குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000! எப்படி விண்ணப்பிக்கலாம்! ஆதார், ரேஷன் கார்டு இல்லைனா என்ன செய்யணும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் செப். மாதம் அமல்படுத்தப்படும் நிலையில், இதற்கான விண்ணப்பங்கள் எப்படிப் பெறப்படும் என்பது குறித்து முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு உதவும் வகையில் மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. திமுக ஆட்சி அமைந்தது முதலே இத்திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்பதே பலரது கேள்வியாக இருந்தது.

How to apply for magalir urimai thogai 1000 Cash Aid Ladies explains CM MK Stalin​

எதிர்க்கட்சிகளும் கூட இது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தது. இந்தச் சூழலில் தான் இந்தாண்டு பட்ஜெட்டில் மகளிருக்கு 1000 ரூபாய் என்பது வரும் செப். முதல் வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பைத் தமிழ்நாடு நிதியமைச்சர் வெளியிட்டார்.

ஸ்டாலின்: இது குறித்துத் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்தச் சூழலில் மாவட்ட கலெக்டர்கள் உடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகை திட்டம் வரும் செப். 15ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது என்றும் அப்போது முதல் மாதம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும், இதற்குக் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்திற்காகக் கடந்த பட்ஜெட்டில் 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே அந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "இன்று இத்திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்த வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஒவ்வொரு துறையின் பங்களிப்பு குறித்தும் மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்புகள் குறித்தும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய காலக்கெடுவுக்குள் இதற்கான அனைத்து பணிகளும் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் இத்தனை பெரிய திட்டம் கொண்டு வரப்படுவது இதுவே முதல்முறை. இதைச் சிறப்பாகச் செயல்படுத்த மாவட்ட தலைவர்களான ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்தத் திட்டம் அண்ணாவின் பிறந்த நாளான செப். 15ஆம் தேதி செயல்படுத்தப்படுகிறது. அதற்கு இன்னும் 2 மாதங்களே இருப்பதால் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு இந்தத் திட்டம் வெற்றி பெற உதவ வேண்டும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்: 1.5 கோடி விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். விண்ணப்பங்களைப் பெற ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கவும் உரியப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் சாலைகளில் குடியிருப்போர், பழங்குடியினர், தூய்மை பணியாளர்கள், ஆதரவற்றோர் இதில் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும்.

இவர்களிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை இல்லையென்றாலும் அதைப் பெறுவதற்கும் இந்தத் திட்டம் கிடைக்கவும் உதவி செய்ய வேண்டும். தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவில் இந்தத் திட்டத்தைக் கண்காணித்து ஒருங்கிணைக்க ஏற்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழு இதற்கான பணிகளைச் செய்யும். இதன் மூலம் மாநிலத்தில் இருக்கும் பெண்களின் நிதி நிலை மாறும்" என்று அவர் தெரிவித்தார்.

அதாவது மகளிருக்கான உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை ரேஷன் கடைகள் மூலம் பெறப்படும் என்பதை முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், தகுதியுள்ள பயனாளிகள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை இல்லை என்று விண்ணப்பித்தால் அதற்கு உரிய முக்கியத்துவம் தரவும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளனர்.

இத்திட்டத்திற்கு ரேஷன் கடைகள் ஒரு கணக்கெடுப்பாக எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் ரேஷன் கடைகளில் உள்ள விண்ணப்ப பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயணி மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+