உங்க வங்கி கணக்கிற்கே வரும் ரூ.50000.. அதுவும் ஒரே கிளிக்கில்.. மத்திய அரசு சர்ப்ரைஸ்! நோட் பண்ணுங்க
சென்னை: ஏப்ரல் 1 முதல் புதிய நிதியாண்டு தொடங்கிய நிலையில், மே 1 முதல் புதிய நிதி ஆண்டிற்கான மாற்றங்கள் அமலுக்கு வர தொடங்கி உள்ளன. அதாவது ஏப்ரல் 1ல் வெளியான அறிவிப்புகள் பொதுவாக மே மாதத்தில்தான் அமலுக்கு வரும். அந்த வகையில் ஏப்ரல் மாதத்தோடு 20 ஆண்டுகள் EPFO பங்களிப்பை அளித்த ஊழியர்களுக்கு இந்த மே மாதம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அல்லது EPFO இந்தியாவில் உள்ள ஊழியர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் சந்தாதாரர்கள் அறியாத சில EPFO விதிகள் உள்ளன.
5000 தரும் திட்டம்
இந்த விதிகளில் ஒன்றுதான் 50 ஆயிரம் பலன் தரும் திட்டம். இந்த விதி மூலம் ஒரு ஊழியர் ரூ.50,000 வரை நேரடி பலன் பெறுகிறார், ஆனால் ஒரு நிபந்தனை உள்ளது. இந்த திட்டம் என்ன மற்றும் நிபந்தனை என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
இதன்படி ஒருவர் ஒரே பிஎப் கணக்கில் 20 வருடம் பங்களிப்பு செய்தால் அவர்களுக்கு 50 ஆயிரம் கூடுதலாக கிடைக்கும். அனைத்து PF கணக்கு வைத்திருப்பவர்களும் அவர்கள் வேலை மாறிய பிறகும் அதே EPF கணக்கில் தொடர்ந்து பங்களிக்க வேண்டும். அப்படி தொடர்ந்து 20 வருடங்கள் ஒரே கணக்கில் பங்களித்த பிறகு, லாயல்டி-கம்-லைஃப் பலன்களைப் பெற முடியும்.
20 ஆண்டுகளாக தங்கள் EPF கணக்கில் தொடர்ந்து பங்களித்து வரும் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு லாயல்டி-கம்-லைஃப் நன்மை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது, 20 ஆண்டுகளாக வழக்கமான பங்களிப்புகளைச் செய்த சந்தாதாரர்கள் ரூ. 50,000 கூடுதல் பலனைப் பெறுவார்கள்.

லாயல்டி-கம்-லைஃப் நன்மையின் கீழ், ரூ.5,000 வரை அடிப்படைச் சம்பளம் உள்ளவர்கள் ரூ.30,000 பலனைப் பெறுகிறார்கள். அடிப்படை சம்பளம் ரூ.5,001 முதல் ரூ.10,000 வரை உள்ளவர்களுக்கு ரூ.40,000 பலன் கிடைக்கும், மேலும் அடிப்படை சம்பளம் ரூ.10,000க்கு மேல் இருந்தால், ரூ50000 பெறுவார்கள்.
EPFO சந்தாதாரர்கள் இந்த நன்மையைப் பெறுவதற்கான சிறந்த வழி, வேலைகளை மாற்றும் போது அதே EPF கணக்கைத் தொடர்வதுதான். இதற்கு, உங்களின் பழைய நிறுவனம் மற்றும் தற்போது பணிபுரியும் நிறுவனத்திடம் தகவல் கொடுக்க வேண்டும். அதன்பின் உங்கள் UAN நம்பரை மேப் செய்ய வேண்டும்.
EPFO 3.0 மே அல்லது ஜூன் 2025க்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய மாற்றம் அமலுக்கு வந்த பின் ஏடிஎம் வழியாக EPFO நிதி திரும்பப் பெறுதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல எளிமையான சேவைகளைக் இந்த முறை மூலம் கொண்டு வருவோம் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இனி EPFOவில் உள்ள பி.எஃப் பணத்தை எளிதாக ஏடிஎம் மூலம் எடுக்க முடியும். தற்போது உள்ள கடினமான முறையை பயன்படுத்த வேண்டியது இல்லை. இதற்கு பதிலாக எளிதாக ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முடியும். PAN 2.0 அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களில் மத்திய அரசு இப்போது EPFO 3.0 திட்டத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. தற்போது பிஎப் பணம் எடுப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். இது மாற்றப்பட உள்ளது. அதன்படி சந்தாதாரர்கள் நேரடியாக ஏடிஎம்கள் மூலம் பிஎஃப் தொகையை பெறும் வகையில் திட்டத்தை மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
எப்படி எடுப்பது?
ஏஎம்கள் மூலம் பிஎஃப் எடுப்பதற்கு வசதியாக கார்டுகளை வழங்கும் பணியிலும் தொழிலாளர் அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசதி மே-ஜூன் 2025க்குள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது EPFO சந்தாதாரர்களுக்கு மேலும் வசதியை அளிக்கும். அந்த கார்டுகளை ஏடிஎம் கார்டுகள் போல பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். அந்த கார்டுகள் உங்கள் போன் மற்றும் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டு இருக்கும்.
விகிதம் மாற்றம்
பல லட்சம் சந்தாதாரர்களுக்கு இருக்கும் புகார்களை சரி செய்யும் விதமாக இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட உள்ளதாம். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்பு தற்போது 12 சதவீத வரம்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த வரம்பு தற்போது நீக்கப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தனிப்பட்ட வகையில் சொந்தமாக சேமிப்பு பழக்கங்கள் இருக்கும். அந்த பழக்கங்களை அடிப்படையாக வைத்து வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்பு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்பு உயர்திக்கொள்ளலாம். 12%தான் தர வேண்டும் என்று இல்லை. தற்போது 1800 ரூபாய் கொடுப்பவர்கள் தேவைப்பட்டால் கூடுதலாக கொடுக்கலாம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications