கார்டு மேலே 16 நம்பர்லாம் பழசு! டிஜிட்டல் அரெஸ்ட்டுக்கு அப்டேட்டான மோசடி கும்பல்! தப்பிப்பது எப்படி?
சென்னை: கடந்த சில நாட்களாக முதியவர்கள், தொழிலதிபர்கள் இறக்குமதியாளர்களை குறி வைத்து டிஜிட்டல் அரெஸ்ட் எனும் புதிய மோசடியை சைபர் கிரைம் கொள்ளையர்கள் அரங்கேற்றி வருகின்றனர். இந்த நிலையில் டிஜிட்டல் கைது மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
கார்டு மேலே 16 நம்பர் சொல்லு சார், பேஸ்புக்கில் போலி கணக்கு, அமெரிக்காவிலிருந்து கிப்ட் வந்திருக்கிறது என வகை வகையாக, டிசைன் டிசைனாக ஆன்லைன் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் பொதுமக்கள் ஈசியாக கண்டுபிடித்து விட்ட நிலையில், தற்போது அடுத்த அப்டேட்டுக்கு சென்று இருக்கிறார்கள் இணைய வழி திருடர்கள்.

அப்படி லேட்டஸ்டாக வந்திருப்பது தான் டிஜிட்டல் அரெஸ்ட். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வயதானவர்கள், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள நபர்கள், பெண்கள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்களை குறி வைத்து அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து வரும் அழைப்புகளின் மூலம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி நடைபெற்று வருகிறது.
சட்ட விரோத பரிமாற்றம் தங்கள் வங்கி கணக்கில் நடைபெற்றிருக்கிறது, வெளிநாட்டிலிருந்து வந்த பார்சலில் போதை பொருட்கள் இருக்கிறது என கூறி ஸ்கைப் வீடியோ காலில் காவல்துறை உடை அணிந்து சிலர் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வருகின்றனர் சைபர் கிரைம் கொள்ளையர்கள். உங்களை கைது செய்ய தற்போது உடனடியாக அதிகாரிகள் வருவார்கள், இணைப்பை அவருக்கு பார்வர்ட் செய்கிறேன் என பதத்தோடு பேசுவது, உச்ச நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து இருக்கிறது, ரிசர்வ் வங்கி உங்கள் வங்கி கணக்கை முடக்கி இருக்கிறது என ஏதாவது ஒரு மத்திய அரசு துறையின் பெயரை சொல்லி மிரட்டுவார்கள்.
எதிர்முனையில் இருப்பவர்கள் பதட்டத்தில் சிக்குவது தெரிந்து விட்டால், ஆயிரம் ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாய் வரை அவர்கள் பணத்தை சுருட்டி விடுவார்கள். இதுவரை சுமார் 130 கோடி ரூபாய் இதுவரை மோசடியாக இழந்து இருப்பதாக கூறப்படுகிறது. காவல்துறை கைது செய்யாமல் வாரண்ட் பிறப்பிக்காமல் வெறும் இணையதளம் வாயிலாகவே மனதளவில் அவர்களை பயமுறுத்தி பணம் பறிப்பது தான் இந்த டிஜிட்டல் கைது கும்பலின் முக்கிய வழி.. சரி இது போன்ற மோசடிகளில் இருந்து எப்படித்தான் தப்பிப்பது என்பது குறித்து பார்ப்போம்..
*எந்த ஒரு சம்பவத்திலும் சூழ்நிலையிலும் நீங்கள் உங்களது தனிப்பட்ட வங்கி கணக்கு விவரங்களை யாருக்கும் கொடுக்கக் கூடாது. குறிப்பாக ஓடிபி உள்ளிட்டவற்றை ஷேர் செய்யவே கூடாது.
*மேலும் தெரியாத எண்களில் இருந்து வரும் பேஸ்புக், வாட்ஸாப் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம்.
*உங்களுக்கு பார்சல் வந்திருக்கிறது அதில் போதை பொருட்கள், விலை உயர்ந்த பொருட்கள் வந்திருக்கிறது என்றால் அது நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என சொல்லி விடுங்கள்.
* யூபிஐ மூலம் உங்களுக்கு தவறுதலாக பணம் வந்து விட்டது அதை திரும்ப அனுப்புங்கள் என்றாலும் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அது குறித்து வங்கி தரப்பில் மட்டுமே பதில் அளிக்க வேண்டும்.
*ஐவிஆர் எனப்படும் ஏற்கனவே ரெக்கார்ட் செய்யப்பட்ட கால்களில் எண் ஒன்றை அழுத்தவும் என்பது போன்ற அறிவிப்புகள் வந்தால் அதனை புறக்கணித்து விடுங்கள்.
*உங்கள் தொலைபேசி எண், இமெயில் முகவரிக்கு வரும் தேவையற்ற லிங்குகளை நிச்சயம் கிளிக் செய்ய வேண்டாம்.
*மோசடி செய்யப்பட்டதாக உணர்ந்தால் உடனடியாக சைபர் கிரைம் காவல்துறையின் சிறப்பு எண்ணான ஒன்று ஒன்பது மூன்று பூஜ்ஜியம் என்ற எண்ணுக்கு அழைக்க வேண்டும்.
விழிப்புணர்வு மட்டுமே மோசடியாளர்களிடம் இருந்து உங்களை காத்துக் கொள்ள உதவும். எனவே எந்த காலத்திலும் விழிப்புணர்வாக இருப்பது மட்டுமே இது போன்ற இணையவழி மோசடிகளில் இருந்து நாம் தப்ப உதவும் என்பதை எப்போதும் மறக்காதீர்கள்..
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications