ஒரே வாரம்.. தமிழ்நாட்டிற்கு அடுத்தடுத்து 4 குட்நியூஸ்.. வந்தது எல்லாமே பெரிய கை.. ஸ்டாலின் மேஜிக்!
சென்னை: கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 4 பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. தமிழ்நாட்டை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக முதலீடுகள் குவிய தொடங்கி உள்ளன.
தமிழ்நாட்டில் 6000 கோடி முதலீட்டில் 10 தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி அளித்து அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது. 27,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் ரூ.6,000 கோடி மதிப்பிலான புதிய மின்சார வாகனங்கள் (EV) மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (GCC) உட்பட பல்வேறு பிரிவுகளில் 10 முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Ola, Ather மற்றும் TVS மோட்டார் நிறுவனம் போன்ற பல முக்கிய நிறுவனங்களுடன் மின்சார வாகன உற்பத்தியில் இப்போது டாப்பில் உள்ள ஓசூர்-தர்மபுரி-கிருஷ்ணகிரி (HDK) பகுதியில் EV பிரிவில் ,முக்கியமான முதலீடு வரும் நாட்களில் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு 2 ஆண்டுகளில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது; உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படும். கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர மின் வாகனங்களில் 46% வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 4 பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
குட்நியூஸ் 1 : தைவானை சேர்ந்த பெகட்ரான் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. பெகட்ரான் உலகில் உள்ள முன்னணி மின்னணு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிலையில் அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான ஆலோசனைகளை இறக்கி உள்ளது.
முதல்வர் ஸ்டாலினை தைவான் நாட்டைச் சேர்ந்த பெகட்ரான் நிறுவனத்தின் குழுமத் தலைவர் திரு.டிஎச் துங்(TH Tung) சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து பேசினார். இதன் மூலம் விரைவில் தமிழ்நாட்டில் அந்த நிறுவனம் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி,மகராஷ்டிரா,கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது தமிழ்நாடு. தமிழ்நாட்டில் முதலீட்டை விரிவுபடுத்துவதற்காக இவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
குட் நியூஸ் 2: ஃபாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகள் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை சென்னையில் சந்தித்தனர். ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் இன்டர்நெட் நிறுவனம் சார்பாக முதல்வர் ஸ்டாலினுடன் முக்கியமான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
கர்நாடகாவில் முதலீடு செய்வதற்காக அங்கே ஆலோசனைகளை மேற்கொண்ட ஃபாக்ஸ்கான் நிறுவனம் கடைசியில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனைகளை மேற்கொண்டது. இந்த ஆலோசனைகளின் முடிவில் தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக பல்வேறு மின்னனு சாதனங்களை உற்பத்தி செய்ய ஃபாக்ஸ்கான் முடிவு செய்துள்ளதாம்.
அதன்படி 200 மில்லியன் டாலரை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளதாம் பாக்ஸ்கான். தமிழ்நாட்டில் மின்னணு சாதனங்கள் தொழிற்சாலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த முதலீட்டை செய்ய உள்ளதாம். மின்னணு பொருட்களை உருவாக்கும் பிளாண்ட்களை இங்கே அமைக்க உள்ளதாம் பாக்ஸ்கான்.
குட் நியூஸ் 3: டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாக தொடங்கி உள்ளன. தமிழ்நாடு அரசு இ வாகனங்களுக்கான கொள்கைகளை சமீபத்தில் வெளியிட்டு அதற்கான சலுகைகளையும் உடனுக்குடன் அறிவித்து உள்ளது. இந்த சலுகைகள் வழியாக டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்கான தீவிரமான முயற்சிகளில் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழிற்துறை அதிகாரிகள் தீவிரமான ஆலோசனைகளை செய்து வருவதாகவும் தொழிற்துறை வட்டார தக்வல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா கார், பேட்டரி மூலம் இயங்க கூடிய கார்களில் உலகில் முதன்மையான காராக இருக்கிறது. அதேபோல் இதன் நிறுவனர் எலோன் மஸ்க் உலகில் முக்கியமான தொழில் அதிபராக இருக்கிறார். இவர்தான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குட் நியூஸ் 4: மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி,மகராஷ்டிரா,கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது தமிழ்நாடு.
1.86 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதியை இரண்டு ஆண்டுகளில் 5.87 பில்லியன் டாலருக்கு உயர்த்தி அபார சாதனை செய்துள்ளது தமிழ்நாடு. உதாரணமாக தமிழ்நாட்டில் தற்போது முதலீடுகளை அதிகப்படுத்தி உள்ள பாக்ஸ்கான் நிறுவனம், மொத்தமாக தமிழ்நாட்டில் உற்பத்தியை செய்ய இருக்கிறது. இப்படி மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் கலக்கி வரும் சென்னை இன்னொரு சாதனையை படைத்துள்ளது. அதன்படி சென்னையில் ஒம்ரான் நிறுவனம் உற்பத்தியை தொடங்கி உள்ளது. இவர்கள்தான்உலகின் நம்பர் மருத்துவ எலக்ட்ரானிக் உற்பத்தி நிறுவனம் ஆகும்.
128 கோடி ரூபாய்க்கு இவர்கள் பிளான்ட் ஒன்றை மஹிந்திரா ஓர்கினிசில் பொன்னேரியில் தங்கள் பிளாண்ட்டை அமைத்து உள்ளனர். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மே மாதம்தான் செய்யப்பட்ட நிலையில் தற்போது 2 மாதங்களில் இங்கே உற்பத்தி தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications