Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடை விடுமுறையில் ஊருக்கு போறீங்களா? ரயில்வேயின் இந்த ரூல்ஸ் தெரியாம போகாதீங்க! அபராதம் போட்ருவாங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயிலில் பயணிகளின் கூடுதல் லக்கேஜ்களுக்கு கட்டணம் விதித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இந்த எடையை விட லக்கேஜ்களின் எடை அதிகமாக இருந்தால் பயணிகளிடம் இருந்து 1.5 மடங்கு கட்டணம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் பல லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகிறார்கள். தொழில் நிமித்தமாகவும், கல்வி, வேலைவாய்ப்பு காரணங்களுக்காக தொலை தூரம் பயணிக்கும் பயணிகள் பெரும்பாலும் ரயில் பயணத்தைதான் தேர்வு செய்வார்கள். டாய்லட் வசதி, அலுப்பு இல்லாத பயணம் ஆகியவற்றால் பயணிகள் அதிகம் விரும்புவது ரயில் பயணத்தைத் தான்.

how-much-will-be-charged-for-carrying-more-luggage-than-allowed-on-trains-southern-railway-explains

லக்கேஜ்களுக்கு கூடுதல் கட்டணம்

தற்போது கோடை விடுமுறை விடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் பயணிகள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். சென்னை, கோவை, உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு கோடை விடுமுறையை கழித்துவிட்டு வருவார்கள். இதனால், இன்னும் சில நாட்களில் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

ரயில்களில் பயணிகள் தங்களுடன் லக்கேஜ்களை எடுத்து செல்வது வழக்கம். பயணிகள் அதிகபட்சம் எவ்வளவு எடை வரையிலான லக்கேஜ்களை தங்களுடன் இலவசமாக கட்டணம் இன்றி எடுத்து செல்லலாம் என்பது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதைவிட கூடுதலாக லக்கேஜ்கள் கொண்டு சென்றால் அவர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.

1.5 மடங்கு கட்டணம்

* முதல் வகுப்பு ஏசி பெட்டி: 70 கிலோ (வரை கட்டணம் இல்லை)
* ஏசி இரண்டு அடுக்கு பெட்டி: 50 கிலோ
* ஏசி 3 tier, சாதாரண ஸ்லீப்பர் பெட்டி: 40 கிலோ
* செக்கண்ட் சிட்டிங்: 35 கிலோ வரை கட்டணம் இல்லை எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட இந்த எடையை விட லக்கேஜ்களின் எடை அதிகமாக இருந்தால் பயணிகளிடம் இருந்து 1.5 மடங்கு கட்டணம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதேபோல, ரயில்களில் சில பொருட்களை எடுத்து செல்ல நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், ரசாயனம் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள், பட்டாசுகள் உள்பட வெடிபொருட்கள் ஆகியவற்றை ரயில்களில் எடுத்துச்செல்லக் கூடாது. இந்த பொருட்களுடன் ரயில் பயணிகள் பிடிபட்டால் ரயில்வே விதிகளின் படி பயணிகளுக்கு அபரதமோ, சட்ட நடவடிக்கையோ எடுக்கப்படலாம்.

கோடை விடுமுறைக்கு சிறப்பு ரயில்கள்

* கோடை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
* மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவை கடந்த பிப்ரவரி மாதம் முதல் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட உள்ளது. அதாவது இன்று முதல் மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

* திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 06030) ஞாயிற்றுக்கிழமை தோறும், திருநெல்வேலியிருந்து இரவு 7 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து சேரும்.
* மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையிலான ரயில் (எண்: 06029) திங்கட்கிழமை தோறும் இயக்கப்படும். மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

தாம்பரம் டூ போத்தனூர்

* சென்னை தாம்பரத்தில் இருந்து போத்தனூருக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வண்டி எண் (06185) சிறப்பு ரயில் வரும் 18, 25 மற்றும் மே 2 ஆகிய நாட்களில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் தாம்பரத்தில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு போத்தனூர் சென்று சேரும்.

* போத்தனூர் டூ தாம்பரம் சிறப்பு ரயில் ஏப்ரல் 13, 20, 27 மற்றும் மே 4 ஆகிய நாட்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் போத்தனூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டும். மறுநாள் நண்பகல் 12.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+