ரொம்ப ஈஸி.. உங்கள் மகன், மகள் நன்றாக படிக்க வேண்டுமா? கவனச்சிதறல்களை தடுக்க 5 முக்கிய டிப்ஸ்!
சென்னை: பள்ளி, கல்லூரிகள் மீண்டும் துவங்க உள்ளது. இந்நிலையில் தான் 5 முக்கிய டிப்ஸ்களை பின்பற்றினாலே போதும் உங்களின் மகன், மகள்கள் கவனச்சிதறல்கள் இன்றி படிப்பில் முழு கவனம் செலுத்தி நன்றாக படிக்க முடியும்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன. கல்லூரிகளுக்கும் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளன. இந்நிலையில் தான் மாணவ-மாணவிகள் கவனத்தை சிதறவிடாமல் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இது ஒவ்வொரு பெற்றோரின் எண்ணமாக இருக்கிறது.
இதனால் தான் வீடுகளில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடம் எப்போதும் பெற்றோர்கள் படி.. படி.. என அறிவுரை வழங்கி வருகின்றனர். சில குழந்தைகள் இயல்பாகவே படிப்பில் ஆர்வமாக கொண்டதாக இருக்கும். அதேவேளையில் பல குழந்தைகள் படிப்பில் அக்கறை காட்டுவது இல்லை.
இதற்கு முக்கிய காரணம் அவர்களின் கவனச்சிதறல்கள் தான். இந்நிலையில் தான் மாணவ-மாணவிகளை தங்களின் கவனத்தை வேறு விஷயங்களில் சிதற விடாமல் படிப்பில் செலுத்த சில எளிமையான வழிமுறைகள் உள்ளன. இதனை பின்பற்றினாலே போதும். மாணவ-மாணவிகள் மட்டுமின்றி புத்தகம் வாசிக்கும் பெரியவர்கள் வரை அனைவரும் முழு வீச்சில் படிப்பில் கவனம் செலுத்த முடியும்.
முதல் டிப்ஸ்: முதல் டிப்ஸ் படிப்புக்கு ஏற்ற உகந்த சூழலை உருவாக்குவது. அதாவது மாணவ-மாணவிகளுக்கு சத்தங்கள் இல்லாத, மனிதர்களின் இடையூறு இல்லாத இடத்தை பெற்றோர்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அதேவேளையில் அமர்ந்து படிக்கும் இடம் அமைதியாக இருப்பதோடு, போதிய வெளிச்சத்துன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
2வது டிப்ஸ்: ஒவ்வொரு செயலை நாம் செய்யும்போது இலக்கு நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். இலக்கு நிர்ணயம் செய்வதன் மூலம் ஒவ்வொருவருக்கும் அதனை எப்படியாவது நிறைவேற்ற வேண்டிய ஆர்வம் வரும். அதோடு படிப்பு குறித்த தெளிவான சிந்தனையையும் ஏற்படுத்தும். இதன்மூலம் இலக்கு நிர்ணயம் செய்து மாணவ-மாணவிகளை படிக்க வைக்கலாம். இது அவர்களின் கவனத்தை சிதறவிடாமல் படிப்பில் ஆர்வம் காட்ட வழிவகுக்கும்.

3வது டிப்ஸ்: இது அலுவலகங்களில் பணியாளர்களுக்கு பின்பற்றப்படும் வழிமுறையாகும். அதாவது Pomodoro டெக்னிக். இந்த முறை என்பது தொடர்ந்து 25 நிமிடங்கள் படித்த பிறகு சிறிது நேரம் பிரேக் எடுத்து கொள்வது. இது மாணவ-மாணவிகளின் திறனை பொறுத்து நேரத்தை மாற்றி அமைத்து கொள்ளலாம். இதன்மூலம் மாணவ-மாணவிகளுக்கு படிப்பின் மீது வெறுப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.
4வது டிப்ஸ்: தற்போதைய சூழலில் மாணவ-மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருக்க செல்போன் தான் முக்கிய காரணமாக உள்ளது. இதனால் படிக்கும் சமயங்களில் செல்போனை மாணவ-மாணவிகளிடம் இருந்து வாங்கி தனியே வைத்துவிட வேண்டும். இதன்மூலம் படிப்பில் போக்சஸ் செய்ய முடியும். மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் என்றால் குறிப்பிட்ட பாடத்தை குறித்த நேரத்தில் படித்தால் மட்டுமே செல்போன் வழங்கப்படும் என கூறுவது அவர்களை படிப்பின் மீது கவனம் செலுத்த உதவும். ஆனால் இதனை வழக்கமாக்கி கொள்ளக்கூடாது.
5வது டிப்ஸ்: சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும் கூட தொடர்ந்து படிப்பது என்பது மனச்சோர்வை அளிக்கும். இதனால் படிப்புக்கு இடையிடையே சிறிது நேரம் ஓய்வெடுப்பதோடு, ஆழமாக சுவாசித்தல், சிறிய நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் நமது உடல் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று படிக்கும்போது கவனச்சிதறல்கள் ஏற்படாமல் தடுக்கும் என கல்வியாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications