பேரிடி! பயத்துல சொல்லிட்டாரு.. ரவீந்திரநாத்துக்கு எதிராக தீர்ப்பு திரும்பியது எப்படி?: வழக்கறிஞர்
சென்னை: தேனி எம்.பி ஓபி ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்த நிலையில், ரவீந்திரநாத்துக்கு எதிராக தீர்ப்பு வந்தது எப்படி என விளக்கியுள்ளார் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அருண்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத் 76,319 ஓட்டுகள் வித்தியாசத்தில் எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

ஆனால் அவரது வேட்புமனுவில் , சொத்து விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை மறைத்ததாக, தேனி தொகுதி வாக்காளராக உள்ள மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின்போது ஓ.பி.ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். மேலும் தேர்தல் அதிகாரிகள் முன்பும் ஆஜராகி ஆவணங்களையும் அளித்திருந்தார்.
பரபரப்பு தீர்ப்பு: இந்த வழக்கில் இறுதி விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில் தேனி எம்.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தீர்ப்பளித்துள்ளார். இதன்மூலம் அதிமுகவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு உறுப்பினர் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு பற்றி இந்த வழக்கின் விசாரணையில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அருண் கூறுகையில், "தேர்தல் பிரமாண பத்திரம் என்பது 2004 முதல் அமலில் உள்ளது. ஒரு வேட்பாளர் தனது மற்றும் தன்னைச் சார்ந்துள்ள குடும்பத்தினரின் சொத்து, அசையும் மற்றும் அசையா சொத்துகள் வங்கிக் கணக்குகள், கடன்கள் ஆகியவற்றை முறையாகவும் முழுமையாகவும் தாக்கல் செய்யவேண்டும் என்று சட்டம் உள்ளது. அப்படி ஏதேனும் சொத்துகளை மறைத்தால், அது வாக்காளர்கள் அனைவரையும் ஏமாற்றுவது என்று பொருள்படும்.
அதிமுக...தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
— RAMJI (@RAMJIupdates) July 6, 2023
ஓ பி ரவீந்திரநாத் குமார் தேர்தல் வெற்றி செல்லாது...
சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ...
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அருண் பேட்டி pic.twitter.com/yPpcvX7QUP
மூத்த வழக்கறிஞர் விளக்கம்: அதன்படி ரவீந்திரநாத் பொறுப்பு வகித்த நிறுவனத்தின் பங்குகளையும், தான் நிர்வகித்து வந்த நிறுவனத்தில் 45 லட்சம் அளவிற்கு பெற்ற சம்பளத்தையும், அவரது தம்பிக்கு கொடுக்க வேண்டிய ரூ.66 லட்சம் கடனையும், தான் பெற்ற வீட்டு கடனையும், சொத்துகளை அடமானம் வைத்து வாங்கிய கடனையும் தேர்தல் பிரமாண பத்திரத்தில் காட்டாமல் மறைத்துள்ளார். இதில் ஒன்றிரண்டை குறிப்பிட்டு தங்க தமிழ்ச்செல்வன் எழுத்துப்பூர்வமாக மனு தாக்கல் செய்தார்.
ஒரு மனு வந்தால் அதை விசாரித்து முடிவெடுத்துத்தான் மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டுமா, இல்லையா என்பதைச் சொல்ல வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் அதிகார துஷ்பிரயோகமாக, தேர்தல் அதிகாரி அவரது வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டார். இதனை எதிர்த்து தேனி தொகுதி வாக்காளர் மிலானி தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.
ஆதாரங்கள்: ஓபி ரவீந்திரநாத் பங்கு வகிக்கும் நிறுவனத்தின் ஆவணங்கள், வருமான வரி பேலன்ஸ் ஷீட்டுகள், சம்பளம் பெற்றதற்கான விவரங்கள் என அரசு காப்பகங்களில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் வழக்கை தாக்கல் செய்தோம். தங்க தமிழ்ச்செல்வன் நேரில் வந்து முக்கிய சாட்சியம் அளித்தார்.
அதிகாரியே பயத்தில்: தேர்தல் நடத்தும் அதிகாரி, நீதிமன்றத்திலேயே தான் இந்த வேட்பு மனுவை சரியாகப் பரிசீலிக்கவில்லை என்பதை பயத்தில் ஒப்புக்கொண்டார். மேலும், ரவீந்திரநாத் தவறாக வேட்பு மனுவில் குறிப்பிட்டதற்கான ஆவணங்களையும் தேர்தல் அதிகாரியே தாக்கல் செய்தார். ஓபி ரவீந்திரநாத்திடம் கிட்டத்தட்ட 6 நாட்கள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டதில், அவர் மீதான தவறு நிரூபிக்கப்பட்டு, அவரது வெற்றி செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக 3 ஆண்டுகள் ஒழுங்காக விசாரணை நடக்கவில்லை. பின்னர் தலைமை நீதிபதியிடம் முறையிட்டு சிறப்பு வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு கடந்த ஓராண்டாக தொடர்ந்து வழக்கு நடைபெற்று வந்தது. ரவீந்திரநாத் உச்ச நீதிமன்றம் சென்று இடைக்கால தடை வாங்க முயற்சித்தும் அவரது 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பதையும் நீதிமன்றம் அறியும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications