திமுக கோட்டையில் ஓட்டை போடும் விஜய்.. டெல்லிக்கு அடித்த அதிர்ஷ்ட ஜாக்பாட்! கொண்டாட்டத்தில் NDA?
சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று அளித்த பேட்டி, தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளது. குறிப்பாக, நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு சாதகமாக அமையும் என்ற அவரது கணிப்பு, தேர்தலை நோக்கிச் செல்லும் அரசியலில் கவனிக்கத் தக்கதாக பார்க்கப்படுகிறது..
விஜயின் அரசியல் நுழைவு குறித்து தற்போது தமிழக அரசியலில் இரண்டு விதமான பார்வைகள் நிலவி வருகின்றன..ஒன்று, விஜயின் வருகை திமுகவின் வாக்கு வங்கியை நேரடியாக பாதிக்கும் என்ற கருத்து..மற்றொன்று, அவரது அரசியல் செயல்பாடு அதிமுகவின் வாக்குகளை அதிகம் சிதைத்து, திமுகவுக்கு மறைமுக லாபமாக அமையும் என்ற பார்வை..இந்த இரண்டில், முதல் கருத்தையே தினகரன் உறுதியாக முன்வைக்கிறார்..

தவெக விஜய்
தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் உருவாக்கியவர் தவெக தலைவர் விஜய் என்பதில் சந்தேகம் இல்லை..விஜயின் அரசியல் வருகை திமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியை, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களை பெருமளவில் ஈர்த்து விலக்கிவிடும் என்றும், அது இறுதியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக முடியும் என்றும் தினகரன் வலியுறுத்துகிறார்..
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக தனித்து போட்டியிட்டதால் வாக்குகள் சிதறி, அந்த நிலை திமுகவுக்கு சாதகமாக அமைந்தது..ஆனால், இம்முறை தேசிய ஜனநாயக கூட்டணியில் பலமான கட்சிகள் ஒன்றிணைந்து களம் காணும் சூழலில், அந்த மாதிரியான வாக்கு சிதறல் திமுகவுக்கு கிடைக்காது என்பது தினகரனின் வாதமாக உள்ளது..
இதனுடன், விஜய் போன்ற புதிய அரசியல் சக்தி நுழையும் போது, அந்த சிதறல் ஆளுங்கட்சியையே அதிகம் பாதிக்கும் என்றும் அவர் கணிக்கிறார்..
வாரிசு அரசியல்
தமிழக ஆட்சியை ஒரே குடும்பம் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும், வாரிசு அரசியலுக்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் தினகரன் குற்றம் சாட்டுகிறார்..
இத்தகைய குற்றச்சாட்டுகள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ள நிலையில், விஜய் அரசியல் பேசும் போது ஊழல் எதிர்ப்பு, வாரிசு அரசியல் எதிர்ப்பு போன்ற கோட்பாடுகளை முன்னிறுத்தினால், அது நேரடியாக திமுகவின் வாக்கு வங்கியை தாக்கும் என்பதே அவரது கணிப்பு..
பொதுவாக, தமிழகத்தில் ஒரு புதிய கட்சி உருவானால், அது பாரம்பரியமாக திராவிட கட்சிகளின் வாக்குகளை குறிவைக்கும் என்பதே அரசியல் அனுபவம்.. விஜயின் ரசிகர் மன்றங்களும், இளைஞர் ஆதரவும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்பிலும் பரவியிருந்தாலும், தற்போதைய ஆளுங்கட்சி மீது இருக்கும் அதிருப்தி வாக்குகள் சிதறும் போது, அதனால் அதிகம் பாதிக்கப்படுவது திமுகவாகத்தான் இருக்கும் என தினகரன் நம்புகிறார்..இந்த சூழல், தானாகவே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமான அரசியல் தருணத்தை உருவாக்கும் என்பதே அவரது "லாஜிக்"..
அதிமுக வாக்குகள் பிரியுமா?
இதற்கு மாறாக, சில அரசியல் விமர்சகர்கள் விஜயின் அரசியல் வருகை அதிமுகவின் வாக்குகளை அதிகம் பிரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், அதன் பயன் திமுகவுக்கே செல்லும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..ஆனால், இந்த கருத்தியலை தினகரன் முற்றிலும் நிராகரிக்கிறார்..ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக மீதுதான் எதிர்ப்பு அதிகம் குவிந்துள்ளதாகவும், அந்த எதிர்ப்பு வாக்குகளை விஜய் தன் பக்கம் திருப்பினால், அது திமுகவின் வெற்றி வாய்ப்பை குறைக்கும் என்பதையே அவர் அடித்து சொல்கிறார்..
மேலும், திமுக கூட்டணி வலுவானது என்ற கருத்தையும் தினகரன் விமர்சிக்கிறார். .கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்ட தலைவர்களின் கருத்துகளை மேற்கோள் காட்டி, கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு, கொள்கை முரண்பாடு போன்ற பிரச்சினைகள் இன்னும் தீராத நிலையில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.. இந்த நிலையில், விஜயின் அரசியல் வருகை திமுக கூட்டணிக்கு கூடுதல் பலம் அளிப்பதை விட, ஒரு தற்காப்பு நிலையை மட்டுமே உருவாக்கியுள்ளதாகவும் தினகரன் பார்வை தெரிவிக்கிறது..
திமுக ஓட்டு வங்கி சிதறுமா?
ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக மீது உருவாகியுள்ள அதிருப்தி வாக்குகளை விஜய் தன் பக்கம் திருப்பும் வாய்ப்பு உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அந்த வாக்குகள் முழுமையாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கே தானாக நகரும் என்று கருதுவது அரசியல் யதார்த்தத்தை எளிமைப்படுத்தி அணுகுவதுபோல் தெரிகிறது..
விஜய் ஒரு தனித்த அரசியல் சக்தியாக தன்னை நிலைநிறுத்த முயற்சிக்கும் போது, அவரது வாக்குகள் ஒரு கட்டத்தில் மூன்றாவது திசையில் செல்லக்கூடிய அபாயமும் உள்ளது.... தெளிவான கொள்கை அடையாளம், வலுவான கள அமைப்பு, நீண்டகால அரசியல் திட்டம் ஆகியவை உருவாகாத பட்சத்தில், விஜயின் அரசியல் ஒரு பக்கம் திமுகவுக்கு முழு பாதிப்பாகவும், மறுபக்கம் தேஜகூட்டணிக்கு முழு லாபமாகவும் மாறாமல், அனைத்து தரப்புகளுக்கும் குழப்பத்தை உருவாக்கும் காரணியாக மாறக்கூடும்..
இந்த கோணத்தில் பார்க்கும்போது, தினகரனின் கணிப்பு ஒரு அரசியல் சாத்தியக்கூறு மட்டுமே.. அது உறுதியான முடிவு அல்ல..மொத்தத்தில், விஜயின் அரசியல் நுழைவு தமிழக அரசியலில் புதிய சமன்பாடுகளை உருவாக்கும் என்பது உறுதி.. ஆனால், அந்த சமன்பாடுகள் திமுகவுக்கு மட்டும் எதிரானதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மட்டும் சாதகமாகவும் அமையும் என்று இப்போதே முடிவு கட்டுவது அவசரமானதாக இருக்கலாம்..
தேர்தல் நெருங்கும் போது விஜய் எடுக்கும் அரசியல் நிலைப்பாடு, அவர் பேசும் மொழி, கட்டமைக்கும் கூட்டணிகள் ஆகியவையே இந்த கணிப்புகளின் உண்மையான வலிமையை நிர்ணயிக்கும்.. அதுவரை, விஜயின் வருகை ஒரு "கேம் சேஞ்சராக" மாறுமா அல்லது வாக்குகளை உடைக்கும் புதிய காரணியாக இருப்பாரா என்பது போகப் போகத்தான் தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications