதிகரித்து வரும் தங்கத்தின் விலை பெண்களை ஆடிப்போக வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications