கேம் சேஞ்சர்! இன்று நடக்கும் 4ம் கட்ட தேர்தல்தான்.. பாஜக தலைவிதியை தீர்மானிக்கும்.. எப்படி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபாவில் 4ம் கட்ட தேர்தலில் இன்று நடக்கும் வாக்குப்பதிவு பாஜகவிற்கு மிக முக்கியமான தேர்தல் ஆகும். 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு அல்லது என்டிஏ கூட்டணி தனி மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் இன்று நடக்கும் தேர்தல்தான் கேம் சேஞ்சராக இருக்கும். சில கிங் மேக்கர் கட்சிகள் போட்டியிடும் தேர்தலாக 4ம் கட்ட வாக்குப்பதிவு பார்க்கப்படுகிறது.

இன்று நடக்கும் மக்களவைத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு 96 தொகுதிகளில் நடக்கிறது. கட்டம் 3 முடிவில், ஏறக்குறைய பாதி இடங்களில் தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டன. பொதுவாக வரலாற்று ரீதியாக, 4ம் கட்ட தேர்தல்தான் அணிசேராக் கட்சிகளுக்கான தேர்தல் ஆக இருந்து வந்துள்ளது. அதாவது இந்தியா கூட்டணி, என்டிஏ கூட்டணி இரண்டிலும் சேராத கட்சிகள் பல இன்றைய தேர்தலை சந்திக்கின்றன.

How the today 4th phase election will determine the PM Modis dream of 3rd term

அதோடு இன்று நடக்கும் தேர்தலோடு இந்தியாவின் தென் மாநிலங்களில் மொத்தமாக வாக்குப்பதிவு முடிவடைகிறது.

எத்தனை இடங்கள்; ஆந்திரப் பிரதேசம் (25), பீகார் (5), ஜார்கண்ட் (4), மத்தியப் பிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), ஒடிசா (4), தெலங்கானா (17), உத்தரப் பிரதேசம் (13) மேற்கு வங்கம் (8), ஜம்மு காஷ்மீர் (1) உட்பட பத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று தேர்தல் நடக்கிறது. இந்த 96 இடங்களில் 42 (44%) இடங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் உள்ளது.

இங்கே உள்ள தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எனப்படும் பாரதிய ராஷ்திரிய சமிதி, ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இரண்டுமே பாஜக, இந்தியா கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆகும். இரண்டுமே தெலுங்கானா, ஆந்திராவில் முறையே வலிமையாக உள்ள கட்சிகள் ஆகும். இவை அணி சேராத கட்சிகள் என்பதால் இந்த கட்சிகள் கிங் மேக்கர்களாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

மெஜாரிட்டி: பாஜகவின் என்டிஏ கூட்டணி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் பாரதிய ராஷ்திரிய சமிதி, ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகியவை ஆதரவு கொடுக்கும் கட்சிகள்தான் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும். இப்போது வரும் தேர்தல் ரிப்போர்டுகள் சில தொங்கு நாடாளுமன்றம் உருவாக்கலாம் என்று கூறுவதால் இந்த அணி சேராத கட்சிகள் எங்கே செல்லும் என்பதை வைத்தே முடிவுகள் மாறும்.

அந்த வகையில் இன்று நடக்கும் தேர்தல் மிகப்பெரிய அளவில் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும்.

வரலாறு என்ன?: அணி சேராத கட்சிகள் கொண்ட ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானாவில் நடந்த 2019 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (BJP) 42 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும், YSR காங்கிரஸ் கட்சி (YSRCP) 22 இடங்களையும் பெற்றன.

கூட்டணி படி பார்த்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 49 இடங்களையும், இந்திய கூட்டணி 8 இடங்களையும், ஒய்எஸ்ஆர்சிபி, பிஜு ஜனதா தளம் (பிஜேடி), திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) போன்ற அணி சேராத கட்சிகள் எனப்படும் பிராந்திய கட்சிகள் கூட்டாக 39 இடங்களைப் பெற்றன.

ஒடிசா, மேற்கு வங்கம், தெலுங்கானா , ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் 2019ல் NDA வெற்றி பெற்ற இடங்களில் 53% வாக்குகளைப் பெற்றது. இந்திய கூட்டணி 45% மற்றும் அணிசேராக் கட்சிகள் 48% வாக்குகளைப் பெற்றன. அணிசேராக் கட்சிகள் பெற்ற 8% வாக்குகள்தான் தொங்கு சட்டசபை உருவாகும் பட்சத்தில் முடிவுகளை தீர்மானிக்க போகின்றன.

இந்த 4ம் கட்டத்தில் பாஜக 70 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) 17 இடங்களிலும், ஷிண்டே சிவசேனா 3 இடங்களிலும், ஜன சேனா 2 இடங்களிலும் போட்டியிடுகிறது. இதற்கிடையில், காங்கிரஸ் 61 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) 19 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவா சேனா மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலா 4 இடங்களிலும் போட்டியிடுகின்றன.


அணிசேரா கட்சிகள் போட்டியிடும் இடங்கள்: 2019 ஆம் ஆண்டில், மேற்கண்ட மாநிலங்களில் பாஜக 10% வாக்கு சதவிகிததிற்கும் குறைவான வித்தியாசத்தில்தான் 14 இடங்களைப் பெற்றது, அதே நேரத்தில் 10% வாக்கு சதவிகிததிற்கும் அதிகமான வித்தியாசத்தில் 28 இடங்களை வென்றது.

அதே சமயம் அணிசேராக் கட்சிகள் இந்த 4ம் கட்டத்தில் கடந்த 39 இடங்களைப் பெற்றன, YSRCP (22), BJD (2), TMC (4), பாரத் ராஷ்டிர சமிதி அல்லது BRS (9), மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன், அல்லது AIMIM (2) இடங்கள் பெற்றன. டிஎம்சி இந்தியா கூட்டணியின் ஒரு பகுதியாக இருப்பதாகக் கூறிக்கொண்டாலும், மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் எந்த ஒப்பந்தத்திலும் இல்லாதது அதை அணிசேராது என்று வைத்துக்கொள்ளப்படும். தேர்தல் முடிந்த பின் இவர்கள் கூட்டணி வைக்கலாம்.

பாஜகவின் என்டிஏ கூட்டணி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் பாரதிய ராஷ்திரிய சமிதி, ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகியவை ஆதரவு கொடுக்கும் கட்சிகள்தான் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியையும் சேர்ந்து இந்த கட்சிகள்தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்க போகின்றன.

இதில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் எதிராக உள்ளது. தெலுங்கானா ஆட்சி மாற்றம் காரணமாக பிஆர்எஸ் காங்கிரசை கொஞ்சம் கூடுதலாக எதிர்க்கிறது. YSRCP பாஜகவுடன் கொஞ்சம் நட்பாக உள்ளது. பிஜு ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ் ஆகியவை பாஜகவை தீவிரமாக எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வந்த பின் இந்த அணி சேர கட்சிகளின் முடிவுதான் மோடியின் ஹாட் ட்ரிக் கனவை தீர்மானிக்கும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+