அடித்து தூக்குதே நாம் தமிழர்! கேம் சேஞ்சர் ஆக மாறும் சீமான்? தந்தி டிவி கருத்து கணிப்பு சொல்வது என்ன
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகளை பெறும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சமீபத்தில் சென்னை பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். மொத்தம் 20 ஆண்கள், 20 பெண்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் சீமான் போட்டியிடாத நிலையில் பல முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2019 தேர்தல்: திமுக கூட்டணி 53.15% திமுக 33.52% காங்கிரஸ் 12.61%. அதிமுக கூட்டணி 30.57% அதிமுக 19.39% பாஜக 3.66% பாமக 5.36% தேமுதிக 2.16% நாம் தமிழர் கட்சி 3.90% வாக்குகளை எடுத்தது.
நாம் தமிழர் வாக்கு ரீதியாக 4 சதவிகிதம் வரை வைத்து இருந்தாலும் சில இடங்களில் தனியாக முடிவுகளை மாற்றும் சக்தியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.
தந்தி டிவி கணிப்பு: இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகளை பெறும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.
பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.
அதாவது நாம் தமிழர் கடந்த முறை பெற்ற வாக்குகளை விட 1.10 சதவிகிதம் கூடுதல் வாக்குகளை பெறும் என்று கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. நாம் தமிழர் சின்னம் மாறிய போதும் கூட அவர்களின் வாக்கு சதவிகிதம் குறையாமல் உயர்ந்து உள்ளது.
1 சதவிகித வளர்ச்சி குறைவு என்றாலும் கூட அவர்களின் சின்னம் மாற்றம் காரணமாக இது குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.
2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் போய் மைக் சின்னம் வந்தாலும் கூட அந்த கட்சி நிர்வாகிகள் துவண்டு போகாமல் தீவிரமாக பணிகளை செய்து வருகின்றன.
சின்னம் பிரச்சனை: சீமான் கட்சி கடந்த முறை போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம் இம்முறை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதி இருந்தார். அதேபோல் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து இருந்தார்.
சின்னம் போனாலும் கவலை இல்லை: நாம் தமிழர் கட்சியின் அடையாளமாக கிட்டத்தட்ட மாறி இருந்த இந்த சின்னம் தற்போது கர்நாடகாவில் இருக்கும் கட்சிக்கு சென்றுவிட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் கூட, சீமானின் நாம் தமிழர் கட்சி என்பது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால், கரும்பு விவசாயி சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கி தர வேண்டும் என அக்கட்சியால் கோர முடியாது என கூறியுள்ளது.
ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் போய் மைக் சின்னம் வந்தாலும் கூட அந்த கட்சி நிர்வாகிகள் துவண்டு போகாமல் தீவிரமாக பணிகளை செய்து வருகின்றன. சின்னம் போனாலும் கவலை இல்லை என்று மைக் சின்னத்தை வைத்து அக்கட்சி பிரச்சாரம் செய்கிறது.












Click it and Unblock the Notifications