தமிழக கூட்டுறவு வங்கிகளில் ஏராளமான வேலைகள் கொட்டிக்கிறது.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: தமிழக கூட்டுறவு வங்கிகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ஏராளமான வேலைகள் கொட்டிக்கிறது. விருப்பமும் தகுதியும் உள்ளோர் அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் எத்தனை வங்கிகள் இருந்தாலும் ஏழை மக்களின் முதல் தேர்வாக உள்ள வங்கி என்றால் அது கூட்டுறவு வங்கிகள் தான். இந்நிலையில் தமிழக கூட்டுறவு வங்கிகளில் 1478 உதவியாளர் மற்றும் கிளார்க் காலி பணியிடங்கள் உள்ளது. இவற்றுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன தகுதிகள் மற்றும் விவரங்கள் தேவை என்பதை இப்போது பார்த்துவிடுவோம்..

ஊதியம்
பணி : உதவியாளர், கிளார்க் (1478 )
ஊதியம்: மாதம் ரூ.11,900 - 32,450 ( பணிக்கு தகுந்தார் போல் ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்)
வயதுவரம்பு : 01.01.2001 தேதியின் கீழ் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டியது அவசியம். 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். (வயது தளர்வு சலுகை உள்ளது)

பட்டப்படிப்பு
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்பிடிப்பு முடித்து அத்துடன் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலை படிப்பின் போது தமிழ்மொழியை ஒரு பாடாமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு இருக்க வேண்டியதும் அவசியம்.

விண்ணப்பிக்க கட்டணம்
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப பதிவு மற்றும் எழுத்து தேர்வு கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அனைத்து பிரிவு சார்ந்த மாற்று திறானாளிகள், ஆதரவற்ற விதவைகள் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் எஸ்.பி.ஐ இணையதளத்தில் உள்ள SBI Collect என்ற சேவையை பயன்படுத்தி செலுத்தலாம்.

நேர்முகத்தேர்வு
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்கும் முறை: அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், தங்கள் மாவட்ட அரசு இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஒவ்வொரு மாவட்டமும் ஒரு தேதியை கடைசி தேதியாக அறிவித்து உள்ளன.

மாறுபடும் தேதிகள்
சென்னை கூட்டுறவு வங்ககளில் விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 25ம் தேதி கடைசி நாளாகும். இதேபோல் மதுரை கூட்டுறவு வங்கிக்கு விண்ணப்பிக்க வரும் 16ம் தேதி கடைசி நாளாகும். பெரம்பலூர், தஞ்சாவூர், கடலூர் போன் மாவட்டங்களில் விண்ணப்பிக்க செப்டம்பர் 16ம் தேதி கடைசி நாளாகும்.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications