உங்க வீட்ல கியூட்டான குட்டி பேபி இருக்கா.. குழந்தைக்கு ஆதார் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? ரொம்ப ஈசி
சென்னை: இந்தியாவில் தவிர்க்க முடியாத ஆவணமாக மாறி இருக்கும் ஆதார் அட்டையை குழந்தைகளுக்காக விண்ணப்பிக்க முடியுமா என்பது பலரது சந்தேகமாக உள்ளது. எப்படி விண்ணப்பிப்பது என்று பார்ப்போம்.
குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும் மற்றும் குடும்ப அட்டையில் குழந்தை பெயரை சேர்க்கவும் ஆதார் அட்டை அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதை எப்படி விண்ணப்பது என்று தெரியாமல் பலர் ஏஜெண்டுகளில் கொடுத்து சில நூறு, ஆயிரங்களை செலவு செய்கிறார்கள். ஆனால், இது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியம் இல்லை. எப்படி குழந்தைகளுக்கான ஆதாரை விண்ணப்பிப்பது என்று இனி பார்ப்போம்.

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் நகலை எடுத்துக்கொண்டு உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள ஆதார் பதிவு மையம் அல்லது தாலுகா அலுவலகத்திற்குச் செல்லுங்கள். அங்கு வழங்கப்படும் ஆதார் பதிவு படிவத்தைப் பூர்த்தி செய்திடுங்கள். 5 வயதிற்கு உட்பட்ட குழந்தையாக இருந்தால், நீங்கள் தாய் அல்லது தந்தையின் ஆதார் விபரங்களையும் அந்த படிவத்தில் கண்டிப்பாக நிரப்ப வேண்டும். பின்னர், ஆதார் பதிவு மையத்தில் உங்களது குழந்தையின் புகைப்படத்தை எடுப்பார்கள்.
இதனை அடுத்து குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் நகல் அல்லது மருத்துவமனையில் கொடுக்கப்பட்டு உள்ள விடுவிப்பு (டிஸ்சார்ஜ்) சான்றிதழை ஸ்கேன் செய்வார்கள். இந்த ஆதார் பதிவின்போது பெரியவர்களுக்கு எடுப்பது போன்று குழந்தைகளின் கைரேகைகள் மற்றும் விழித்திரையை ஸ்கேன் செய்ய மாட்டார்கள். அதற்கு மாற்றாகவே பெற்றோர்களில் தாய் அல்லது தந்தையின் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட் போன்ற சரியான அடையாள ஆவணத்தைக் காட்டி கைரேகை எடுத்துக்கொள்வார்கள்.
அதன் பின்னர் ஆதார் நிர்வாகி பதிவு எண் கொண்ட ஒப்புகை சீட்டு ஒன்றை உங்களிடம் வழங்குவார்கள். இப்படி புதிய ஆதார் விண்ணப்பிக்கும் பணி எளிதாக நிறைவு பெறும். இதனை தொடர்ந்து நீங்கள் ஆதாரின் அதிகாரப்பூர்வ UIDAI இணைய தளத்தில் இருந்து உங்களது குழந்தையின் ஆதார் அட்டையின் டிஜிட்டல் நகலை சில நாட்கள் கழித்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். அதேபோல் உங்கள் வீட்டு முகவரிக்கே புதிய ஆதார் அட்டையும் அஞ்சல் மூலமாக வந்துவிடும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications